என்ன ரியோவே இப்படி சொல்லிட்டாரு.. ஒரு முடிவோடதான் இருக்காங்க போல.. கடைசியில் நொந்து போன நிஷா!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான முதல் புரமோ வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் டபுள் எவிக்ஷன் என்று அறிவித்தார் நடிகர் கமல்ஹாசன். அதன்படி முதல் எவிக்ஷன் சனிக்கிழமையான நேற்றே நடைபெறும் என்றும் கூறினார்.
Recommended Video

சொன்னது போலவே முதல் எவிக்ஷனாக ஜித்தன் ரமேஷ் வெளியேற்றப்பட்டார். இந்நிலையில் ஞாயிற்றுக் கிழமையான இன்றைய எபிசோடுக்கான முதல் புராமோ வெளியாகியுள்ளது.

நெற்றியை சொரியும் கமல்
அதில் பேசும் கமல் நாமினேஷனுக்கு முதலில் வருவோம் என்று நெற்றியை சொரிகிறார். தொடர்ந்து பேசும் கமல் எதை முதலில் சொல்வது என்று யோசித்து கொண்டிருக்கிறேன். காப்பாற்றுவதையா அல்லது வெளியேறுவதையா என்று கூறுகிறார்.

ரியோ பதில்
மேலும் சரி குயிக்கா யார் சேவாகணும்னு நினைக்கறீங்க என்கிறார் கமல். அதற்கு முதல் நபராக வாயை திறக்கும் ரியோ, பட்டென ஷிவானி என்கிறார். நிஷா நாமினேஷனில் இருக்கும் போது ஷிவானி காப்பாற்றப்பட வேண்டும் என்று கூறி குரூப்பிசம் இல்லை என்று காட்ட முயற்சிக்கிறார் ரியோ.

நிஷா போகணும்
பாலாஜியும் ஷிவானி காப்பாற்றப்பட வேண்டும் என்று கூறுகிறார். நிஷா பெயரை கூறும் கேபி, அவர் போக வேண்டும் என்றும் கூறுகிறார். அனிதா மட்டுமே அக்கா இருக்க வேண்டும் என்றும் கூறுகிறார்.

செக் பண்ணிக்கிறீங்களா?
தொடர்ந்து ஆடியன்ஸை பார்க்கும் கமல், எவிக்ஷன் கார்டையும் பார்த்துவிட்டு, இதயத் துடிப்பை செக் பண்ணிக்கிறீங்களா என்று ஹவுஸ்மேட்ஸை கேட்கிறார். இப்படியாக உள்ளது முதல் புரமோ.

நிஷா வெளியேற்றம்
தம்பி தான் ஜெயிக்க வேண்டும் என்று வார்த்தைக்கு வார்த்தை கூறி வந்த நிஷாவுக்கு ரியோ, தான் இருக்க வேண்டும் என்று சொல்லாதது பெரும் ஏமாற்றத்தை கொடுத்திருக்கும். ஏற்கனவே நிஷாதான் வெளியேற்றுப்பட்டார் என்ற தகவல் நேற்று முதல் தீயாய் பரவி வருவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











