சிம்புவுக்காக எதையும் செய்ய துணிந்த கமல்... தயாரிப்பாளர் மட்டுமல்ல... STR 48ல் இப்படியொரு சம்பவமா?

சென்னை: கோலிவுட்டின் டாப் ஹீரோவாக கலக்கி வரும் சிம்பு பத்து தல படத்தில் நடித்துள்ளார்.

கிருஷ்ணா இயக்கத்தில் ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ள இந்தப் படம், வரும் 30ம் தேதி வெளியாகிறது.

இதனைத் தொடர்ந்து சிம்பு நடிக்கும் STR 48 படத்தை கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கிறது.

தேசிங்கு பெரியசாமி இயக்கும் இந்தப் படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்கவுள்ள நிலையில், தற்போது புதி அப்டேட் கிடைத்துள்ளது.

 கமலுடன் இணைந்த சிம்பு

கமலுடன் இணைந்த சிம்பு

மாநாடு, வெந்து தணிந்தது காடு படங்களுக்கு கிடைத்த வரவேற்பால், சிம்பு மீண்டும் நடிப்பில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். கிருஷ்ணா இயக்கத்தில் அவர் நடித்துள்ள பத்து தல வரும் 30ம் தேதி ரிலீஸாகிறது. இந்தப் படத்தில் ஏஜிஆர் என்ற கேங்ஸ்டர் பாத்திரத்தில் சிம்பு நடித்துள்ளார். ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ள பத்து தல, சிம்புவுக்கு மீண்டும் ஒரு மாஸ் ஹிட் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து கமல்ஹாசன் தயாரிப்பில் தனது 48வது படத்தில் நடிக்கிறார் சிம்பு.

 புதிய கூட்டணியில் STR 48

புதிய கூட்டணியில் STR 48

கமலின் விக்ரம் படம் ப்ளாக் பஸ்டர் ஹிட் ஆனதையடுத்து, சிவகார்த்திகேயன் - ராஜ்குமார் பெரியசாமி கூட்டணியில் ஒரு படத்தை தயாரிக்கிறது ராஜ்கமல் பிலிம்ஸ். இதனைத் தொடர்ந்து சிம்புவின் STR 48 படத்தையும் தயாரிப்பதாக ராஜ்கமல் பிலிம்ஸ் அறிவித்துள்ளது. கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் மூலம் பிரபலமான தேசிங்கு பெரியசாமி, சிம்புவின் புதிய படத்தை இயக்கவுள்ளார். விக்ரம் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் சிம்புவும் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அப்போது கமல் - சிம்பு கூட்டணி விரைவில் இணையலாம் என பேச்சுகள் எழுந்தன.

 சிம்புக்காக களமிறங்கும் கமல்

சிம்புக்காக களமிறங்கும் கமல்

அதன்படி தற்போது சிம்புவின் STR 48 படத்தை தயாரிக்கிறது கமலின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ். BLOOD and BATTLE என்ற கேப்ஷனுடன் STR 48 படத்தின் மினி டீசரையும் ராஜ்கமல் பிலிம்ஸ் வெளியிட்டது. சூப்பர் ஸ்டார் ரஜினிக்காக கதை தயார்செய்து வைத்திருந்த தேசிங்கு பெரியசாமி, சிம்புவுடன் இணைந்ததை யாருமே எதிர்பார்க்கவில்லை. இந்நிலையில், இந்தப் படத்தை கமல் தயாரிப்பதோடு மட்டுமின்றி, கேமியோ ரோலிலும் நடிக்கவுள்ளராம்.

 ரோலக்ஸ் கமல் வெர்ஷன்

ரோலக்ஸ் கமல் வெர்ஷன்

இந்த கேமியோ ரோல், விக்ரம் படத்தில் ரோலக்ஸ் கேரக்டரில் நடித்த சூர்யாவின் கேரக்டரைப் போல செம்ம பவர்ஃபுல்லாக இருக்கும் என சொல்லப்படுகிறது. முழுக்க முழுக்க ஆக்‌ஷன் ஜானரில் உருவாகும் STR 48 படத்தில் சிம்புவின் கேரக்டர் சர்ப்ரைஸ் ட்ரீட்டாக இருக்கும் என கூறப்படுகிறது. ஆனால், கமலின் கேமியோ ரோல் அதைவிடவும் இன்னும் வெயிட்டேஜ்ஜாக இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. சிம்புவுக்காகவே கமல் இந்த கேரக்டரில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளாராம்.

 எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

சிம்புவை வைத்து படம் தயாரிப்பது மட்டும் இல்லாமல், அவருக்காக கமலும் நடிக்கவுள்ளது கோலிவுட்டையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. சிம்புவின் வெந்து தணிந்தது காடு, பத்து தல படங்கள் கேங்ஸ்டர் ஜானரில் உருவாகியிருந்தன. இப்போது STR 48 திரைப்படமும் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இந்தப் படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்கவுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இதனிடையே ஸ்டூடியோ க்ரீன் தயாரித்துள்ள பத்து தல வரும் 30ம் தேதி வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X