மனதளவில் இளமை மாறாத அண்ணன்... புத்தாண்டு வாழ்த்து சொன்ன கமல்!

சென்னை : புத்தாண்டு கொண்டாட்டம் நாளைய தினம் சிறப்பான வகையில் கொண்டாடப்பட உள்ளது.

இதையொட்டி இசைஞானி இளையராஜா அனைவருக்கும் உற்சாக கொண்டாட்டத்துடன் புத்தாண்டு வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளார்.

அவரின் இந்த வீடியோ குறித்து பேசியுள்ள நடிகர் கமல்ஹாசன் புத்தாண்டு வாழ்த்துக்கயும் தெரிவித்துள்ளார்.

இசைஞானி இளையராஜா

இசைஞானி இளையராஜா

இசைஞானி இளையராஜா தன்னுடைய சிறப்பான இசை மூலம் அனைவரையும் கவர்ந்தவர். இவரது எவர்கிரீன் பாடல்கள் எப்போதும் அனைவரையும் கவர்ந்து வருகின்றன. எப்போது கேட்டாலும் இவரது பாடல்கள் அனைவரையும் மெய்சிலிர்க்க வைப்பவை.

அடக்கமான செயல்பாடு

அடக்கமான செயல்பாடு

தற்போது வரை இவர் தன்னுடைய இசையமைப்பால் அனைவரையும் கவர்ந்து வருகிறார். தொடர்ந்து புதிய படங்களில் கமிட்டாகி பல ஹிட் நம்பர்களை கொடுத்து வருகிறார். எப்போதும் தனது அடக்கமான செயல்பாடுகளால் நிறைகுடம் தளும்பாது என்ற சொல்லுக்கு ஏற்றவாறு காணப்படுபவர் இளையராஜா.

ரசிகர்களுக்கு புத்தாண்டு வாழ்த்து

ரசிகர்களுக்கு புத்தாண்டு வாழ்த்து

செலக்டிவ்வான நிகழ்ச்சிகளில் மட்டுமே கலந்து கொள்வார். அதிகமாக பேசமாட்டார் என்று இவர் குறித்த விமர்சனங்கள் காணப்படுகின்றன. இந்நிலையில் தற்போது தன்னுடைய ரசிகர்களுக்கு புத்தாண்டு வாழ்த்தை மிகவும் உற்சாகமாக பதிவு செய்துள்ளார் இளையராஜா.

வீடியோவில் வாழ்த்து

வீடியோவில் வாழ்த்து

இதுகுறித்து இவர் வெளியிட்டுள்ள வீடியோவில் புத்தாண்டு வாழ்த்துக்களை பகிர்ந்துள்ள இளையராஜா, இளமை இதோ இதே என்று உற்சாகமாக பாடுகிறார். வீடியோவின் முடிவில் இது எப்படி இருக்கு என்று முடிக்கிறார். உற்சாகமான இளையராஜாவை இந்த வீடியோவில் காண முடிகிறது.

கமல்ஹாசன் பாராட்டு

கமல்ஹாசன் பாராட்டு

இந்நிலையில் இவரது இந்த உற்சாக மனநிலைக்கு நடிகர் கமல்ஹாசன் பாராட்டு தெரிவித்துள்ளார். மூன்று நாட்களுக்கு முன்பு இளையராஜாவை தான் சந்தித்ததாகவும் இளமை மாறாமல் குதூகலமாக பேசிக் கொண்டிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Recommended Video

பிரபலங்களின் புத்தாண்டு வாழ்த்துக்கள் | Tamil Filmibeat
இளமை மாறாத இளையராஜா

இளமை மாறாத இளையராஜா

அதை விட இளமை மாறாமல் இன்றைய தினம் இளமை இதோ இதோ என்று பாடிக் கொண்டிருந்ததை தான் பார்த்ததாகவும் மனதளவில் இளமை மாறாத அண்ணனுக்கு புத்தாண்டு வாழ்த்துக்கள் என்றும் அவர் கூறியுள்ளார். இளையராஜா மற்றும் கமல்ஹாசன் இருவருக்கும் சிறப்பான உறவு காணப்படுவதை பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X