நடிக்க வரும் அக்ஷராவுக்கு அப்பா கமல் வாழ்த்து
பனாஜி: ஆர். பால்கி படத்தில் நடிக்கவிருக்கும் எனது இளைய மகள் அக்ஷராவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கோவா திரைப்பட விழாவில் கமல் கூறினார்.
கமல் ஹாஸனின் மூத்த மகள் ஸ்ருதி ஹாஸன் பெற்றோர் வழியில் நடிக்க வந்துவிட்டார். மேலும் படங்களில் பாடல்களும் பாடி வருகிறார். ஆனால் அவரது தங்கை அக்ஷரா ஹாஸன் நடிக்க வாய்ப்புகள் வந்தும் அவற்றை எல்லாம் மறுத்து வந்தார்.
இந்நிலையில் அவரது மனம் மாறியுள்ளது.

அக்ஷரா
இந்தி பட இயக்குனர் ஆர்.பால்கி தனுஷை வைத்து எடுக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார் அக்ஷரா ஹாஸன். இந்த படத்தில் அமிதாப் பச்சனும் நடிக்கிறார்.

அமிதாப் ட்வீட்
ஆர். பால்கியின் படத்தில் தனுஷ், கமலின் மகள் அக்ஷரா ஹாஸனுடன் சேர்ந்து நடிக்கவிருக்கிறேன் என்று அமிதாப் பச்சன் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

தனுஷ்
பிக் பியுடன்(அமிதாப் பச்சன்) சேர்ந்து நடிப்பது பெரிய கௌரவம். மீண்டும் ராஜா சார் இசையில் நடிப்பது மகிழ்ச்சியாக உள்ளது. ஒரு வழியாக பி.சி. சாருடன் சேர்ந்து பணியாற்றும் வாய்ப்பு கிடைத்துள்ளது என்று தனுஷ் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

கமல் வாழ்த்து
இளைய மகள் நடிக்க வருவது பற்றி கமல் ஹாஸனிடம் கோவா திரைப்பட விழாவில் கேட்கப்பட்டது. அதற்கு அவர் கூறுகையில், அக்ஷரா பால்கி இயக்கத்தில் நடிக்கிறார். மகிழ்ச்சியாக உள்ளது. அவருக்கு என்னுடைய வாழ்த்துக்கள் என்றார்.


Click it and Unblock the Notifications











