முன்னணி பாகிஸ்தான் செய்தி இணையதளத்தில் கமலின் விஸ்வரூபம் நியூஸ்

By Siva

Vishwaroopam
சென்னை: நம் அண்டை நாடான பாகிஸ்தானின் முன்னணி நாளிதழ் ஒன்று தனது இணையதளத்தில் கமல் ஹாசனின் விஸ்வரூபம் பற்றி செய்தி வெளியிட்டுள்ளது.

உலக நாயகன் கமல் ஹாசனின் விஸ்வரூபம் படம் அதன் தொழில்நுட்பத்திற்காக பெரிய அளவில் பேசப்படும் என்றார்கள். ஆனால் அதன் டிரெய்லர் பாகிஸ்தான் ஊடகங்களைக் கவர்ந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தானின் முன்னணி நாளிதழ் டெய்லிடைம்ஸ். அதன் இணையதளத்தில் இன்று நம் உலக நாயகன் கமல் ஹாசனின் விஸ்வரூபம் பற்றி செய்தி வந்துள்ளது.

கமலின் விஸ்வரூபம் படத்தின் டிரெய்லர் அனைவரையும் கவர்ந்து வருகிறது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கமல் ஸ்டார் ஆன்லைனுக்கு அளித்த பேட்டியை டெய்லிடைம்ஸ் வெளியிட்டுள்ளது.

கமலின் பேட்டி,

விஸ்வரூபம் சர்வதேச கதை கொண்டது. இந்த படம் சர்வதேச தரத்தை எட்டினால் எங்கள் வேலையை ஒழுங்காக செய்திருக்கிறோம் என்று அர்த்தம் என்று கூறியுள்ளார்.

உலகம் முழுவதும் 3,000 பிரிண்ட்களில் வெளியாகும் முதல் இந்திய படம் விஸ்வரூபம் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X