அந்த நடிகை சொன்ன அதே வார்த்தை.. அர்ச்சனாவை பங்கம் பண்ணிய கமல்.. அடுத்த புரமோ!

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய இரண்டாவது புரமோ வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய முதல் புரமோவில் நாமினேஷனில் உள்ளவர்களில் இன்று யார் காப்பாற்றப்படப் போகிறார்கள் என்பதை முட்டையை உடைக்க சொல்லி டிவிஸ்ட் வைத்தார் கமல்.

இந்நிலையில் இன்றைய எபிசோடுக்கான இரண்டாவது புரமோ வெளியாகியுள்ளது. இதில் கோழிப் பண்ணை டாஸ்க்கை எடுத்துள்ளார் கமல்.

ஒரு கோழியாக மாறினார்

ஒரு கோழியாக மாறினார்

இதில் பேசும் கமல், கோழிப்பண்ணை டாஸ்க்கில் அர்ச்சனா தனது கோழி முட்டையை பாதுகாத்த விதம் குறித்து பேசினார். நிஜமாகவே ஒரு கோழியாக மாறினார் என்று பாராட்டினார்.

என் போட்டோ இருந்துச்சு..

என் போட்டோ இருந்துச்சு..

தொடர்ந்து பேசிய கமல் இறுதியில் வெடித்த அந்த கோபம் என தொடங்கினார். அதற்கு சோம் பண்ணியதால் தான் எனக்கு கோபம் என்றார். அது நீங்கள் இல்லையே முட்டைதானே, அது ஒரு விளையாட்டு கருவிதானே என்று கமல் கூற, முட்டையில என் போட்டோ இருந்துச்சு சார் என்று ஆர்க்யூ செய்கிறார்.

ஸ்ரீபிரியா சொன்ன வார்த்தை

ஸ்ரீபிரியா சொன்ன வார்த்தை

அதற்கு நாம போட்டோவ எரிச்சு, கிழிச்சு எல்லாம் பண்ணியிருக்கோம் நம்ம, அப்போ வராத கோபம் இப்போ ஏன் வருவானே என்றார். ஏற்கனவே அந்த எபிசோடை பார்த்து நடிகை ஸ்ரீபிரியா இதே வார்த்தையைதான் கேட்டார்.

எனக்கு முன்னாடியே..

எனக்கு முன்னாடியே..

இன்று கமலும் அதே வார்த்தையை கேட்டு விளாசினார். அப்போதுக்கூட அமைதிக்காக்காத அர்ச்சனா, எனக்கு முன்னாடியே ஏன் போட்டோவை போட்டு உடைச்சு என்று பழைய பஞ்சாங்கத்தை ஆரம்பித்தார்.

மரண கலாய் கலாய்த்த கமல்

மரண கலாய் கலாய்த்த கமல்

உடனே குறுக்கிட்ட கமல், சோமிடம் ஏங்க பின்னாடி போட்டு உடைச்சுருக்கக்கூடாது, ஏன் முன்னாடி போட்டு உடைச்சீங்க என்று கலாய்த்தார். கமல் கலாய்ப்பதை அறிந்த அர்ச்சனா தலையை குனிந்தப்படியே சிரித்து மழுப்பினார்.

மொத்தமாக டேமேஜ் செய்து

மொத்தமாக டேமேஜ் செய்து

கடைசி வரையிலும் அர்ச்சனாவை வச்சு செய்துள்ளார் கமல். நேற்றைய எபிசோடிலேயே, ஓபன் நாமினேஷன் மற்றும் முட்டை டாஸ்க் விவகாரத்தில் அர்ச்சனாவை வறுத்தெடுத்தார். இந்நிலையில் இன்றைய எபிசோடிலும் அவரை ஒட்டு மொத்தமாக டேமேஜ் செய்துதான் வெளியே அனுப்புகிறார் கமல் என்பது தெளிவாகியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X