»   »  கமலை கழுவிக் கழுவி ஊத்திய 'அதே' ட்வீட்டுக்காக பாராட்டும் நெட்டிசன்கள்

கமலை கழுவிக் கழுவி ஊத்திய 'அதே' ட்வீட்டுக்காக பாராட்டும் நெட்டிசன்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சார்ந்தோர் அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள் என்று கமல் போட்ட ட்வீட் பல சூழலுக்கு பொருந்துகிறது என்று நெட்டிசன்கள் அவரை புகழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்தபோது உலக நாயகன் கமல் ஹாஸன் அவரின் பெயரை போடாமல் சார்ந்தோர் அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள் என்று மட்டும் மொட்டையாக ட்வீட்டியிருந்தார்.

இதை பார்த்த நெட்டிசன்கள் கொந்தளித்து கமலை ட்விட்டரில் வச்சு செஞ்சுவிட்டனர்.

அனுதாபங்கள்

தமிழகத்தில் நிலவிய அசாதாரண சூழலின்போது நெட்டிசன்கள் அதிகமாக ட்வீட்டியது, 'சார்ந்தோர் அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்' என்பதை தான்.

ஜீனியஸ்

ஜீனியஸ்

ஜெயலலிதாவின் பெயரை போடாமல் ட்வீட்டியதற்காக திட்டிய அதே மக்கள் தற்போது கமலை ஜீனியஸ் என்கிறார்கள். எந்த ட்வீட்டுக்காக திட்டினார்களோ அதே ட்வீட்டுக்காக தான் தற்போது புகழ்கிறார்கள்.

நாசமா போகட்டும்

பிரபல கட்சி தலைவர் ஒருவர் அடுத்த முதல்வராகப் போவதாக அறிவிப்பு வந்தபோது, இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமகா போகட்டும் என ட்வீட்டப்பட்டது. தற்போது அதுவும் பிரபலங்களால் கூட ட்வீட்டப்படுகிறது.

சித்தார்த்

தமிழக அரசியல் சூழல் குறித்து சித்தார்த் ட்விட்டரில் கருத்து தெரிவித்தபோது இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமா போகட்டும் என்றார். அந்த அளவுக்கு அந்த வாக்கியம் பிரபலமாகிவிட்டது, சூழலுக்கு பொருந்திவிட்டது என்கிறார்கள் நெட்டிசன்கள்.

English summary
Tweeples are praising Kamal Haasan for his tweet condoling the death of former CM Jayalalithaa. It is noted that he was criticised for the same tweet earlier.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil