கோச்சடையான் வருது... கமல், விஷால், விக்ரம், தனுஷ், சிவகார்த்திகேயன் படங்கள் தள்ளி வைப்பு
ஏப்ரல் 11-ம் தேதி ரஜினியின் கோச்சடையான் வெளியாவது உறுதியானதால், அந்த மாதம் வரவிருந்த கமல், விஷால், தனுஷ், சிவகார்த்திகேயனின் படங்கள் தள்ளி வைக்கப்பட்டுள்ளன.
வடிவேலு படமும் தள்ளிப் போடப்பட்டுள்ளது.
ரஜினியின் கோச்சடையான் படம் ஏப்ரல் 11-ந்தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி, மராத்தி, போஜ்புரி, பெங்காலி, பஞ்சாபி, ஜப்பானி. ஆங்கில மொழிகளில் ரிலீஸ் படத்தை செய்கின்றனர்.

6 ஆயிரம் தியேட்டர்களில் வெளியாகிறது இந்தப் படம். இதனால் வேறு படங்களுக்கு தியேட்டர்கள் தருவது சிரமம் என தியேட்டர் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனால் கமலின் விஸ்வரூபம் - 2, விக்ரமின் 'ஐ', விஷாலின் 'நான் சிகப்பு மனிதன், தனுசின் 'வேலை இல்லா பட்டதாரி', சிவகார்த்திகேயனின் 'மான் கராத்தே' போன்ற படங்களை ஏப்ரல் மாதம் வெளியிட திட்டமிட்டனர். கோச்சடையான் வருவதால் இப்படங்களின் ரிலீசை மே மாதத்துக்கு தள்ளி வைத்துள்ளனர். வடிவேலுவின் தெனாலிராமன் படத்தயும் மே மாதம் ரிலீஸ் செய்ய முடிவெடுத்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











