Kamal: ரஜினி, விஜய் மாதிரி சின்ன பசங்க சண்டை போடமாட்டார் கமல்... விக்ரம் தான் மானத்த காப்பாத்துச்சு

சென்னை: கமல்ஹாசன் நடிப்பில் கடந்தாண்டு வெளியான விக்ரம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது.

இந்தப் படத்திற்கு கிடைத்த வெற்றியால் அடுத்தடுத்து இந்தியன் 2, கல்கி, KH 233, KH 234 ப்ராஜெக்ட்களில் பிஸியாகிவிட்டார்.

 Kamal: Ulaganayagan Kamal is a superstar than Rajini and Vijay

இந்நிலையில், ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவில் சூப்பர் ஸ்டார் டைட்டில் குறித்து ரஜினிகாந்த் பேசியிருந்தார்.

இந்த விவகாரத்தில் உலகநாயகன் கமல்ஹாசனை சிலர் கோர்த்துவிட, தற்போது அதற்கு பதிலடி கிடைத்துள்ளது.

சின்ன பசங்க சண்டைக்கு கமல் வரமாட்டார்

குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமான கமல், இப்போது உலகநாயகன் என்ற அடைமொழியுடன் இந்தியத் திரையுலகையை கலக்கி வருகிறார். சில வருடங்களாக சரியான ஹிட் படங்கள் இல்லாமல் அரசியல் பக்கம் கவனம் செலுத்தி வந்தார். ஆனால், கடந்தாண்டு வெளியான விக்ரம் திரைப்படம், கமலுக்கு ரசிகர்களிடம் இன்னும் கிரேஸ் குறையவில்லை என்பதை காட்டியது.

இதனையடுத்து இந்தியன் 2, ப்ராஜெக்ட் கே எனப்படும் கல்கி ஆகிய படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். அதேபோல், அடுத்தடுத்து KH 233, KH 234 ஆகிய படங்களிலும் நடிக்கவுள்ளார். இந்நிலையில், ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவில் பேசிய ரஜினி, தனது சூப்பர் ஸ்டார் டைட்டில் குறித்து அதிரடியாக கருத்துத் தெரிவித்து இருந்தார். அவரது இந்த பேச்சு நடிகர் விஜய்க்கு எதிரானதாக கோலிவுட்டில் பேச்சு அடிபடுகிறது.

அதேநேரம் சூப்பர் ஸ்டார் டைட்டில் போன்றே உலகநாயகன் டைட்டிலும் ட்ரோலுக்கு உள்ளானது. இதனால் பொறுமை இழந்த உலகநாயகனின் ரசிகர்கள், நெட்டிசன்களுக்கு பதிலடி கொடுத்தனர். இந்நிலையில், கமலின் தீவிர ரசிகரான பிரசாந்த் ஹசன் என்பவர் ரஜினியின் சூப்பர் ஸ்டார் டைட்டில் குறித்து பேசியுள்ளார். அதாவது ஜெயிலர் படத்தின் பாடல்களில் ரஜினி தன்னை பற்றி பெருமை பேசியிருந்தால் அதில் பிரச்சினை இல்லை. ஆனால், இன்னொரு நடிகரை தாழ்த்தி அப்படியெல்லாம் வரிகள் இருக்க ரஜினி அனுமதித்திருக்கக் கூடாது என பேசியுள்ளார்.

மேலும், கமல் தான் ரியல் சூப்பர் ஸ்டார் எனவும், அவரை தமிழ் ரசிகர்கள் சரியாக கொண்டாடியிருந்தால் இந்நேரம் கோலிவுட் எங்கேயோ சென்றிருக்கும் எனக் கூறியுள்ளார். அதேபோல், சூப்பர் ஸ்டார் டைட்டிலுக்காக ரஜினி, விஜய் மாதிரி சின்ன பசங்க சண்டையெல்லாம் போடமாட்டார் கமல். அவரது ரூட்டே வேறு, மற்ற நடிகர்கள் போல ஒரே வழியில் செல்லாமல் புதிய பாதைகளையும் கதைகளையும் தேர்ந்தெடுத்து நடித்தவர் எனக் கூறியுள்ளார்.

அதேபோல், மாமன்னன் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தேவர் மகன் குறித்து மாரி செல்வராஜ் பேசியது ரொம்பவே தவறானது. கமலின் அனுபவத்துக்கு முன்னால் மாரிசெல்வராஜ் ஒன்றுமே இல்லை. அவரை சிறப்பு விருந்தினராக கூட்டி வந்து அவ்வளவு தூரம் மாரிசெல்வராஜ் பேசியிருக்கக் கூடாது எனவும் அவர் கூறியுள்ளார். கடந்தாண்டு வெளியான விக்ரம் படம் தான் தமிழ் சினிமாவின் மானத்தையே காப்பாற்றியது எனவும் பிரசாந்த் ஹசன் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X