விக்ரம் பட ப்ரொமோஷனுக்காக கமல் செய்ய போகும் காரியம்...தெரிஞ்சா மிரண்டு போய்டுவீங்க
சென்னை : விக்ரம் படத்தின் ரிலீஸ் தேதி நெருங்குவதால், ப்ரோமோஷன் வேலைகளை துவக்க போகிறார் கமல். இதற்காக அவர் செய்ய போகும் காரியம் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.
டைரக்டர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடித்துள்ள விக்ரம் படம் ஜுன் 3 ம் தேதி ரிலீசாக உள்ளது. நேற்று படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் வெளியிடப்பட்டது. நான்கு ஆண்டுகள் கழித்து வரும் கமல் படம் என்பதால் விக்ரம் படத்தை ஒட்டுமொத்த தமிழ் சினிமாவே எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது.

வேற லெவல் ஹிட்
ரிலீஸ் தேதி நெருங்குவதால் படத்தின் ப்ரோமோஷன் வேலைகளை துவங்க படக்குழு முடிவு செய்துள்ளது. ப்ரீ ரிலீஸ் வியாபாரத்திலேயே விக்ரம் படம் பல பெரிய தொகையை லாபமாக பார்த்து விட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சமீப நாட்களாக விக்ரம் படம் பற்றிய வெளி வரும் தகவல்கள், படத்தை வேற லெவல் ஹிட் ஆக்கும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

சூர்யா நடிப்பது கன்ஃபார்ம்
விக்ரம் படத்தில் சூர்யா நடித்துள்ளதாக வெளியான தகவலே பல மடங்கு எதிர்பார்ப்பை கூட்டியது. இந்நிலையில் சூர்யா நடிப்பதை டைரக்டர் லோகேஷும் நேற்று நடைபெற்ற ஆடியோ வெளியீட்டு விழாவில் கன்ஃபார்ம் செய்து விட்டார். டிரைலரில் வரும் காட்சிகளை பார்த்து விட்டு விஜய் சேதுபதி ரோல் என்ன, சூர்யாவின் ரோல் என்ன என்பது பற்றி அனைவரும் கேட்க துவங்கி விட்டனர்.
Recommended Video

ப்ரோமோஷனுக்காக கமல் செய்யும் காரியம்
சூர்யா நடிப்பதாக வெளியான தகவலே படத்திற்கு பெரிய ப்ரோமோஷனாக அமைந்து விட்டது. இந்நிலையில் அடுத்த கட்டமாக, சோஷியல் மீடியாவிலும் ப்ரோமோஷனை துவக்க உள்ளனர். இதற்காக மிக பிரபலமான வில்லேஜ் குக்கிங் யூட்யூப் சேனலில் கமல் பங்கேற்று, ப்ரோமோட் செய்ய உள்ளார். இந்த வீடியோ மிக விரைவில் வெளியிடப்பட உள்ளதாம்.

பான் வேர்ல்டு ப்ரோமோஷனா
ஏற்கனவே வில்லேஜ் குக்கிங் சேனலில் காங்கிரஸ் தலைவர் ராகுல் உள்ளிட்ட விஐபி.,க்கள் பலர் கலந்து கொண்டுள்ளனர். அந்த வரிசையில் லேட்டஸ்ட் வரவாக கமலும் பிரபல யூட்யூப் சமையல் சேனலில் தோன்றி கலக்க உள்ளார். ஏற்கனவே விக்ரம் பட ப்ரோமோஷனுக்காக வட மாநில ரயில்களில் விக்ரம் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வரையப்பட்டு, நாடு முழுவதும் ப்ரோமோஷன் செய்து கொண்டிருக்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











