Kamal: திருப்பதியில் இந்தியன் 2 ஷூட்டிங்... இந்த வயதிலும் கமல் எடுத்த ஹை-ரிஸ்க்!

சென்னை: உலகநாயகன் கமல்ஹாசன் தற்போது ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார்.

இந்தப் படம் கிடப்பில் இருந்த நிலையில், கடந்த ஓராண்டாக மீண்டும் வேகமாக நடைபெற்று வருகிறது.

தற்போது திருப்பதியில் நடைபெற்று வரும் இந்தியன் 2 படப்பிடிப்பில் கமல்ஹாசனின் காட்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இதற்காக கமல்ஹாசன் ரிஸ்க் எடுத்து நடித்தது குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

 Kamal: Ulaganayagan Kamal puts on make-up for 4 hours during the shooting of Indian 2

இந்தியன் 2 படத்துக்காக கமல் எடுத்த ரிஸ்க்:கடந்தாண்டு வெளியான விக்ரம் திரைப்படம் கமல்ஹாசனுக்கு வெறித்தனமான கம்பேக் கொடுத்தது. இதனால் மூன்று வருடங்களாக கிடப்பில் கிடந்த இந்தியன் 2ம் பாகத்தை மீண்டும் தொடங்கினார் இயக்குநர் ஷங்கர். லைகா நிறுவனத்துடன் ரெட் ஜெயன்ட் மூவிஸும் இணைந்து இந்தியன் 2 படத்தை தயாரித்து வருகிறது.

இதனால், முன்பை விட அசுர வேகத்தில் நடைபெற்று வருகிறது இந்தியன் 2 படப்பிடிப்பு. கமல்ஹாசன், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், சித்தார்த், பாபி சிம்ஹா ஆகியோர் நடித்த காட்சிகள் எடுக்கப்பட்டு வந்தன. வெளிநாடுகள் மட்டுமின்றி சென்னையிலும் இந்தியன் 2 படப்பிடிப்பு நடைபெற்றது. மேலும், ஹாலிவுட் கலைஞர்களுடன் கமலின் சண்டைக் காட்சிகளும் படமாக்கப்பட்டன.

1996ம் ஆண்டு வெளியான இந்தியன் படத்தின் சீக்வெல்லாக இது உருவாகி வருவதால், கமலின் இந்தியன் தாத்தா கெட்டப் இதிலும் தொடரும் என்பது உறுதியாகியுள்ளது. ஏற்கனவே இந்தியன் தாத்தா கெட்டப்பில் கமல்ஹாசன் இருக்கும் புகைப்படங்களும் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளன. இந்நிலையில், தற்போது ஆந்திராவின் திருப்பதியில் இந்தியன் 2 படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

இதில் கமல்ஹாசன் சம்பந்தப்பட்ட காட்சிகளை எடுத்து வருகிறார் ஷங்கர். இந்தக் காட்சிகளில் கமலின் லுக் ரொம்பவே வித்தியாசமாக இருக்கும் என சொல்லப்படுகிறது. அதற்காக அவர் தினமும் சுமார் 4 முதல் 5 மணி நேரம் வரை மேக்கப் போட்டு வருகிறாராம். அதிகாலை 3 மணிக்கே எழுந்துவிடும் கமல், முதலில் ஜிம் ஒர்க்அவுட் முடித்துவிட்டு அதன்பிறகு மேக்கப் போட செல்கிறாராம்.

ஒரு மணிநேரம் ஜிம் ஒர்க்அவுட், 5 மணி நேரம் வரை மேக்கப் என படப்பிடிப்பு தொடங்கும் முன்னரே 6 மணி நேரம் செலவிடுகிறார் கமல். இவ்வளவு ரிஸ்க் எடுத்து மேக்கப் போட்டாலும், அது 3 முதல் 4 மணி நேரம் வரை மட்டுமே இருக்கும் என சொல்லப்படுகிறது. இதனால், மறுநாளும் தொடர்ச்சியாக இதே ஷெட்யூலில் வேலை செய்து வருகிறார் கமல்ஹாசன். இந்த வயதிலும் அவரது டெடிகேஷனைப் பார்த்து இந்தியன் 2 யூனிட்டில் உள்ளவர்கள் ஆச்சரியத்தில் உறைந்துள்ளார்களாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X