»   »  அண்ணன் கண்ட கனவுகளில் நான் பாதியை கூட நிறைவேற்றவில்லை: கமல் உருக்கம்

அண்ணன் கண்ட கனவுகளில் நான் பாதியை கூட நிறைவேற்றவில்லை: கமல் உருக்கம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தனது அண்ணன் சந்திரஹாஸன் மறைவை நினைத்து உலக நாயகன் கமல் ஹாஸன் ட்வீட்டியுள்ளார்.

உலக நாயகன் கமல் ஹாஸனின் அண்ணன் சந்திரஹாஸன்(82) நேற்று முன்தினம் இரவு மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவர் லண்டனில் உள்ள தனது மகள் அனுஹாஸனின் வீட்டில் காலமானார்.

அவரது மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர்.

கமல் ஹாஸன்

நண்பனாய் நல்லாசானாய், தமயனும் தகப்பனுமாய் அவரை பெற்றதால் உற்றது நல் வாழ்வு. எனக்காக அவர் கண்ட கனவுகளில் பாதியைக் கூட நான் நிரைவேற்றவில்லை என கமல் ஹாஸன் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

ரஜினி

தந்தை போன்ற அண்ணன் சந்திரஹாஸனை இழந்து வாடும் கமல் ஹாஸன் மற்றும் அவரது குடும்பத்தாருக்கு என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடையட்டும் என ரஜினிகாந்த் ட்வீட்டியுள்ளார்.

சந்திரஹாஸன்

என் சித்தப்பாவும், அனு ஹாஸனின் தந்தையுமான சந்திரஹாஸன் காலமானார். அரிய பொக்கிஷத்தை ஹாஸன்கள் இழந்துவிட்டோம் என சுஹாசினி மணிரத்னம் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

ஸ்ருதி ஹாஸன்

என் பெரியப்பாவின் ஆத்மா சாந்தியடையட்டும். நல்ல குணம், பல சாதனைகள் புரிந்த நேர்மையான மனிதர். இரங்கல் தெரிவித்தவர்களுக்கு நன்றி என்று ஸ்ருதி ஹாஸன் ட்வீட்டியுள்ளார்.

English summary
Kamal Haasan tweeted about the demise of his fatherly brother Chandra Haasan on saturday in London.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil