Just In
- 1 hr ago
ஆஸ்கர் ரேஸில் சூர்யாவின் சூரரைப்போற்று திரைப்படம்.. அதிகாரப்பூர்வ தகவல்!
- 3 hrs ago
யாரு எமனா.. 2 மாசம் கழிச்சு வா.. சில்லுக்கருப்பட்டி இயக்குநரின் அடுத்த படைப்பு.. ஏலே டிரைலர் இதோ!
- 3 hrs ago
பிக்பாஸில் களைக்கட்டும் கள்ளக்காதல்.. புருஷன் வெளியே இருக்க இளைஞருடன் லூட்டியடிக்கும் பிரபல நடிகை!
- 3 hrs ago
ஜிகுஜிகு உடையில் கிளாமர் போஸ்… வாய் பிளந்து கதறும் சிங்கிள்ஸ் !
Don't Miss!
- News
மத்திய அரசு நிபந்தனையின்றி விவசாய சட்டங்களை திரும்பப் பெற வேண்டும்- மு.க. ஸ்டாலின்
- Automobiles
புதிய டாடா சஃபாரி கார் பொது பார்வைக்கு கொண்டு வரப்பட்டது... பிப்ரவரி 4ம் தேதி விற்பனைக்கு அறிமுகம்!
- Finance
ஜகா வாங்கிய முகேஷ் அம்பானி.. ஜியோ வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி..!
- Sports
நிலையில்லாத ஆட்டங்கள்... மோஹுன் பகனுடன் மோதும் நார்த்ஈஸ்ட்... வெற்றிக்கனவு பலிக்குமா?
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 26.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் மிகப்பெரிய நிதி நன்மையைப் பெற வாய்ப்பிருக்காம்…
- Education
ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் சென்னை உயர்நீதிமன்ற அலுவலகத்தில் வேலை!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
சுச்சியை வெளியே அனுப்ப பரிந்துரை செய்த ஹவுஸ்மேட்ஸ்.. கமல் சொன்னத கவனீச்சிங்களா?
சென்னை: பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த சுச்சியிடம் கமல் பேசிய வார்த்தைகள் பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகிறது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த மூன்று வாரங்களுக்கு முன்பு வைல்டு கார்ட் என்ட்ரியாக பங்கேற்றவர் பிரபல பாடகியும் ஆர்ஜேவுமான சுசித்ரா.
வந்த கையோடு அர்ச்சனா ஸ்டைலில் ஹவுஸ்மேட்டுகளுக்கு ஈமோஜிகளை கொடுத்து பிக்பாஸ் வீட்டில் அவர்களின் செயல்பாடு குறித்து ரிவீல் செய்தார்.

பெரிதாக அலட்டிக்கொள்ளாமல்
இந்நிலையில் அவர் பங்கேற்ற மூன்றாவது வாரமான நேற்று பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார். கமல் சொன்னவுடனே பெரிதாக அலட்டிக்கொள்ளாமல் மளமளவென பிக்பாஸ் வீட்டில் இருந்து புறப்பட்டார்.

போறப்போக்கில் உடைத்துவிட்டு
அவர் பிக்பாஸ் வீட்டில் இருந்து புறப்படுவதற்கு ஏற்கனவே அவரது உடைமைகளை தயார் செய்து வைத்திருந்தது தெரிந்தது. தொடர்ந்து பிக்பாஸ் கொடுத்த தனது உண்டியலை போறப் போக்கில் போட்டு உடைத்து விட்டு, சீக்கிரம் கதவை திறங்கள் என கதவோரம் வந்து நின்றுகொண்டார்.

அர்ச்சனா அன்ட் கேங்க்
வெளியேறிய சுச்சிக்கு அனிதா, பாலாஜி, சனம் ஷெட்டி, கேபி மற்றும் ஆரியை தவிர வேறு யாரும் பெரிதாக பிரியாவிடை கொடுக்கவில்லை. குறிப்பாக அர்ச்சனா, நிஷா, ரியோ, சோம், சாம் மற்றும் ரமேஷ் ஆகியோர் கிட்டேயே வரவில்லை.

சுச்சியும் மதிக்கவில்லை
சுச்சியும் அவர்களை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை. தன்னிடம் நெருங்கி வந்தவர்களுக்கு மட்டும் ஒரு ஹக் கொடுத்துவிட்டு புறப்பட்டார். வெளியே வந்த சுச்சியை வரவேற்ற கமல், முதல் வாரத்தில் உங்களை யாரும் நாமினேட் செய்ய முடியாமல் போனது. இரண்டாவது வாரம் தீபாவளியை முன்னிட்டு நாமினேஷன் இல்லை.

இன்மேட்ஸ்களின் பரிந்துரை
மூன்றாவது வாரத்தில், முதல் நாமினேஷனிலேயே இன்மேட்ஸ்களின் பரிந்துரையின் பேரில் வெளியேறி விட்டீர்கள் என்றார். அதற்கு பதில் சொன்ன சுச்சி, மக்கள் அவசரப்பட்டுவிட்டார்கள். கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு என் அப்பா கனவில் வந்தார்.

கனவில் அப்பா சொன்னது
உன்னை சரியாக காட்டவில்லை. நீ பிக்பாஸ் வீட்டில் இருப்பது சரியல்ல, வெளியே வந்துவிடு என்றார். பிக்பாஸ் வீட்டில் 100 சதவீதம் நான் நானாக இருந்ததேன். அப்பா கனவில் வந்து சொன்னது போல் இருந்தால் மக்களை எதுவும் சொல்ல முடியாது.

ட்ரோல் படை
மற்றொரு காரணம் எனக்கு எதிராய் ட்ரோல் படை ஒன்றுள்ளது. அவர்கள் எனக்கெதிராக நெகட்டிவ் பரப்புரை செய்திருப்பார்கள், இணையத்தை போய் பார்க்கவே பயமாக உள்ளது. மக்கள் அவசரப்பட்டு விட்டார்கள் என்றுதான் சொல்லுவேன். வெளியே இருந்து இடையில் போனதுதான் முரணாக இருந்தது என்று நினைக்கிறேன் என்றார்.

அதற்கு அர்த்தம் என்ன?
இந்நிலையில் கமல் இன்மேட்ஸ்களின் பரிந்துறையின் பேரில் வெளியேற்றப்படுகிறீர்கள் என்று கூறியதை கவனித்த ரசிகர்கள், அதற்கு என்ன அர்த்தம் என கேட்டு வருகின்றனர். நாமினேஷனைதான் அப்படி சொல்கிறாரா அல்லது ஏற்கனவே பிக்பாஸ் வீட்டில் சுச்சியின் நடவடிக்கையில் ஏற்பட்ட மாற்றங்களை வைத்து ஹவுஸ்மேட்ஸ் பிக்பாஸிடம் அவரை வெளியேற்றுமாறு கோரிக்கை வைத்தனரா என கேட்டு வருகின்றனர்.

அனிதா வச்ச பொடி
மேலும் அர்ச்சனா, ரியோ, நிஷா உள்ளிட்டோர் வெளியே செல்லும்போதுக் கூட சுச்சிக்கு அருகில் வரவில்லை. தூரமாக இருந்து கூட பைபை சொல்லவில்லை. அவர் வெளியேறிய பின்னர், ஏன் இவ்வளவு வேகமாக போகிறார் என்று சனம் கேட்டதற்கு, அவருக்கு இங்கு இருக்க பிடிக்கவில்லை அதனால் செல்கிறார் என பொடி வைத்து பேசினார் அனிதா.

ரசிகர்கள் குழப்பம்
சுச்சி நிலையாக இல்லை, திடீர் திடீரென அழுவது சிரிப்பது என மாறுபட்டு கொண்டே இருந்தார் என்று தகவல்கள் பரவின. பெரும்பாலும் தனிமையில் இருந்ததாகவும் பிக்பாஸையும் தொல்லை செய்ததாகவும் தகவல் பரவியது. இந்நிலையில் சுச்சியுடனான கமலின் பேச்சு ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.