twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஆரோ 3 டி ஒலியுடன் வருகிறது கமலின் விஸ்வரூபம்!

    By Shankar
    |

    Vishwaroopam
    ஹாலிவுட் தயாரிப்பாளரே வியக்கும் அளவுக்கு படத்தை எடுத்த உலகநாயகன் கமல்ஹாஸன், எதற்காக இத்தனை நாள் அமைதி காக்கிறார்?

    இதுதான் திரைத் துறை மற்றும் பத்திரிகையாளர்களும் கேட்டு வந்த கேள்வி. இதோ அதற்கான விடை... படத்துக்கு மேலும் மேலும் சிறப்பு சேர்க்க உலகில் என்னென்ன புதிய தொழில் நுட்பங்கள் உள்ளனவோ அவற்றைத் தேடிப்பிடித்து பயன்படுத்துவதில் வல்லவரான கமல், இந்தப் படத்துக்கும் அப்படி ஒரு புதிய தொழில்நுட்பத்தைச் சேர்த்து வருகிறார்.

    AURO 3D எனும் ஒலித் தரத்துடன் இந்தப் படம் வெளியாக இருக்கிறது.

    திரைப்படம் பார்க்கும் அனுபவத்தை மேலும், பல படிநிலைகளுக்கு உயர்த்தி பெரும் கிளர்ச்சியை நமக்களிக்கும் திறன் இந்த ஆரோ 3 டிக்கு உண்டு.

    இதுகுறித்து இன்று கமல் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "இந்த AURO 3D தொழில்நுட்பத்தை விஸ்வரூபம் திரைப்படம் மூலமாக நம் பார்வையாளர்களுக்கு நாங்கள் கொண்டு வருவதில் பெரிதும் மகிழ்ச்சி அடைகிறேன்.

    மற்ற தொழில்நுட்பங்களைப் போல் அல்லாது, AURO 3D இயங்குதளத்தின் செயல் உருவாக்கமும், மிகக்குறைந்த நிறுவுதல் நேரமும் இதன் பெரும் சிறப்பு.
    என்னுடய நண்பர் வில்ஃப்ரெடின் இந்த AURO 3D தொழில் நுட்பம், இந்திய திரைப்பட ரசிகர்களுக்கும் பயன்படும் வகையில், பல நல்ல திரை அரங்குகளும், அதன் நிர்வாகிகளும் வளர்ச்சி மனோபாவத்தோடு இதை எடுத்துச் செல்ல முன்னோக்கி வருவது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.

    விஸ்வரூபம் திரைப்படத்தின் வெளியீட்டு நாள் பற்றி பல புரளிகள் பரவி வருகின்ற இவ்வேளையில், என்னுடைய ராஜ்கமல் பிலிம்ஸ் அலுவலகத்தில் இருந்து மட்டுமே இது குறித்த உண்மையான தகவல்கள் வெளியாகும் என உறுதியளிக்கிறேன்," என்று தெரிவித்துள்ளார்.

    English summary
    Kamal Hassan is using Auro 3 D technology, another step in sound quality for his forthcoming Vishwaroopam.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X