Kamal Vijay: “லியோ விஜய்க்கு கை கொடுத்த ஏஜென்ட் விக்ரம்..” ட்ரெண்டாகும் ஷூட்டிங் ஸ்பாட் போட்டோ!

சென்னை: விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கிய லியோ படத்தில் நடித்துள்ளார்.

இந்தப் படம் லோகேஷ் கனகராஜ்ஜின் யுனிவர்ஸ் கான்செப்ட்டில் உருவாகியுள்ளதாக சொல்லப்படுகிறது.

முன்னதாக லோகேஷ் இயக்கிய விக்ரம் தான் LCU படமாக வெளியாகி சூப்பர் ஹிட் அடித்தது.

இந்நிலையில், ஷூட்டிங் ஸ்பாட்டில் விஜய்யை கமல் சந்தித்த போட்டோ ஒன்று வைரலாகி வருகிறது.

 Kamal Vijay: Ulaganayagan Kamal Haasan and Thalapathy Vijay Unseen photo is trending now

ஷூட்டிங் ஸ்பாட்டில் விஜய்யை சந்தித்த கமல்: வாரிசு படத்தைத் தொடர்ந்து லியோவில் நடித்துள்ளார் விஜய். லோகேஷ் கனகராஜ் உடன் இரண்டாவது முறையாக இந்தப் படத்தில் விஜய் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. முன்னதாக விஜய் - லோகேஷ் காம்போவில் வெளியான மாஸ்டர், கலவையான விமர்சனங்களுடன் சூப்பர் ஹிட் அடித்தது. அதன் பின்னர் விக்ரம் படத்தை இயக்கினார் லோகேஷ் கனகராஜ்.

உலகநாயகன் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, ஃபஹத் பாசில், நரேன், சூர்யா என செம்ம மாஸ்ஸான மல்டி ஸ்டார்ஸ் படமாக விக்ரம் வெளியானது. இந்தப் படத்தின் மேக்கிங், திரைக்கதை என ஆல் ஏரியாவிலும் லோகேஷ் அடித்து விளையாடினார். இதனால் இண்டஸ்ட்ரி ஹிட் அடித்தது விக்ரம். அதன்பின்னர் தான் இனி தான் இயக்கும் படங்களில் 'LCU எனப்படும் லோகேஷ் யுனிவர்ஸ்' டச் இருக்கும் என லோகேஷ் கனகராஜ் கூறியிருந்தார்.

இதனால், அவரது இயக்கத்தில் விஜய் நடித்து வரும் லியோ படம் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. விஜய், த்ரிஷா, அர்ஜுன், சஞ்சய் தத், மிஷ்கின், கெளதம் மேனன், மன்சூர் அலிகான் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். முக்கியமாக விக்ரம் படத்தில் நடித்த டான்சர் வசந்தி, மாயா கிருஷ்ணன், கைதியில் நடித்த ஜார்ஜ் மரியான் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இதனால் கன்ஃபார்மாக லியோ LCU பின்னணியில் இருக்கும் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

அதேபோல், சூர்யாவின் ரோலக்ஸ், ஃபஹத் பாசிலின் அமர் ஆகியோரின் கேரக்டர் அல்லது வாய்ஸ் ஓவர் லியோவில் இடம்பெறலாம் என சொல்லப்பட்டது. முக்கியமாக விக்ரம் படத்தில் 'ஏஜென்ட் விக்ரம்' கேரக்டரில் ஹீரோவாக மிரட்டிய கமல், லியோவில் நடித்திருக்கலாம் என தகவல் வெளியானது. அதுகுறித்து படக்குழு தரப்பில் இருந்து மறுப்புத் தெரிவித்திருந்தாலும், தற்போது ஒரு போட்டோ வைரலாகி வருகிறது.

 Kamal Vijay: Ulaganayagan Kamal Haasan and Thalapathy Vijay Unseen photo is trending now

ஷூட்டிங் ஸ்பாட்டில் இருக்கும் விஜய்யை, கமல் நேரில் சந்தித்து கை குலுக்கிக் கொள்கிறார். இருவருமே கறுப்பு டீ-ஷர்ட் அணிந்தபடி செம்ம ஸ்மார்ட்டாக உள்ளனர். இது லியோ படப்பிடிப்புத் தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படமா என ரசிகர்களிடம் ஆர்வம் ஏற்பட்டது. ஆனால், புலி படத்தில் நடித்த போது விஜய்யை கமல் சந்தித்த போட்டோ எனத் தெரியவந்துள்ளது. சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடித்த புலி 2015ம் ஆண்டு வெளியானது.

இதில் விஜய் ஜோடியாக ஸ்ருதி ஹாசன் நடித்திருந்தார். அதனால் அப்போது புலி ஷூட்டிங் ஸ்பாட் சென்ற கமல், தனது மகள் ஸ்ருதிஹாசன், விஜய் இருவரையும் சந்தித்துள்ளார். இந்த புகைப்படத்தை லியோ ரசிகர்கள் ஆர்வ மிகுதியில் டிவிட்டரில் ஷேர் செய்து பரவசம் அடைந்து வருகின்றனர். ஆனால், இது புலி படப்பிடிப்பில் எடுத்த போட்டோ என, நெட்டிசன்கள் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X