ஹெல்த் செக்கப் குறித்து கேட்ட கமல்.. ரமேஷால் உடைந்த குட்டு.. போட்டுக்கொடுத்த அர்ச்சனா!
சென்னை: பிக்பாஸ் வீட்டில் நடந்த ஹெல்த் செக்கப் டாஸ்க் குறித்து கலாய்யாய் ஹவுஸ்மேட்ஸ்களிடம் விசாரித்தார் கமல்.
பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கி 60 நாட்கள் கடந்துள்ள நிலையில் போட்டியாளர்கள் என்ன செய்திருக்கிறார்கள் என்று அவர்களை அழைத்து ரகசியமாக கேட்டார் பிக்பாஸ்.
இந்த டாஸ்க் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கியது. இதில் ஜித்தன் ரமேஷ், ஆஜித், சோம், கேபி, ஷிவானி, ரம்யா பாண்டியன், நிஷா ஆகியோர் பங்கேற்றனர்.

அதெல்லாம் ரூல்ஸ்
அவர்கள் பிக்பாஸ் கேட்ட கேள்வி புரியாமல் தங்களுக்கு தோன்றியதை கூறினார். அனால் பிக்பாஸோ, நான் கேட்டது வேறு நீங்கள் சொல்வது வேறு. அதெல்லாம் ரூல்ஸ். அதை பேசக்கூடாது அப்படி இப்படி என வறுத்தெடுத்துவிட்டார்.

அனிதா அசால்ட்
ஆனால் சனிக்கிழமை காட்டப்பட்ட காட்சிகளில் பேசிய அனிதாவை எதுவும் சொல்ல வில்லை பிக்பாஸ். அனிதா பேசியது வரை கேட்டுவிட்டு போகலாம் என்று அனுப்பிவிட்டார். இதனிடையே யாரும் இந்த டாஸ்க் குறித்து வெளியில் சொல்லக் கூடாது என்று கூறியதால் அதனை ஜென்ரல் செக்கப், ஹெல்த் செக்கப் என கூறிக்கொண்டனர்.

ஹெல்த் செக்கப்
இந்நிலையில் நேற்றைய எபிசோடில் ஹவுஸ்மேட்ஸ்களை சந்தித்த கமல், அந்த டாஸ்க்கை சில பேர் ஹெல்த் செக்கப் போனீங்களே என்று கேட்டார். அப்போது பேசிய அர்ச்சனா, நிஷாவின் பர்ஃபாமன்ஸ் ஹெவியாய் இருந்ததால் கண்டுபிடிச்சுட்டோம் சார் என்றார்.

ரமேஷால் தெரிந்துவிட்டதா?
அப்போது பேசிய கமல் ஜித்தன் ரமேஷால் தெரிந்துவிட்டதா என கேட்டார். தொடர்ந்து பேசிய நிஷா அந்த ரகசியத்தை ரொம் அழகா காப்பாத்தினோம் சார். அதுக்காக நீங்கள் எங்களை பாராட்ட வேண்டும், ப்ளீஸ் சார் என்று கெஞ்சினார்.

கண்ணீர்விட்டு அழுத அர்ச்சனா
அதனைக் கேட்ட கமல், நான் உங்களுக்கு ஒரு ரகசியம் சொல்கிறேன், நிஷா நீங்கள் சேவ்டு என்றார். அதனைக்கேட்டு ஷாக்கானார் நிஷா. அதற்கு, சேவ்வானதால் சந்தோஷமா ஷாக்கா என்று கேட்டார் கமல். அதற்கு நிஷா பதில் சொல்வதற்குள் கண்ணீர்விட்டு அழுதார் அர்ச்சனா.

தொலைத்த பயம்
நிஷாவை கட்டியணைத்து முத்தம் கொடுத்து அர்ச்சனா அழுததை பார்த்த கமல், இதுல அர்ச்சனாவுக்கு உங்கள விட ரொம்ப சந்தோஷம் போல என கேட்க, ஆமாம் சார், நிஷாவ நாங்க தொலைச்சிட்டோமோன்னு ஒரு பயமே இருந்துச்சு சார். திருப்பியும் நிஷா எங்களுக்கு கிடைச்சிட்டா என்றார்.

நாங்களும் தேடிட்டு இருக்கோம்
இதனைக் கேட்ட கமல் நீங்களும் தேடிட்டு இருந்தீங்களா.. வெளியே இருந்தே நாங்க தேடிட்டு இருக்கோம் என நிஷாவை கிண்டலடித்தார். இதனைக் கேட்ட மொத்த ஹவுஸ்மேட்ஸும் சிரித்தனர். இதேபோல் ஆஜித் சேவ்வானதையும் அதிரடியாக அறிவித்தார் கமல்.


Click it and Unblock the Notifications











