»   »  திரைத் துளி

திரைத் துளி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

நடிகர் கமல்ஹாசன் தனது 46- வது பிறந்தநாளை செவ்வாய்க் கிழமைகொண்டாடுகிறார்.

சென்னை ஆழ்வார்பேட்டை சி.வி.திருமண மண்டபத்தில் காலை 9 மணி முதல் 10.30மணி வரை ரசிகர்களிடமிருந்து வாழ்த்து பெறுகிறார்.

மாலையில் தேனாம்பேட்டை காமராஜ் அரங்கில் கமல்ஹாசன் நற்பணி மன்ற 11-வதுஆண்டு விழாவும், பிறந்தநாள் விழாவும் நடைபெறுகிறது. புதுவை பேராசிரியர்குணசேகரனின் நாட்டுப்புற பாடல் இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது. கவிஞர் வாலிதலைமையில் கவிஞர்கள் பங்கு பெறும் கவியரங்கமும் நடைபெறுகிறது.

கமல்ஹாசன் தன் தாயார் ராஜலட்சுமி பெயரில் இலக்கிய விருதும், தந்தை சீனிவாசன்பெயரில் சமுகசேவகர் விருதும் வழங்கி வருகிறார். இவ்வாண்டு ராஜலட்சுமி விருதைநாகர்கோவில் வீரமாமுனிவர் பேச்சாளர் பேரவை தலைவர் மாசிலாமணியும்,சீனிவாசன் நினைவு விருதை ஸ்ரீபெரும்புதூர் சமூக சேவகர் பழனிச்சாமியும்பெறுகிறார்கள்.

சமீபத்தில் மரணம் அடைந்த மன்ற நிர்வாகிகளுக்கும், விபத்துக்களில் இறந்தரசிகர்களின் குடும்பத்திற்கும் உதவி வழங்கி கமல்ஹாசன் பேசுகிறார்.

Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil