நண்பர் ரஜினி பல்லாண்டு வாழ்ந்து ரசிகர்களை மகிழ்விக்க வேண்டும்... கமல் பிறந்தநாள் வாழ்த்து!
சென்னை : சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலக நாயகன் கமல்ஹாசன் இருவரும் முன்னணி நடிகர்களாக இருந்தாலும் இருவரும் ஆரம்ப காலம் முதல் நண்பர்களாக இருந்து வருகின்றனர்.
ஆரம்பத்தில் சில படங்களில் இணைந்து நடித்த அவர்கள் பின்பு சேர்ந்து நடிப்பதைத் தவிர்த்தனர்.
இந்நிலையில் ரஜினிகாந்தின் பிறந்த நாளையொட்டி நடிகர் கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளார்.

ரஜினி 71வது பிறந்தநாள்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று தனது 71வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதையொட்டி அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன. இந்திய அளவில் பிரபலங்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

பிரபலங்கள் வாழ்த்து
பிரதமர் மோடி மற்றும் முதலமைச்சர் முக ஸ்டாலின் உள்ளிட்டவர்களும் ரஜினிக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். இதேபோல சச்சின், ஹர்பஜன் உள்ளிட்ட விளையாட்டு பிரபலங்களும் ரஜினிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். மேலும் சக நடிகர்கள் மற்றும் ரசிகர்களும் தொடர்ந்து வாழ்த்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

வைரலாகும் பதிவுகள்
தொடர்ந்து ஹாப்பி பர்த்டே ரஜினிகாந்த் என்ற ஹேஸ்டேக் இணையத்தில் வைரலாகி வருகிறது. தொடர்ந்து ட்ரெண்டிங்கில் உள்ளார் ரஜினிகாந்த்.

கமல் வாழ்த்து
இந்நிலையில் சூப்பர் ஸ்டாரின் நண்பரும் பிரபல நடிகருமான உலகநாயகன் கமலஹாசன் ரஜினிக்கு தனது வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளார். இனிய நண்பர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்று கமல் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

பல்லாண்டு வாழ வாழ்த்து
அவர் பல்லாண்டுகள் வாழ்ந்து ரசிகர்களை தொடர்ந்து மகிழ்விக்க வேண்டும் என்று தான் மனதார வாழ்த்துவதாக அவர் மேலும் கூறியுள்ளார். உலக நாயகன் மற்றும் சூப்பர் ஸ்டார் இருவரின் நட்பு மிகவும் சிறப்பானதாக விளங்குகிறது.

சிறப்பான நட்பு
சமீபத்தில் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ரஜினிகாந்த் விரைவில் நலம் பெற்று வீடு திரும்ப வேண்டும் என்று கமல்ஹாசன் தெரிவித்திருந்தார்.

தொடர் நட்பு
ஆரம்ப காலகட்டங்களில் கமல் மற்றும் ரஜினி இருவரும் இணைந்து நடித்த படங்கள் ரசிகர்களுக்கு சிறப்பான விருந்தாக அமைந்தன. ஆனால் ஒரு கால கட்டத்தில் இருவரும் இணைந்து நடிப்பதை தவிர்க்க வேண்டும் என்று முடிவெடுத்து அதன்படி தற்போது வரை தொடர்ந்து வருகின்றனர். ஆயினும் இவர்களது நட்பு மட்டும் தொடர்ந்து வருகிறது.


Click it and Unblock the Notifications











