என்னா ஆக்ரோஷம்.. கவிதை சொன்ன கமல்.. சோம் தட்ட.. அண்ணாத்த ஆடுறார் பாட்டு பாடியும் அசத்தல்!
சென்னை: பிக்பாஸ் ஃபினாலே மேடையில் ஆக்ரோஷமாக கவிதை பாடிய கமல் அண்ணாத்த ஆடுறார் பாடலை பாடியும் அசத்தி விட்டார்.
பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியின் ஃபினாலே நிகழ்ச்சி இன்று நடைபெற்று வருகிறது. போட்டியாளர்களின் கலை நிகழ்ச்சிகளுடன் செல்கிறது பிக்பாஸ் ஃபினாலே.
இதில் வழக்கம் போல் ஒரு புத்தகத்தை பரிந்துரைத்தார் கமல். அப்போது பேசிய அனிதா, நீங்கள் சாதாரணமாக பேசும் போதே கவித்துவமாக பேசுகிறீர்களே, எங்களுக்காக உங்களின் கவிதை ஒன்றை சொல்லுங்கள் என்றார்.

பிரசுரிக்க தயக்கம்
அதற்கு பதில் கூறிய கமல், தான் பல கவிதை தொகுப்புகளை எழுதி வைத்திருப்பதாகவும் பல கவிஞர்கள் தனக்கு நண்பர்களாய் இருப்பதால், அவற்றை பிரசுரிக்க தயக்கமாக இருப்பதாக தெரிவித்தார். அவர்கள் அளவுக்கு இருக்காதே என்பதால்தான் அந்தர தயக்கம் என்றார்.

உடுக்கை சத்தம்
தொடர்ந்து தான் எழுதிய கவிதை ஒன்றையும் ஆக்ரோஷமாக ஃபினாலே மேடையில் கவி பாடினார் கமல். அந்த கவிதைக்கு உடுக்கை சத்தம் தான் பொருத்தமாக இருக்கும் என்று கூறிய கமல், தான் சோம்க்கு அளித்த இசைக்கருவியை எடுத்து வருமாறு அவரிடம் கூறினார்.

கிரகணாதி கிரகங்கள்..
மேலும் எந்த டோனில் தட்ட வேண்டும் என்று அதன் மீது அமர்ந்து சோமுக்கு தட்டிக் காட்டிய கமல், கிரகணாதி கிரகங்கள் என தொடங்கும் தனது கவிதையை கூறி ஒட்டு மொத்த ரசிகர்களையும் கட்டிப் போட்டார். அவரது குரலில் இருந்த ஆக்ரோஷமும் பார்வையாளர்களை மெய் சிலிர்க்க வைத்தது.

அண்ணாத்த ஆடுறார்..
தொடர்ந்து சோம சேகர், எனக்கு இதைவிட்டால் வேறு சான்ஸ் கிடைக்காது சார், எனக்கு பிடித்த பாடலை பாடுங்கள் நான் தட்டுகிறேன் என்றார். பிரச்சாரத்திற்கு சென்றதால் குரல் கட்டியிருக்கிறது என்ற கமல், சோமின் வேண்டுகோளை ஏற்று அண்ணாத்த ஆடுறார் பாடலை பாடி அசத்தினார்.

கமலுக்கே குறும்படம்
இதனை தொடர்ந்து கமலுக்கே குறும்படம் போட்டு பிரமிக்க வைத்தார் பிக்பாஸ். முதல் சீசன் முதல் இன்றைய எபிசோடு வரை கமலின் கோபம், பரிவு, பாராட்டு என அனைத்தையும் காட்டி மெய் சிலிர்க்க வைத்தனர். அத்தனை முக பாவானைகளுடன் பார்வையாளர்களின் கண்களை கட்டிப் போட்டனர் கமலின் குறும்படத்தால்!


Click it and Unblock the Notifications











