இனிமே இப்படி பண்ணா வெளியே அனுப்பிடுவோம்.. எச்சரித்த கமல்.. மன்னிப்பு கேட்ட அர்ச்சனா!

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் நேற்றைய எபிசோடில் கமல் கடுமையாக எச்சரித்ததை தொடர்ந்து மன்னிப்பு கேட்டார் அர்ச்சனா.

Recommended Video

சென்னை: அப்பீட்டான அறந்தாங்கி நிஷா.. அழுகாச்சி காவியமான பிக்பாஸ்.. புலம்பும் ரசிகர்கள்..!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் அவ்வப்போது மைக்கை கழட்டி வைத்து விட்டு பேசுவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர் ஹவுஸ்மேட்ஸ்.

கடந்த சீசனில் லாஸ்லியாவும் கவினும் மிட் நைட்டில் மைக்கின் பேட்டரியை கழட்டிவிட்டு பேசினர். அப்போது அவர்களை எச்சரித்த கமல், மீண்டும் தொடர்ந்தால் வெளியேற்றப்படுவீர்கள் என்றார்.

மைக்கை கழட்டும் அர்ச்சனா

மைக்கை கழட்டும் அர்ச்சனா

இந்நிலையில் இந்த சீசனில் பாலாஜி அடிக்கடி மைக்கை மாட்டாமல் சுற்றி திரிவதையும் அர்ச்சனா மைக்கை கழட்டி வைத்துவிட்டு பேசுவதையும் வாடிக்கையாக கொண்டிருக்கிறார். அர்ச்சனா மைக்கை கழட்டும் சில காட்சிகளை பார்த்த ரசிகர்கள் அவரை வெளியேற்ற வேண்டும் என சமூக வலைதளங்களில் கோரிக்கை விடுத்து வந்தனர்.

கையில் எடுத்த கமல்

கையில் எடுத்த கமல்

இந்நிலையில் நேற்றைய எபிசோடில் மைக் மேட்டரை கையில் எடுத்தார் கமல். அப்போது பேசிய அவர் எல்லாரும் மைக்கை சரியா போட்ருக்கீங்களா என்றார். மேலும் அப்பப்போ எல்லாரும் கழட்டி வச்சுடுறீங்களே.. என்று கேட்டு அர்ச்சனா பக்கம் திரும்பினார்.

நல்லா நடிக்கிறீங்களே

நல்லா நடிக்கிறீங்களே

அர்ச்சனா கழட்டி வைப்பது வேறு விதமாக எனக்கு தோன்றுகிறது என்று கூறினார் கமல். அதற்கு எப்போ சார் என்று ஒன்றுமே தெரியாதது போல் கேட்ட அர்ச்சனாவுக்கு , நல்லா நடிக்கிறீங்களே என்பதை போல ஆகா.. என்றார் கமல்.

ஒப்புக்கொண்ட அர்ச்சனா

ஒப்புக்கொண்ட அர்ச்சனா

தொடர்ந்து எப்போதெல்லாம் அர்ச்சனா மைக்கை கழட்டி வைத்தார் என்று பட்டியல் போட்டார் கமல். அதன்பிறகு தான் மைக்கை கழட்டி வைத்ததை ஒப்புக்கொண்ட அர்ச்சனா, லேட் நைட்ல சும்மா சிரிப்பு விஷயத்தைதான் பேசுவோம், அதில் எந்த கன்டென்ட்டும் இருக்காது சார் அதனால் கழட்டி வைத்தோம் என்றார்.

நிஷா அழுதார்

நிஷா அழுதார்

மேலும் ஜித்தன் ரமேஷ் போயிடுவாரு என்ற பயம் இருந்தது. பின்னர் ஷிவானி ரொம்ப லோவாகி அழுதார், அவருடைய பிரைவேசிக்கு மரியாதை கொடுத்து மைக்கை கழட்டி வைத்தேன். நிஷா அழும் போது கழட்டி வைத்தேன் என தான் கழட்டி வைத்ததையெல்லாம் கூறினார் அர்ச்சனார்.

ஏன் கழட்ட வேண்டும்

ஏன் கழட்ட வேண்டும்

அப்போது அனிதா சிரிக்க, என்ன அனிதா ஏதோ சிரிக்கிறீங்களே என்று கேட்டார் கமல். அதற்கு இவ்ளோ பேருக்கிட்டே பேசியிருக்காங்க எதுவுமே தெரியல என்றார் அனிதா. மேலும் மைக்கை கழட்டக்கூடாது என்பது விதிமுறையில் இருக்கும் போது அதை ஏன் கழட்ட வேண்டும் என்றார்.

மன்னிப்பு கேட்ட அர்ச்சனா

மன்னிப்பு கேட்ட அர்ச்சனா

தொடர்ந்து பேசிய கமல், எந்த காரணம் கொண்டும் யாரும் மைக்கை கழட்ட கூடாது என்றார். மேலும் இதுமாதிரி செய்தவர்களை இதற்கு முந்தைய சீசன்களில் வெளியே அனுப்பியிருக்கிறோம் என்றும் எச்சரித்தார் கமல். இதனை தொடர்ந்து கமலிடம் மன்னிப்பு கேட்டார் அர்ச்சனா.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X