தேர்தல் முடிஞ்சாச்சு...இனி சினிமா தான்...புதுப்பட வேலையை துவக்கிய கமல்

சென்னை : தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சி படுதோல்வி அடைந்தது. கட்சி, அரசியல் என கடந்த சில மாதங்களாக பிஸியாக இருந்தாலும் கமலின் சினிமா இமேஜில் அது எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை.

இன்னும் சொல்லப் போனால் கமலின் தீவிர ரசிகர்கள், தேர்தலில் அவர் உட்பட அவரது கட்சியினர் அனைவரும் தோல்வி அடைந்ததை மகிழ்ச்சியாக வரவேற்றுள்ளனர். கமல் அரசியலில் பிஸியாகி விட்டால் அதிக படங்களில் அவர் இனி நடிக்க மாட்டார் என்ற எண்ணம் தான் இதற்கு காரணம்.

தற்போது தேர்தல் வேலைகள் அனைத்தும் ஓய்ந்து விட்டதால் அடுத்தடுத்த சினிமா வேலைகளில் மும்முரம் காட்ட துவங்கி விட்டார் கமல். ஷங்கர் இயக்கும் இந்தியன் 2 பட பிரச்னையிலும் தலையிட்டு, சுமூகமாக தீர்த்து வைக்க திட்டமிட்டுள்ளார் கமல்.

 கிடப்பில் கிடக்கும் இந்தியன் 2

கிடப்பில் கிடக்கும் இந்தியன் 2

பல மாதங்களுக்கு முன்பே ரிலீசாகி இருக்க வேண்டிய இந்தியன் 2 படம், கிரைன் விபத்து, கொரோனா லாக்டவுன், தற்போது ஷங்கர் - லைகா இடையேயான வழக்கு விவகாரம் என அடுத்தடுத்து பல காரணங்களால் இந்த படம் பாதியிலேயே நிற்கிறது.

விக்ரம் படத்திற்கும் சிக்கல்

விக்ரம் படத்திற்கும் சிக்கல்

இதற்கிடையில் லோகேஷ் கனகராஜ் இயக்கும் விக்ரம் படத்தில் நடிக்க கமல் திட்டமிட்டுள்ளார். தேர்தல் முடிந்தது இந்த படத்தின் வேலைகளை துவக்கலாம் என்றால், கொரோனா இரண்டாம் அலையால் அதுவும் துவக்க முடியாமல் உள்ளது.

விரைந்து முடிக்க திட்டம்

விரைந்து முடிக்க திட்டம்

ஒருவேளை இந்தியன் 2 விவகாரம் முடிவுக்கு வந்தால், உடனடியாக படத்தின் வேலைகள் துவங்கப்பட்டு, அடுத்த 60 அல்லது 70 நாட்களில் இடைவிடாது படப்பிடிப்பு நடத்தப்படும். படத்தின் வேலைகளை விரைந்து முடிக்க வேண்டும் என்பதே படக்குழுவின் திட்டமாகவும் உள்ளது.

இந்தியன் 2 ஆ, விக்ரமா ?

இந்தியன் 2 ஆ, விக்ரமா ?

இந்தியன் 2 விவகாரம் சரி செய்யப்பட்டால் கமல் முதலில் இந்தியன் 2 ல் தான் நடிப்பார். ஒருவேளை இந்த விவகாரம் முடிவுக்கு வராவிட்டால் கமல், விக்ரம் படத்தின் வேலைகளில் இறங்க வாய்ப்புள்ளது. விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில் உள்ளிட்ட நடிகர்களின் கால்ஷீட் சரியாக வந்தால் மட்டுமே இதுவும் நடக்க வாய்ப்பு ஏற்படும்.

பாபநாசம் 2 க்கு தயாராகும் கமல்

பாபநாசம் 2 க்கு தயாராகும் கமல்


இதற்கிடையில் திரிஷ்யம் 2 ரீமேக்கில் நடிக்கவும் கமல் ஓகே சொல்லி இருப்பதாக தகவல் பரவி வருகிறது. இந்த படத்தை வெறும் ஒரு மாதத்தில் முடிக்க திட்டமிட்டுள்ளனராம். இப்படி தான் கொரோனா முதல் அலைக்கு பின் தளர்வுகள் அறிவிக்கப்பட்டவுடன் மோகன்லாலை வைத்து திரிஷ்யம் 2 படத்தை இயக்கி முடித்தார்களாம்.

கவுதமி இல்லாத பாபநாசம் 2

கவுதமி இல்லாத பாபநாசம் 2

2015 ல் தமிழில் ரீமேக் செய்யப்பட்ட திரிஷ்யம் படத்திற்கு பாபநாசம் என டைட்டில் வைக்கப்பட்டது. இதில் கமல், கவுதமி நடித்திருந்தனர். தற்போது பாபநாசம் 2 ல் கமல், டைரக்டர் ஜீத்து ஜோசப், தயாரிப்பாளர் ஸ்ரீபிரியா கூட்டணி ஒன்றிணைய உள்ளது. ஆனால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் கமலிடம் இருந்து பிரிந்து விட்டதால் பாபநாசம் 2 படத்தில் கவுதம் நடிக்க மாட்டார் என கூறப்படுகிறது.

விரைவில் அறிவிப்பு

விரைவில் அறிவிப்பு

பாபநாசம் 2 படத்தின் வேலைகள் ஆரம்ப கட்டத்திலேயே உள்ளது. இந்தியன் 2 மற்றும் விக்ரம் படங்களுக்கு முன்பாக இந்த படம் துவங்கப்பட்டு, விரைந்து முடிக்கப்பட உள்ளதாம். விரைவில் இது பற்றிய அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X