கமல்ஹாசனுடன் ரிலேஷன்ஷிப்பில் இருந்த நடிகை.. உண்மை தெரிந்து பால்கனியில் இருந்து குதித்த நடிகை!

சென்னை: களத்தூர் கண்ணம்மா படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான கமல்ஹாசன், முதல் படத்திற்கே சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருதை வென்றார். இதை தொடர்ந்து பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த கமல், இளம் வயதை எட்டியதும் தன்னை சினிமாவில் கதாநாயகனாக நிலை நிறுத்திக் கொண்டார். இதையடுத்து, கமல்ஹாசன் இயக்குனர் கே.பாலச்சந்தர் படத்தில் ஹீரோவாக அறிமுகமாகி இன்று வரை அனைவருக்கும் பிடித்த நடிகராகவே இருக்கிறார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என அனைத்து மொழி பேசும் மக்களுக்கும் பிடித்தமான நடிகராக இருக்கிறார் கமல்ஹாசன். இவருடன் சேர்ந்து நடித்த அனைத்து நடிகைகளும் இவரின் அழகு, திறமையைப் பார்த்து காதல் வயப்படக்கூடி அளவில் கமல் இருந்தார். நடிகர் கமல், நடிகை ஸ்ரீவித்யாவுடன் அபூர்வ ராகங்கள் படத்தில் நடித்த போதே இருவரும் ஒருவரை ஒருவர் காதலிக்க தொடங்கினார்கள்.

kamal gautami relationship

இருவரும், திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். ஆனால், ஸ்ரீவித்யாவின் தாயார் இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து, இந்த காதல் முடிந்து போனது.

நடிகர் கமல்ஹாசன்: அதன்பின் கமல்ஹாசன் 1978ல் வாணி கணபதியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரும் பத்து ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்த நிலையில், 1988ம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தனர். கமல்ஹாசன் வாணி கணபதியை பிரிய காரணம் நடிகை சரிகா தான் என கூறப்படுகிறது. கமல், சரிகாவுடன் பழகியது வாணி கணபதிக்கு தெரியவந்ததை அடுத்து இருவரும் பிரிந்துவிட்டனர். பின் அதே ஆண்டில் சரிகாவை கமல்ஹாசன் திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஸ்ருதி ஹாசன் மற்றும் அக்ஷரா ஹாசன் என இரண்டு மகள்கள் உள்ளனர்.

தற்கொலை முயற்சி: சரிகாவை கமல் திருமணம் செய்து கொண்ட பிறகும், தன்னுடன் பல படத்தில் இணைந்து நடித்த நடிகை கவுதமியுடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த விஷயம் சரிகாவின் காதுக்கு வர, அவர் கமல்ஹாசனுடன் இதுகுறித்து பேசி இருக்கிறார். இருப்பினும் கமல், கௌதமியின் உறவை முறித்துக்கொள்ளாததால், விரக்தி அடைந்த சரிகா பால்கனியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். இதில், காயங்களுடன் சரிகா உயிர் தப்பினார்.அதன் பிறகுதான் சரிகா மும்பைக்கு சென்று அங்கேயே செட்டிலாகி தற்போது சின்னச்சின்ன கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

பிரிந்தனர்: கமலின் வாழ்க்கையில் இருந்து சரிகா விலகியதை அடுத்து, கமல் கௌதமியை திருமணம் செய்து கொள்ளாமல் இருவரும் ஒரே வீட்டில் வாழ்ந்து வந்தனர். இதற்கு ஸ்ருதி ஹாசன் மற்றும் அக்ஷரா ஹாசன் இருவருக்கும் விருப்பமே இல்லாததால், ஸ்ருதி டெல்லி சென்றுவிட்டார். அக்ஷரா தனது தாயுடன் வசித்து வருகிறார். மேலும், கமலும் கௌதமியும் சில ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்து வந்த நிலையில், கௌதமி, தனது மகளின் எதிர்காலத்தை நினைத்து இந்த உறவில் இருந்து பிரிவதாக அறிக்கை வெளியிட்டுவிட்டு இருவரும் பிரிந்தனர். கமல்,கௌதமி இருவரும் பிரிந்ததற்கான காரணம் என்ன என யாருக்கும் தெரியாத நிலையில், அண்மையில் இதுகுறித்து பேட்டி அளித்த நடிகை கௌதமி, ஒரு ரிலேஷன்ஷிப்பில் நீங்கள் இருக்கும்போது அது ஒர்க் அவுட் ஆகவில்லை என்றால் அதில் நீங்கள் நீடிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. இருவருக்கும் இடையேயான அன்பு, அர்ப்பணிப்பு போன்றவை ஒரே அளவாக இருக்க வேண்டும் என கூறியிருந்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X