அன்பு ஜெயிக்கும்.. நம்புறீங்களா இல்லையா? அதே பாணியில் அர்ச்சனாவை கலாய்த்த கமல்.. பங்கமாக்கும் புரமோ!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான மூன்றாவது புரமோ வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய முதல் இரண்டு புரமோக்களுமே தெறிக்கவிட்டது. முதல் புரமோவில் பாலாஜிக்கும் ஆரிக்கும் இடையில் நடந்த சண்டையை தோலுரிக்கும் வகையில் இருந்தது.
இரண்டாவது புரமோவில் பாலாஜியை மொக்கையாக்கினார் கமல். இந்நிலையில் தற்போது மூன்றாவது புரமோ வெளியாகியுள்ளது.

குரூப்பிஸம்னு..
இதில் அர்ச்சனாவை பங்கம் செய்துள்ளார் கமல். அதாவது, புரமோவில் பேசும் அர்ச்சனா, எப்போ பாரு ஒருத்தர முன்னிலைப்படுத்தி விளையாடணும்னா அது பிக்பாஸ்ல முடியவே முடியாது சார் என்கிறார். மூணு பேர், குரூப்பிஸம்ன்னு சொல்றீங்களே என்னாதான்பா கதை கொஞ்சம் சொல்லேன்ப்பா என்பதற்காகதான் அப்படி சொன்னேன் என்கிறார்.

அதே பாணியில் கலாய்
அர்ச்சனா பேசுவதையெல்லாம் சேரில் அமர்ந்தப்படியே கேட்கும் கமல், திடீரென ஆக்ரோஷமாக எழுந்து அன்பு ஜெயிக்கும்னு நினைக்கிறீங்களா இல்லையா என அர்ச்சனா நிஷாவிடம் கேட்ட பாணியிலேயே கேட்டு மரண கலாய் கலாய்த்துள்ளார்.

அன்பு எனக்கு அவசியமில்லை
ஆனால் கமல் தன்னை கலாய்ப்பதை அறியாமல் நான் நம்புறேன் சார் என்கிறார் அர்ச்சனா. அதற்கு பதில் சொல்லும் பாலாஜி, அன்பு அவசியம் தான், ஆனால் எனக்கு இந்த வீட்டுல அவசியம் இல்லை என பதில் சொல்கிறார் பாலாஜி.

ரியோ முறையீடு
அவரை தொடர்ந்து பேசும் ரியோ, ஒவ்வொரு முறையும் வொர்ஸ்ட் பர்ஃபாமர் நாமினேட் செய்யும் போது, நான் ஒன்னு சொல்றேன் என்று எழுந்து நிற்கிறார்ல சார் அப்போ அவருக்கு தோனுச்சுன்னா அங்கேயே சொல்லியிருக்கலாம்ல என்று கமலிம் முறையிடுகிறார்.

நானும் பாதிக்கப்படுவேன்
ரியோவை தொடர்ந்து பேசும் அர்ச்சனா, திரும்ப திரும்ப நீ.. நீ என்று சொன்னால் முடியல சார் என்கிறார். அப்போது குறுக்கிடும் பாலாஜி, அன்ப கேம்க்குள்ள கொண்டுவந்தா எல்லாரும் பாதிக்கப்படுவாங்க, நானும் பாதிக்கப்படுவேன் என்கிறார். இப்படியாக உள்ளது மூன்றாவது புரமோ.


Click it and Unblock the Notifications











