நிஷ்டையில் இருந்து ஷிவானியை எழுப்பிய கமல்.. அர்ச்சனா பண்ணது ஹர்ட் ஆச்சு என சொல்லி சிக்கிட்டார்!

சென்னை: பாலா, அர்ச்சனா குரூப்பை பார்த்து குரூபிசம், குரூபிசம் என பேசும் போது, சத்தமே காட்டாமல் இருக்கும் இடம் தெரியாமல் இருந்து கொண்டிருந்த ஷிவானியை கமல் எழுப்பினார்.

Recommended Video

பெண்களை மட்டும் Target செய்யும் Aari ? | Filmibeat Tamil

உங்களுக்கு இதில் ஏதும் கருத்து இல்லையா என கமல் கேட்டதும், உட்கார்ந்தபடியே தூங்கிட்டு இருந்த ஷிவானி, முழித்துக் கொண்டு பேச ஆரம்பித்தார்.

நிஷ்டையில் இருந்து எழுந்த மாதிரி இருக்கீங்களே என கமல் கிண்டல் அடித்தது செம!

நம்ம பக்கம் திரும்புமே

நம்ம பக்கம் திரும்புமே

பயில்வான் பாலா வேற ஓவரா.. குரூபிசம் பத்தி பேசுறானே, அதே கத்தி கடைசியில நம்ம பக்கமும் திரும்புமே என பயத்தில் ஷிவானி, எந்த விசயத்திலும் கலந்து கொள்ளாமல் சத்தம் காட்டாமல் இருக்கும் இடமே தெரியாமல் அமைதியாக இருந்தார். ஆனால், கமல் சும்மா விடுவாரா?

ஷிவானியை எழுப்பிய கமல்

ஷிவானியை எழுப்பிய கமல்

நல்லா உட்கார்ந்து கொண்டு தூங்கிக் கொண்டே டைட்டில் வின்னராகும் கனவை கண்டு கொண்டிருந்த ஷிவானியை சட்டென கமல், உங்க கருத்து ஏதும் இல்லையா ஷிவானி என தட்டி எழுப்பினார். இருக்கு என பதட்டத்தோடு ஆரம்பித்த ஷிவானியை பார்த்து, என்ன நிஷ்டையில் இருந்து எந்திரிச்ச மாதிரி இருக்கீங்களே என கலாய்த்தார்.

அர்ச்சனா மீது பழி

அர்ச்சனா மீது பழி

சம்பந்தமே இல்லாமல், அர்ச்சனா அக்கா நான், பாலா, சம்யுக்தா தான் Sure shot winner என நக்கலாக சொன்னார்கள். அது எனக்கு ரொம்ப ஹர்ட் ஆச்சு என்று அர்ச்சனா மீது பழியை போட ஆரம்பித்தார். உடனே உஷாரான அர்ச்சனா, தான் நக்கலாக எல்லாம் சொல்லவில்லை. அப்படி சொல்லி இருந்தால், சம்யுக்தா ஏன் அதை கேட்டு அப்படி ஆட வேண்டும் என்றார்.

சம்யுக்தாவுக்கு நான் கொடுத்தேனே

சம்யுக்தாவுக்கு நான் கொடுத்தேனே

மேலும், சம்யுக்தாவை ஸ்ட்ராங் போட்டியாளரா என கேட்டதற்கு நான் கை தூக்கினேன். சம்யுக்தாவுக்கு கிளவ் கொடுத்தேன். நக்கலடிக்க வேண்டும் என நினைத்து இருந்தால், சம்யுக்தாவுக்கு நான் ஏன் சார் கொடுக்கப் போகிறேன் என்றார் அர்ச்சனா. பேசத் தெரியாமல் பேசி மாட்டிக் கொண்டோமே என ஷிவானியும் அப்படியே ஆஃப் ஆனார்.

நக்கல இறக்கவே இல்லை

நக்கல இறக்கவே இல்லை

Sure shot finalist என்கிற வார்த்தையை ஷிவானி சொன்னாரா என்று தெரியவில்லை. பேசியதை எல்லாம் அப்படியே நினைவில் வைத்துக் கொண்டு பேச நான் ஒன்றும் சிடி சிஸ்டம் இல்லை என சொன்ன அர்ச்சனா, பாலா, ஷிவானி, சம்யுக்தா, ரம்யா 4 பேரும் Sure shot finalist என சொல்லும் போது சம்யுக்தா ஷஃபல் டான்ஸ் ஆடினார். அது ஷிவானிக்கு நக்கலா இருந்துச்சா, சத்தியமா நான் என் நக்கல இறக்கவே இல்லை சார் என ஷிவானியை பயமுறுத்தும் விதமாக பேசிய அர்ச்சனாவை பார்த்து கமல் சிரித்தார்.

நான் தப்பா நினைக்கல

நான் தப்பா நினைக்கல

ஷிவானி சொன்ன மாதிரி அர்ச்சனா சொன்னது எனக்கு ஒன்றும் ஹர்ட் ஆகலை, நான் ஹேப்பியா தான் ஃபீல் பண்ணேன் என ஷிவானி முகத்தில் கரியை பூச, அப்புறம் ஏன் டைனிங் டேபிளில் அந்த பிரச்சனையை பாலா கிளப்பினார் என ஒன்னு விடாமல் அர்ச்சனா கேட்டு விளாசி விட்டார்.

ஓட்டவாய் ஷிவானி

ஓட்டவாய் ஷிவானி

இந்த பிரச்சனையை நடக்கும் போது, அங்கே பாலாவே இல்லை. ஆனால், அவன் ஏன் வந்து டைனிங் டேபிளில் இந்த பிரச்சனையை கிளப்ப வேண்டும் என ஷிவானியிடம் அர்ச்சனா கேட்க, நானும் சம்யுக்தாவும் பேசிட்டு இருந்தோம், அப்போ பாலா வந்தார். அவருக்கு அந்த விஷயம் தப்பா பட்டுச்சு, அதைத் தான் டைனிங் டேபிளில் கேட்டார் என தனது ஓட்டவாயால் உளறிக் கொட்டி நாங்களும் குரூப்பா தான் செயல்பட்டோம் என்பதை வெளிப்படுத்தி கமலிடம் நல்லா வாங்கிக் கட்டிக் கொண்டார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X