Kamal Vijay: ஏஜென்ட் விக்ரமை ரவுண்டு கட்டிய லியோ டீம்... விஜய், கமல், லோகேஷ் போடும் மாஸ்டர் பிளான்!

சென்னை: உலகநாயகன் கமல்ஹாசன் நேற்று தனது 69வது பிறந்தநாளை கொண்டாடினார்.

இதனையடுத்து அவருக்கு ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள் பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

 Kamal Vijay: Kamal, Vijay, Lokesh Kanagaraj photo trending at Leo shooting spot

அதேபோல், கமல்ஹாசன் கொடுத்த பிறந்தநாள் பார்ட்டியில், சூர்யா, அமீர்கான் உட்பட ஏராளமான பிரபலங்களும் கலந்துகொண்டனர்.

இதனிடையே, விஜய், லோகேஷ் உள்ளிட்ட லியோ படக்குழுவினருடன் கமல்ஹாசன் எடுத்துக்கொண்ட போட்டோ வைரலாகி வருகிறது.

லியோ டீமுடன் உலகநாயகன்
நேற்று தனது 69வது பிறந்தநாளை கொண்டாடிய உலக நாயகன் கமல்ஹாசனுக்கு திரை நட்சத்திரங்களும் ரசிகர்களும் வாழ்த்துத் தெரிவித்திருந்தனர். அதேபோல், கமல்ஹாசன் கொடுத்த பிறந்தநாள் பார்ட்டியிலும் ஏராளமான பிரபலங்கள் கலந்துகொண்டனர். சூர்யா, சிவராஜ்குமார், அமீர்கான், துல்கர் சல்மான், இயக்குநர்கள் லோகேஷ் கனகராஜ், நெல்சன் உள்ளிட்ட பலர் கமல்ஹாசனை நேரில் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்தனர்.

 Kamal Vijay: Kamal, Vijay, Lokesh Kanagaraj photo trending at Leo shooting spot

இதன் காரணமாக நேற்றிலிருந்தே டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில், கமல்ஹாசனுடன் பிரபலங்கள் இருக்கும் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. இதில் உலகநாயகன் கமல்ஹாசனும் தளபதி விஜய்யும் இருக்கும் போட்டோ ரசிகர்களுக்கு வைப் கொடுத்திருந்தது. கமல், விஜய் இருவரது ஹேர் ஸ்டைலையும் வைத்து பார்க்கும்போது இந்தப் போட்டோ லியோ படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்டதாக இருக்கலாம் என சொல்லப்பட்டது.

அதனை உறுதிசெய்யும் விதமாக, மீண்டும் ஒரு போட்டோ வெளியாகி வைரலாகி வருகிறது. அதில், உலகநாயகன் கமல்ஹாசனுடன் விஜய், இயக்குநர் லோகேஷ் கனகராஜ், தயாரிப்பாளர் லலித் குமார், விஜய்யின் மேனேஜர் ஜெகதீஷ் ஆகியோர் உடனுள்ளனர். இந்தப் போட்டோ லியோ ஷூட்டிங் ஸ்பாட் அல்லது டப்பிங் பணிகளின் போது எடுக்கப்பட்டது எனத் தெரியவந்துள்ளது.

கமல்ஹாசனின் விக்ரம் வெளியாகி வெற்றிப் பெற்ற பின்னரே, இனி தனது படங்கள் LCU கான்செப்ட்டில் இருக்கும் என லோகேஷ் கனகராஜ் கூறியிருந்தார். அதன்படி, கைதி, விக்ரம் என இந்த இரண்டு படங்களும் LCU-ன் கீழ் இணைந்தன. இந்த வரிசையில் மூன்றாவதாக விஜய்யின் லியோ திரைப்படமும் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால், லியோவில் கமல் நடித்திருக்கலாம் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், அவர் வாய்ஸ் ஓவர் மட்டும் கொடுத்துவிட்டு எஸ்கேப் ஆகிவிட்டார். அதேநேரம், விக்ரம் 2 திரைப்படத்தில் LCU முடிவுக்கு வரும் என லோகேஷ் கூறியிருந்தார். அப்படி விக்ரம் 2 உருவானால் அதில் விஜய்யும் நடிக்கலாம் என எதிர்பார்க்கப்பட்டது. அது கிட்டத்தட்ட உறுதியாகிவிடும் என்பது போல, இப்போது வெளியான போட்டோவில் தெரிகிறது. இந்நிலையில், கமல், விஜய், லோகேஷ் ஒன்றாக இருக்கும் போட்டோவை LCU ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X