தமிழகத்திலிருந்து பத்ம விருது பெற்றவர்களுக்கு கமல் வாழ்த்து.. நர்த்தகிக்கு மட்டும் ஸ்பெஷல்!
சென்னை: பத்மஶ்ரீ விருது வென்ற நர்த்தகி நடராஜுக்கு நடிகர் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் சார்பில் வழங்கப்படும் பத்ம விருது பெற்றோரின் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. பங்காரு அடிகளார், பிரபுதேவா, மதுரை சின்னப்பிள்ளை, நர்த்தகி நடராஜ், டிரம்ஸ் சிவமணி, சங்கர் மகாதேவன் உள்ளிட்டோரின் பெயர்கள் அந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
மொத்தம் 112 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில், 4 பேருக்கு பத்ம விபூஷன் விருதும், 14 பேருக்கு பத்ம பூஷண் விருதும், 94 பேருக்கு பத்மஸ்ரீ விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நர்த்தகி நடராஜனுக்கு வாழ்த்து:
அதில் தமிழகத்தைச் சேர்ந்த திருநங்கையான நர்த்தகி நடராஜுக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளதற்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் நடிகர் கமல்ஹாசனும் டிவிட்டர் வாயிலாக தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், "பத்மஶ்ரீ சகோதரி நர்த்தகி நடராஜுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகள்" என தெரிவித்துள்ளார்.
தனியே வாழ்த்து ஏன்?
ஏராளமானோர் விருது பெற்றுள்ளபோது, நர்த்தகி நடராஜுக்கு மட்டும் தனியே வாழ்த்து தெரிவித்தது ஏன் என சிலர் டிவிட்டரில் கேள்வி எழுப்பினர். தமிழகத்திலேயே இன்னும் பலர் பத்ம விருது பெற்றுள்ளனர், அவர்களுக்கும் உங்கள் வாழ்த்துக்களைக் கூறுங்கள் முதல்வரே' எனப் பதிவிட்டிருக்கிறார் இவர்.
இது தான் காரணம்:
இந்தப் பதிவிற்கு கமல் பதிலளிப்பதற்கு முன்பே, மற்றொரு ரசிகர் ஒருவர் தனது பதிவில் விளக்கமளித்துள்ளார். அதில் அவர், "ஏன் நர்த்தகி நடராஜ் அவர்களுக்கு மட்டும் சிறப்பு வாழ்த்து!!! அவர் ஒரு பரத கலைஞர் என்பதை தாண்டி, அவர் ஒரு #திருநங்கை . நம்மில் யார் வேண்டுமானாலும் விருது வாங்கலாம். சமூகத்தில் ஒரு திருநங்கை இந்த உயரத்திற்கு வருவது என்பது எளிதல்ல. அதனால் தான் #நம்மவர் இடமிருந்து சிறப்பு வாழ்த்து" என தெரிவித்துள்ளார்.
சின்னப்புள்ள:
இப்படியாக ரசிகர்கள் தங்களுக்குள் பதிவுகள் மூலம் பேசிக் கொண்டிருக்க, மீண்டும் ஒரு வாழ்த்துப் பதிவை வெளியிட்டுள்ளார் கமல். அதில், "தமிழகத்தில் இருந்து பத்மஸ்ரீ விருது பெற்ற மதுரை சின்னபுள்ள, டாக்டர்.R.V.ரமணி, டிரம்ஸ் சிவமணி, டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமல், டாக்டர். ராமசாமி வெங்கடசாமி மற்றும் பங்காரு அடிகளார் ஆகியோருக்கும் எமது நெஞ்சார்ந்த வாழ்த்துகள்" என கமல் வாழ்த்தியுள்ளார்.
பிரபுதேவாக்கு சார்..
கமல் இரண்டாவதாக வெளியிட்ட வாழ்த்துப் பட்டியலில் பிரபுதேவா பெயர் மட்டும் மிஸ்ஸாகி இருக்கிறது. தமிழகத்தில் வாழ்ந்து வரும் அவர் பிறந்தது மைசூரில் என்பதால், அவருக்கு கர்நாடகா பிரிவில் விருது வழங்கப்பட்டிருக்கிறது. இதனால் அவருடைய பெயரை கமல் சேர்க்கவில்லையா என்பது தெரியவில்லை. ஆனால், ரசிகர்கள் ‘சார் அப்படியே பிரபுதேவாவுக்கும் ஒரு வாழ்த்து பார்சல் சார்' என கமலிடம் கேட்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications











