Just In
- 1 hr ago
நம்புங்க நானும் நல்லவன்தான்.. ஏவியை பார்த்து ஃபீல் பண்ணிய பாலா.. கடைசியா பேசியது இதுதான்!
- 6 hrs ago
காயப்படுத்தியிருந்தால் மன்னித்து விடுங்கள்.. ஃபினாலே மேடையில் விழுந்து உருக்கமாக மன்னிப்பு கேட்ட ஆரி
- 6 hrs ago
கடைசியா நேர்மை வென்று விட்டது.. பிக் பாஸ் டைட்டில் வின்னர் ஆரி.. ரன்னர்-அப் பாலாஜி முருகதாஸ்!
- 7 hrs ago
கதர் ஆடையை கையில் எடுத்த கமல்.. புதிய ஃபேஷன் பிராண்ட் ‘KH’ .. போட்டியாளர்களுக்கு கதர் துணி பரிசு!
Don't Miss!
- News
குடியரசு தினத்தன்று டெல்லியில் ஒரு லட்சம் டிராக்டர் பேரணி நடக்குமா.. சுப்ரீம் கோர்டில் இன்று விசாரணை
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 18.01.2021: இன்னைக்கு இந்த ராசிக்காரங்க வாயை திறக்காம இருக்குறது நல்லது…
- Finance
48% அதிகரிப்பாம்.. பெட்ரோல், டீசல் மீதான வரியால் தூள் கிளப்பிய வரி வசூல்.. !
- Automobiles
20-இன்ச் அலாய் சக்கரங்களுடன் கியா சொனெட் காரை பார்த்திருக்கீங்களா?! இங்க பாத்துக்கோங்க
- Sports
வலிமையான அணிகள் மோதும் 62வது போட்டி... பரபர அனுபவத்திற்கு தயாராகும் ரசிகர்கள்!
- Education
ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
வயலன்ஸின் விளிம்பு.. வேடிக்கை பார்க்க முடியாது.. செருப்பால் அடித்துக்கொண்ட பாலாஜிக்கு கமல் வார்னிங்!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது புரமோவில் சனம் ஷெட்டியுடனான சண்டையின் போது பாலாஜி தன்னைத்தானே செருப்பால் அடித்துக்கொண்ட சம்பவத்தை கையில் எடுத்துள்ளார் கமல்.
கடந்த பிக்பாஸ் சீசன்களை காட்டிலும் இந்த பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லாமல் உள்ளது.
நேஷனல் தொலைக்காட்சி சேனல் நிகழ்ச்சியில் பங்கேற்றிருக்கிறோம் என்ற நினைப்பே இல்லாமல் விளையாடி வருகின்றனர் போட்டியாளர்கள்.
நேத்து பிக்பாஸ் செஞ்சாரு.. இன்னைக்கு கமல் வச்சி செய்றாரு போல.. புரமோவால் ஹேப்பியான நெட்டிசன்ஸ்!

குழாயடி சண்டை
குறிப்பாக பாலாஜி முருகதாஸ், சனம் ஷெட்டி, அர்ச்சனா ஆகியவர்கள் குழாயடி சண்டை போட்டுக்கொள்வதை போல் மோசமான பாடி லாங்குவேஸையும் வார்த்தைகளையும் வெளிப்படுத்தி வருனிற்னர். நாடா காடா டாஸ்க்கின் போது சுரேஷ் சக்கரவர்த்தியை அவனே இவனே என்று பேசினார் சனம்.

ரெட் கார்டு கொடுங்கள்
அதன்பிறகு சனம் ஷெட்டி அழகிப்போட்டியில் வெற்றி பெற நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுடன் அட்ஜெஸ்ட்மென்ட் செய்ததாக பேசினார். மேலும் அவளே இவளே என்றும் தறுதலை என்றும் தரக்குறைவாக பேசினார் பாலாஜி. அப்போது அவருக்கு ரெட்கார்டு கொடுக்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்தன.

காலை நீட்டிய பாலாஜி
ஆனால் நிகழ்ச்சி தரப்பு டிஆர்பியில் மட்டுமே கவனம் செலுத்தியது. இதனால் மீண்டும் மீண்டும் தன் இஷ்டத்துக்கு ஆடி வருகிறார் பாலாஜி. கடந்த வாரம் ஆரியுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பாலாஜி, வேற எதையாவது நீட்டி பேசுவேன் எனக்கூறி காலை நீட்டி பேசினார்.

சனமுடன் வாக்குவாதம்
பாலாஜியின் அந்த நடவடிக்கைக்கும் கமல் எந்த கண்டனமும் தெரிவிக்கவில்லை. இந்நிலையில் நேற்று முன்தினம் பிக்பாஸ் வீட்டில் நடைபெற்ற ரேங்க் டாஸ்க்கின் போது, சனம் ஷெட்டியுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார் பாலாஜி.

செருப்பால் அடித்துக்கொண்டு
ஒரு கட்டத்தில் சனம் ஷெட்டியின் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் திணறிய பாலாஜி, தன் காலில் போட்டிருந்த செருப்பைக் கழட்டி தன்னைத்தானே கன்னத்தில் செருப்பால் அடித்துக்கொண்டார்.

மூன்றாவது புரமோ
பாலாஜியின் இந்த செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை பார்த்த ரசிகர்கள் இதையாவது கமல் கண்டிப்பாரா என கேள்வி எழுப்பினர். இந்நிலையில் இன்றைய எபிசோடுக்கான மூன்றாவது புரமோ வெளியாகியுள்ளது.

3 செருப்பு வச்சுருக்கார்
இதில் பாலா செருப்பால் அடித்துக்கொண்ட விவகாரத்தை கையில் எடுத்துள்ளார் கமல். அதில் பேசும் கமல், இந்த கோவிட் காலத்துல வெளியே போட்டுக்க ஒரு செருப்பு, வீட்டுக்குள்ள ஒரு செருப்புன்னு ரெண்டு வச்சுருக்காங்க. ஆனால் பாலாஜி 3 செருப்பு வச்சுருக்கார்.

பயமுறுத்தி விட்டார்
வெளியில ஒன்னு, வீட்டுக்குள்ள ஒன்னு மூஞ்சில அடிச்சுக்க ஒன்னு என்று கூறுகிறார். தெடர்ந்து சனம் ஷெட்டியிடம் பேசும் கமல், சனம் உங்களை அவமானப்படுத்திட்டாருன்னு நினைச்சீங்க என்றார். அதற்கு சனம் ஆமாம் என்று பதிலளிக்க, எனக்கு பயமுறுத்திவிட்டார் என்கிறார் கமல்.

வேடிக்கை பார்க்க முடியாது
தொடர்ந்து பேசும் கமல், குமுறும் ஒரு கோபமாகதான் இருந்தது. வயலன்சுடைய விளிம்பு அது. இதை வேடிக்கை பார்த்துட்டு இருக்க முடியாது என படு கோபமாக பேசுகிறார் கமல். கமலின் பேச்சைக் கேட்டு பாலாஜியின் முகம் அப்படியே மாறுகிறது. இப்படியாக உள்ளது பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது புரமோ.