தமிழகத்தில் நடைபெறும் இடைத்தேர்தலில் போட்டியிட மூட் இல்லை: கமல்
இடைத்தேர்தலில் போட்டியிடும் மன நிலையில் இல்லை என கமல் தெரிவித்துள்ளார்
Recommended Video

சென்னை: இடைத்தேர்தலில் போட்டியிடும் மனநிலையில் இல்லை என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
நடிகர் கமல்ஹாசன் இப்போது பிக்பாஸ் 2 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். விரைவில் இந்தியன் 2 திரைப்பட படப்பிடிப்பு துவங்க உள்ளது.

திருப்பரங்குன்றம் மற்றும் திருவாரூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர்களான ஏகே.போஸ், மு.கருணாநிதி மறைந்ததால் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது.
அத்தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தங்களின் பலத்தை நிரூபிக்க அதிமுக முழு வீச்சில் செயல்பட்டு வருகிறது. ஆர்.கே.நகரில் கோட்டைவிட்டது போல் இங்கே நடக்கக் கூடாது என முதல்வர் ஈபிஎஸ்,துணை முதல்வர் ஓபிஎஸ் உறுதியாக உள்ளனனர்.
மேலும் மு.க.ஸ்டாலின் திமுக தலைவரானதற்கு பிறகு நடக்கும் முதல் தேர்தல் என்பதால் திமுகவிற்கும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் இடைத்தேர்தலில் போட்டியிட்டு பலத்தை நிரூபிக்குமா என கேள்வி எழுந்தது. இது குறித்து நேற்று மதுரை விமான நிலையைத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கமல்ஹாசன், தமிழகத்தில் நடைபெறும் இடைத்தேர்தலில் போட்டியிடும் எண்ணம் இல்லை. ஆனால் ஆட்சியாளர்களுக்கு பாடம் புகட்டும் வேலையில் மக்கள் நீதிமன்றம் ஈடுபடும் என்று பதிலளித்தார்.


Click it and Unblock the Notifications











