ட்ரிப்பிள் கலரில் கமல் போட்டு வந்த கோட் சூட்.. பின்னாடி இருந்த ஸ்பெஷல் காரணம்.. என்னன்னு பாருங்க!
சென்னை: நடிகர் கமல்ஹாசன் இன்றைய எபிசோடில் அணிந்து வந்த உடையின் பின்னணியில் இருந்து ஸ்பெஷல் காரணத்தை கூறி பிரமிக்க வைத்தார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் வாரம் தோறும் சனிக்கிழமைகளில் ஹவுஸ்மேட்ஸ்களை சந்திப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளார் கமல்.
அந்த வகையில் இன்றைய எபிசோடில் ட்ரிப்பிள் கலர் கோட் சூட் என அசத்தலாய் பங்கேற்றார். அப்போது வழக்கம் போல் அவரது உடையை பார்த்து சூப்பர் என பாராட்டினர் ஹவுஸ்மேட்ஸ்.

இது ஒரு காதி உடை
இதனைக்கேட்ட கமல், என்னடா இன்னும் சொல்லலையே என்று பார்த்தேன் என கூறியப்படி இந்த உடை எப்படி இருக்கிறது என்று கேட்டார். அதற்கு நிஜமாவே சூப்பர் என்று கூறினர் ஹவுஸ்மேட்ஸ். அதற்கு பதில் சொன்ன கமல், இந்த உடை நம் கைத்தறி நெசவாளர்களால் உருவாக்கப்பட்ட ஒரு காதி உடை என்று கூறி வாயை பிளக்க வைத்தார்.

இளமை முதல் இறப்பு வரை
தொடர்ந்து எங்கள் குடும்பத்திற்கு காதி உடை ஒன்றும் புதிதல்ல என்று கூறிய கமல், தனது தந்தை மரண படுக்கையில் இருந்த போது நடந்த சம்பவத்தை பகிர்ந்து கொண்டார். அதாவது தனது தந்தை இளமை முதல் இறப்பு வரை காதி உடைதான் உடுத்தியிருந்தார் என்றார்.

அப்பாவுக்கு பட்டுத்துணி
மேலும் தனது தந்தை மரணப்படுக்கையில் இருந்தபோது தீபாவளி சமயம் என்பதால் அவருக்கு பட்டு உடை வாங்கி சென்றுள்ளார். அதனை பார்த்த அவரது தந்தை என்ன இது என்று கேட்டுள்ளார். அதற்கு பட்டுத்துணி அப்பா, அப்பாவுக்கு பட்டுத்துணி போட்டு பார்க்க ஆசைப்படுகிறேன்.

க்யூவில் நின்று வாங்கிகொள்கிறேன்
பட்டுத்துணி வாங்கும் அளவுக்கு வசதி வந்துவிட்டது என்றேன். ஆனால் பட்டுத்துணி வேண்டாம், கடைசி வரை காதிதான் என்றார். முன்னர்தான் வெள்ளைக்காரன் துணி என்றிர்கள், இப்போது நமது நிறுவனங்களே தயாரிக்கிறதே என்றேன். அதற்கு இந்தியாவில் பலர் உடுத்த உடையே இல்லாமல் இருக்கிறார்கள் அவர்களுக்கு பட்டுத்துணி வாங்கிக் கொடுக்கும் அளவுக்கு பணக்காரன் ஆனதும் க்யூவில் கடைசியாக நின்று சந்தோஷமாக வாங்கிக்கொள்கிறேன் என்றார்.

இளைஞர்களுக்கு கோரிக்கை
அப்போது எனக்கு புரியவில்லை. இப்போது புரிகிறது என்ற கமல் இளைஞர்கள் நமது கைத்தறி நெசவாளர்களிடம் அவர்களின் ஃபேஷன் ஸ்டேட்மென்டை கொடுங்கள் அவர்கள் எந்தளவுக்கு ஈடு கொடுக்கிறார்கள் என்று பாருங்கள் என்று கோரிக்கை விடுத்தார்.


Click it and Unblock the Notifications











