Kamal: அமெரிக்காவில் இருந்து வர மறுக்கும் ஆண்டவர்... இந்த லுக் போதுமே... கமலின் புது பிளான்..?

கலிஃபோர்னியா: உலக நாயகன் கமல்ஹாசன் தற்போது இந்தியன் 2, கல்கி படங்களில் நடித்து வருகிறார்.

இந்த இரண்டு படங்களும் 2024 தொடக்கத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் ப்ராஜெக்ட் கே க்ளிம்ப்ஸ் வெளியீட்டு நிகழ்ச்சிக்காக கடந்த மாதம் அமெரிக்கா சென்றிருந்தார் கமல்.

அன்று முதல் இப்போது வரையும் கமல் அமெரிக்காவிலேயே தங்கியுள்ளதாக சொல்லப்படும் நிலையில், அவரது போட்டோ வெளியாகி வைரலாகி வருகிறது.

 Kamal: Ulaga Nayagan Kamals new photo from America is trending now

அமெரிக்காவில் செட்டிலான கமல்: கடந்தாண்டு வெளியான விக்ரம் திரைப்படம், கமல்ஹாசனுக்கு மிகப் பெரிய வெற்றியை கொடுத்தது. நீண்ட இடைவேளைக்குப் பின்னர் கமலுக்கு வெறித்தனமான கம்பேக் கொடுத்த விக்ரம், கோலிவுட்டின் இண்டஸ்ட்ரி ஹிட் லிஸ்ட்டிலும் இடம்பெற்றது. இதனால் மீண்டும் நடிப்பில் பிஸியாகிவிட்டார் கமல்ஹாசன். அதுமட்டும் இல்லாமல் தனது ராஜ்கமல் ஃபிலிம்ஸ் பேனரில் புதிய படங்களையும் தயாரித்து வருகிறார்.

இதனிடையே பாதி படப்பிடிப்புடன் நின்றுபோன இந்தியன் 2 படத்தையும் மீண்டும் தொடங்கினார் உலகநாயகன். கமல் - ஷங்கர் கூட்டணியில் உருவாகும் இந்தப் படம் அடுத்தாண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக இயக்குநர்கள் ஹெச் வினோத், மணிரத்னம் ஆகியோருடன் கூட்டணி வைக்கவுள்ளார். அதேநேரம் பிரபாஸின் ப்ராஜெக்ட் கே படத்திலும் கமல் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ப்ராஜெக்ட் கே படத்தில், பிரபாஸ் ஹீரோவாகவும், அவருக்கு வில்லனாக கமல்ஹாசன் நடிப்பதாகவும் சொல்லப்படுகிறது. இவர்களுடன் அமிதாப் பச்சன், தீபிகா படுகோன், ராணா ஆகியோர் லீட் ரோலில் நடிக்கின்றனர். ப்ராஜெக்ட் கே க்ளிம்ப்ஸ் வீடியோ வெளியீட்டு விழா அமெரிக்காவின் கலிபோர்னியாவில் கடந்த மாதம் நடைபெற்றது. அதற்காக கமலஹாசனும் அமெரிக்கா சென்றிருந்தார்.

 Kamal: Ulaga Nayagan Kamals new photo from America is trending now

இந்நிகழ்ச்சிக்குப் பின்னர் கமல் சென்னை திரும்பியதாக தெரியவில்லை. ஆனால், பிக் பாஸ் சீசன் 7க்கான ப்ரோமோ வீடியோக்கள் அடுத்தடுத்து வெளியாகி வருகின்றன. ஆனால், கமல் இன்னும் அமெரிக்காவில் தான் இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்தியன் 2 படத்தின் மேக்கப் பணிகளுக்காக அவர் அங்கிருப்பதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் அமெரிக்காவில் இருக்கும் கமலின் போட்டோ ட்ரெண்டாகி வருகிறது.

கோட் சூட் அணிந்தபடி செம்ம ஸ்டைலிஷாக வலம் வருகிறார் உலகநாயகன். இந்தியன் 2 மட்டுமின்றி ப்ராஜெக்ட் படத்திற்கான ஷூட்டிங்கும் அமெரிக்காவில் நடப்பதாகவும், அதற்காகவே கமல்ஹாசன் இன்னும் அங்கிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இந்நிலையில், இப்போது வெளியான கமலின் போட்டோவை அவரது ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X