கமல் பிறந்தநாளில் விக்ரம் 100வது நாள் வெற்றி விழா... ராஜ்கமல் ஃபிலிம்ஸின் மெகா செலிப்ரேஷன் மேளா
சென்னை: கமல் நடிப்பில் கடந்த மார்ச் மாதம் வெளியான விக்ரம் திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது.
லோகேஷ் கனகராஜ் இயக்கிய இந்தப் படத்தில் கமலுடன் விஜய், சேதுபதி, ஃபஹத் பாசில், சூர்யா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
விக்ரம் படம் 400 கோடிக்கும் மேல் வசூலித்ததோடு, திரையரங்குகளிலும் 100 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடியது.

கோலிவுட் மெகா மஜா
அரசியலில் இருந்து மீண்டும் சினிமா பக்கம் வந்த கமல், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'விக்ரம்' படத்தில் நடித்தார். கமலுடன் விஜய் சேதுபதி, ஃபஹத் பாசில், சூர்யா, நரேன், காளிதாஸ் ஜெயராம் என மல்டிஸ்டார்ஸ் படமாக உருவான விக்ரம், கடந்த மார்ச் 3ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. அதுவரை கமலின் திரைப்படங்கள் செய்யாத சாதனையை விக்ரம் நிறைவேற்றியது. பிரம்மாண்டமான மல்டி ஸ்டார்ஸ் படமான விக்ரம், ரசிகர்களிடம் தரமான வரவேற்பைப் பெற்றது. சுருக்கமாக சொல்ல வேண்டுமானால் இந்தப் படம் கோலிவுட்டின் மெகா மஜாவாக மாறியது.

வெற்றிகரமான 100 நாட்கள்
150 கோடி ரூபாய் பட்ஜெட்டில் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரித்த 'விக்ரம்' ரசிகர்களிடம் கிடைத்த தாறுமாறான வரவேற்பால் 400 கோடிக்கும் மேல் வசூலித்து பாக்ஸ் ஆபிஸையே அதிர வைத்தது. அதுமட்டும் இல்லாமல், திரையரங்குகளில் 100 நாட்கள் ஓடி புதிய சாதனையை படைத்தது. கடந்த சில வருடங்களாக திரையரங்குகளில் வெளியாகும் படங்கள் 100 நாட்கள் ஓடுவது என்பது ரொம்பவே அரிதான விசயம். இந்நிலையில், விக்ரம் திரையரங்குகளில் 100 நாட்கள் ஓடியது குறிப்பிடத்தக்கது.

100வது வெற்றி விழா
இதனையடுத்து விக்ரம் படத்தின் 100வது நாள் வெற்றி விழாவை நடத்த ராஜ்கமல் பிலிம்ஸ் முடிவு செய்துள்ளது. மேலும், அதற்கான அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது. அதன்படி, கமல்ஹாசனின் பிறந்தநாளான நவம்பர் 7ம் தேதி விக்ரம் 100வது நாள் வெற்றிவிழா கொண்டாடப்படுகிறது. சென்னை கலைவாணர் அரங்கத்தில் நவம்பர் 7ம் தேதி மாலை 5 மணிக்கு இந்நிகழ்ச்சி நடைபெறுகிறது. மேலும், இதில், விக்ரம் படத்தில் பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள் உள்ளிட்ட அனைவரும் கெளரவிக்கப்பட உள்ளனர்.

விக்ரம் கொண்டாட்டம்
கமலுக்கு இமாலய வெற்றியை கொடுத்துள்ள விக்ரம் படம், ஓடிடி ரசிகர்களிடம் அதிகமான வரவேற்பைப் பெற்றுள்ளது. விக்ரம் படம் கொடுத்த உற்சாகத்தால் கமல் அடுத்து இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். மேலும், இரண்டு படங்களுக்கான கதை விவாதத்தில் கமல் பிஸியாக இருப்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், ஏற்கனவே விக்ரம் படத்திற்கு அடுத்தடுத்து இரண்டு சக்ஸஸ் மீட் நடத்தி தடபுடலாக விருந்து கொடுத்து கமல், இப்போது விருதும் கொடுக்க தயாராகியுள்ளது திரையுலகினர் மத்தியில் பாராட்டுகளை பெற்றுள்ளது.


Click it and Unblock the Notifications











