நாடி பட படக்க காத்துக் கொண்டிருக்கிறார்கள்..செம சூடா இருக்கு.. உசுப்பேத்தும் கமல்..இரண்டாவது ப்ரோமோ!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய இரண்டாவது ப்ரோமோவில் பேசும் கமல் ஃபைனலிஸ்ட்டுகளை உசுப்பேற்றியுள்ளார்.
பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியின் ஃபினாலே இன்று மாலை நடைபெறுகிறது. இதில் யார் பிக்பாஸ் டைட்டிலை தட்டி செல்ல போகிறார்கள் என்பது தெரிந்துவிடும்.
ஃபினாலே நிகழ்ச்சி போட்டியாளர்களின் கலை நிகழ்ச்சிகளுடன் ஒளிபரப்பப்படவுள்ளது. வின்னர் ஆரிதான் என்ற நம்பிக்கையில் உள்ளனர் ரசிகர்கள்.

ஆரிதான் டாப்
ஏற்கனவே ஆரி 23 கோடி வாக்குகள் பெற்றிருப்பதாகவும் அவருக்கு அடுத்தப்படியாக உள்ள போட்டியாளர் நான்கரை கோடி வாக்குகள் பெற்றுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

நாடி படபடக்க..
இந்நிலையில் இன்றைய ஃபினாலே நிகழ்ச்சிக்கான இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. இதில் பேசும் கமல், உள்ளே இருக்கும் 5 ஃபைனலிஸ்ட்டுகளை பார்த்து 5 வெற்றியாளர்கள் நாடி படபடக்க காத்து கொண்டிருக்கிறார்கள்.

கையை உதறும் கமல்
இதில் ஒரு வெற்றியாளர் யார்? என்பதை என்று கேட்டப்படியே தனது கோட்டின் ஒரு பக்கத்தில் கையை வைக்கிறார். பின்னர் , சுடுவது போல் ஊஃப் என கையை உதறுகிறார். தொடர்ந்து அவ்ளோ சுடுது என்று கையை ஊதிக்கொள்கிறார்.

நடன நிகழ்ச்சிகள்
மேலும் உங்களை இன்னும் படபடக்க வைத்து சொல்வதில் ஒரு சுவாரசியம் இருக்கத்தான் செய்கிறது. செய்யாமல் இருக்க முடியாது என்று கூறுகிறார். இடையில் அர்ச்சனா மற்றும் சம்யுக்தாவின் நடன நிகழ்ச்சிகளும் காட்டப்படுகின்றன.

ஆரிதான் வின்னர்
இதனை பார்த்த ரசிகர்கள் இன்று போடப்படும் ப்ரோமோக்களே கடைசி என கூறி வருகின்றனர். இன்னும் சில நெட்டிசன்கள், ஆரிதான் வின்னர் என்று எங்களுக்கு தெரியும், நேர்மைக்கு என்றுமே மக்கள் பெரும் ஆதரவு கொடுப்பார்கள் என்று தங்களின் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











