செருப்பால் அடித்த விவகாரம்: அர்ச்சனா அன்பு மெடிக்கல் லீவுல போயிருச்சு.. மொத்தமாய் டேமேஜ் செய்த கமல்!

சென்னை: சனம் ஷெட்டியுடனான பிரச்சனையின் போது, தன்னைத்தானே செருப்பால் அடித்துக் கொண்ட பாலாஜியை கடுமையாக எச்சரித்தார் கமல்.

பிக்பாஸ் வீட்டில் கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற ரேங்க் டாஸ்க்கில் சனம் ஷெட்டிக்கும் பாலாஜிக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.

அப்போது பாலாஜி பாணியிலேயே கையை நீட்டி பேசாதீர்கள் என்று அவரை வெறுப்பேற்றினார் சனம் ஷெட்டி. இதனை தொடர்ந்து, தான் போட்டிருந்த செருப்பை கழட்டி தன்னையே அடித்துக்கொண்டார் பாலாஜி.

ரொம்ப வசதி போல

ரொம்ப வசதி போல

இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் நேற்றைய எபிசோடில் இந்த விவகாரத்தை கையில் எடுத்தார் கமல். அப்போது பேசிய அவர், கோவிட் காலத்துல எல்லோரும் ரெண்டு செருப்பு வச்சுருக்காங்க. உள்ள ஒன்னு வெளியே ஒன்னுன்னு. பாலாஜிக்கு ரொம்ப வசதி போல 3 செருப்பு வச்சுருக்காரு.

வெளியே போய் பண்ணாதீங்க

வெளியே போய் பண்ணாதீங்க

உள்ள ஒன்னு, வெளியே ஒன்னு, மூஞ்சில அடிச்சுக்க ஒன்னுன்னு. பிக்பாஸ் வீட்டுல ரொம்ப சுத்தமா வச்சுருக்காங்க, அதே பழக்கத்துல வெளியே வந்து அப்படி பண்ணிடாதீங்க என்றார் கமல். அதற்கு பதில் சொல்ல பாலாஜி, எங்கேயுமே அப்படி பண்ணக் கூடாது சார் என்றார்.

வேடிக்கை பார்க்க முடியாது?

வேடிக்கை பார்க்க முடியாது?

அதனைக் கேட்ட கமல் தெரியும்ல அப்புறம் ஏன் பண்ணீங்க என்றார். தொடர்ந்து சனம் ஷெட்டியிடம் பேசிய கமல், நீங்கள் அதை அவமானமாக நினைச்சீங்க. ஆனா எனக்கு ரொம்ப பயமா இருந்துச்சு. அது உள்ளே குமுறும் கோவமாய் இருந்துச்சு.. அது வயலென்சின் விளிம்பு. இதையெல்லாம் வேடிக்கை பார்த்துட்டு இருக்க முடியாது என்று பாலாஜியை எச்சரித்தார்.

அன்பு மெடிக்கல் லீவுல இருந்துச்சு

அன்பு மெடிக்கல் லீவுல இருந்துச்சு

தொடர்ந்து மற்ற ஹவுஸ் மேட்டுகளையும் விளாசி விட்டார். வீட்டுல ஒரு அநீதி நடக்கும்போது அதை வேடிக்கை பார்க்க கூடாது. இந்த பிரச்சனை நடக்கும் போது அர்ச்சனாவின் அன்பு மெடிக்கல் லீவுல போயிருந்துச்சு என்று அர்ச்சனாவை படு பங்கமாக டேமேஜ் செய்தார்.

விபத்த வீடியோ எடுப்பாங்க

விபத்த வீடியோ எடுப்பாங்க

அதற்கு பதில் சொன்ன அர்ச்சனா, சார் பாலாஜி அடித்துக்கொண்டார் என்பதே எனக்கு லேட்டாகத்தான் புரிந்தது என்று கமலுக்கு விளக்கம் கொடுத்தார். அதனைக் கேட்ட கமல் ரொம்ப கனிவாதான் அடிச்சுக்கிட்டாரு. ஆனால் சனம் ஷெட்டிக்கு ஒரு பிரச்சனை என்றால் யாரும் கேட்கலையே என்று விளாசிய கமல், விபத்து நடக்கும் போது சிலர் வீடியோதான் எடுப்பாங்க.

வயலென்ட் பிஹேவியர்

வயலென்ட் பிஹேவியர்

உதவி பண்ண மாட்டாங்க. அப்படி இருக்க கூடாது என அட்வைஸ் கூறினார். அதற்கு பதில் சொன்ன அர்ச்சனா
உடனே சொன்னோம் சார் பாலாஜி அப்படி பண்ணியிருக்கக் கூடாதுன்னு சொன்னோம் என்றார். மேலும் வயலென்ட் பிஹேவியரா இருந்துச்சு சார் என்றும் கூறினார் அர்ச்சனா.

டொமஸ்ட்டிக் வயலென்சு

டொமஸ்ட்டிக் வயலென்சு

இதனைக் கேட்ட கமல், அந்த வயலென்சுதான் இந்த வீட்டுல வரவே கூடாது. டொமஸ்ட்டிக் வயலென்சு என்பது புருஷன் பொண்டாட்டியை அடிக்கிறது மட்டும் இல்ல. அப்பா பொண்ண அடிக்கிறது, அண்ணன் தங்கையை அடிப்பதும்தான். அது இந்த வீட்டுல நடக்ககூடாது. டொமஸ்டிக் வயலென்சு பத்தி உங்களுக்கு புரியாததா பாலாஜி, நானா உங்களுக்கு சொல்லணும் என்றார்.

பிராக்டீஸ் வாட் யூ பிரீச்

பிராக்டீஸ் வாட் யூ பிரீச்

மேலும் பேசிய கமல், உங்க கதைப்படி நீங்கள் டொமஸ்ட்டிக் வயலென்சால் பாதிக்கப்பட்டவர். பிராக்டீஸ் வாட் யூ பிரீச் என்ற கமல், ஆரி கையை நீட்டி பேசிய போது உங்களுக்கு கோபம் வந்துச்சு. அதுவே உங்களுக்கு சனம் சொன்னப்போது அவரை மன்னிப்பு கேட்க சொல்றீங்க.. என்று கேட்டார்.

அடங்கு என்று சொன்னார்

அடங்கு என்று சொன்னார்

அதற்கு பதில் சொன்ன பாலாஜி, நான் மன்னிப்பெல்லாம் கேட்க சொல்லவில்லை என்று அண்ட புளுகு புளுகினார். இதனை சனம் ஷெட்டியிடம் உறுதி செய்தார் கமல். அதற்கு பதில் சொன்ன சனம் என்னை அடங்கு என்று சொன்னது எனக்கு ரொம்பவே ஹர்ட்டாய் இருந்தது சார்.

Recommended Video

கல்யாணம் ஒரு சூதாட்டம் | ACTRESS VIMALA RAMAN CHAT PART-02 | FILMIBEAT TAMIL
வெறுப்பேற்றிய கமல்

வெறுப்பேற்றிய கமல்

செருப்பால அவர் அடிச்சுக்கிட்ட போதுக்கூட யாரும் ஒருவார்த்தை கூட கேட்கவில்லை என்று நொந்துக் கொண்டார். தொடர்ந்து பேசிய கமல், பாலாஜியிடம் மீண்டும் யு கேன் பிராக்டீஸ் வாட் யூ பிரீச் என்று சொல்லி வெறுப்பேற்றினார். மேலும் ஆரிய கையைநீட்டி பேசாதீங்கன்னு சொன்னீங்க, நீங்க அதையே சனம் ஷெட்டியிடம் பண்ணியிருக்கீங்களே என்றார்.

எல்லை தாண்டாதீர்கள்

எல்லை தாண்டாதீர்கள்

அதையும் ஏற்றுக்கொள்ளமல் கமலிடம் வாக்குவாதம் செய்தார் பாலாஜி. மேலும் நான் சொன்ன இன்டென்ஷன் வேற எனறார். என்ன இன்டெனஷனா இருக்க முடியும் என்ற கமல் எல்லைத் தாண்டி போகக்கூடாது என்றும் பாலாஜியை கடுமையாக எச்சரித்த்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X