போடா வாடான்னு தரம் குறைஞ்சுடுச்சு.. செங்கோலை கையிலெடுத்த கமல்.. இன்னைக்கு சம்பவம் இருக்கு!

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று கமல் பங்கேற்கும முதல் புரமோ வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சிகளில் வாரம் தோறும் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் தொகுப்பாளரான நடிகர் கமல்ஹாசன் போட்டியாளர்களை சந்திப்பது வழக்கம்.

கடந்த மூன்று சீசன்களை போலவே இந்த சீசனிலும் நடிகர் கமல்ஹாசன் வாரம் முழுக்க நடந்த நிகழ்வுகளை வார இறுதி நாட்களில் ஹவுஸ் மேட்ஸ்களை சந்தித்து விசாரித்து வருகிறார்.

அவ மரியாதை

அவ மரியாதை

இந்தவாரம் முழுக்க பிக்பாஸ் வீட்டில் ஏராளமான அதிர்ச்சிகர சம்பவங்கள் அரங்கேறின. குறிப்பாக ரியோ, சுரேஷ் சக்கரவர்த்தி வாயை திறந்தாலே அவரை அவமரியாதையாக பேசி வருகிறார். எந்த விஷயமாக இருந்தாலும் சுரேஷை கார்னர் செய்வதையே முதல் வேலையாக கொண்டிருக்கிறார் ரியோ.

நாடா இல்ல காடா

நாடா இல்ல காடா

கடந்த வாரம் கமல், ரியோவை விளாசி விட்டபோதும் அடங்காமல் அவரை டார்கெட் செய்து வருகிறார். இதனை தொடர்ந்து பிக்பாஸ் வீட்டில் நடைபெற்ற நாடா இல்ல காடா டாஸ்க்கின் போது சுரேஷ் கையில் வைத்திருந்த செங்கோலால் விளையாட்டாக தட்டப்போய் அது வினையானது.

மோசமாக பேசிய சனம்

மோசமாக பேசிய சனம்

தன்னுடைய பார்வையே போயிருக்கும் என தாம் தூம் என குதித்தார் சனம் ஷெட்டி. அதோடு போடா வாடா என்றும் அவரை ரொம்பவே தரக்குறைவாக பேசினார் சனம். சுரேஷ் சக்கரவர்த்தியை பலரும் தாத்தா என அழைத்து வர அவரது வயதுக்கு கூட மரியாதை கொடுக்காமல் மோசமாக பேசினார் சனம்.

கமல் விசாரிக்க வேண்டும்

கமல் விசாரிக்க வேண்டும்

இதற்கு சமூக வலைதளங்களில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. மரியாதைக்குறைவாக நடந்து கொண்ட சனம் ஷெட்டியை ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்ப வேண்டும் என கோரிக்கைகள் எழுந்தன. மேலும் இந்த வாரம் சனம் ஷெட்டியை கமல் இந்த விவகாரத்திற்காக வறுத்தெடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

செங்கோலுடன் தரிசனம்

செங்கோலுடன் தரிசனம்

இந்நிலையில் இன்று சனிக்கிழமை என்பதால் கமல் பங்கேற்கும் எபிசோடின் புரமோவுக்காக காத்திருந்தனர் ரசிகர்கள். எதிர்பார்த்தது போலவே புரமோவும் வெளியாகியுள்ளது. கையில் செங்கோலுடன் தரிசனம் கொடுத்துள்ளார் கமல்.

தரம் குறைஞ்சுடுச்சு

தரம் குறைஞ்சுடுச்சு

எடுத்த எடுப்பிலேயே சுரேஷ் சக்கரவர்த்தி பக்கம் திரும்பியுள்ளார். கொளுத்தி போடுறேன் கொளுத்தி போடுறேன்னு சொன்னவர் கையிலேயே வெடிச்சுருச்சு என கூறியுள்ளார். மேலும் சனத்தையும் ஒரு பார்வை பார்த்துள்ள கமல், போட்டியா இருக்க வேண்டியது போடா வாடான்னு தரம் குறைஞ்சுடுச்சுல்ல.. என தரக்குறைவாக பேசியதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

நம்ம கையில எடுக்கனும் போல

நம்ம கையில எடுக்கனும் போல

தொடர்ந்து தனது கையில் உள்ள செங்கோலை காட்டும் கமல், இது யார் கையில இருக்கனும்ங்றது ரொம்ப முக்கியம். இருக்குற நிலைமையை பார்த்தா நம்ம கையில எடுக்கனும் போல்ருக்கு என செங்கோலை கை மாத்தும் கமல், இன்று இரவு என மிரட்டலாக கூறியிருக்கிறார்.

தரமான சம்பவங்கள்

தரமான சம்பவங்கள்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய முதல் புரமோவை பார்த்த நெட்டிசன்கள், இன்று தரமான சம்பவங்கள் பலவற்றை எதிர்பார்க்கலாம் போலருக்கே என எதிர்பார்த்துள்ளனர். அதேநேரத்தில் சிலர் புரமோதான் ஆகா ஓகோவென இருக்கும் நிகழ்ச்சியில் ஒன்றும் இருக்காது என அலுப்பைக் காட்டியுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X