»   »  ரேவதி இயக்கத்தில் கமல்? நல்ல நடிகை என்ற பெயர் பெற்ற ரேவதியை இப்போதெல்லாம் படங்களில் நடிகையாக பார்க்க முடிவதில்லை. இந்தமண்வாசனை நாயகி இந்தியில் இப்போது இயக்குனராக படு பிசியாகி விட்டார்.நல்ல படங்களில், நல்ல கேரக்டர்களில் மட்டுமே நடித்த ஒரு சில நடிகைகளில் ரேவதி ரொம்பவே குறிப்பிடத்தக்கவர். அத்தனைஇயல்பாக நடிக்கும் ரேவதி, தனது வயது முதிர்ச்சியை உணர்ந்து, வருகிற வாய்ப்புகளையெல்லாம் ஒப்புக் கொள்ளாமல், ரொம்பசெலக்டிவாக நடித்து வந்தார்.நாயகி வாய்ப்புகள் மங்கிப் போன நிலையில் அம்மா, அக்கா, அண்ணி ரோல்களிலும் நடித்து வந்தார், நடித்தும் வருகிறார்.இருந்தாலும், வெறுமனே திரையில் வந்து போவதில் அதிக உடன்பாடு இல்லாத அவர் படிப்படியாக நடிப்பதைக் குறைத்துக்கொண்டு இயக்குவதில் தீவிரம் காட்டி வருகிறார்.இவர் இயக்கிய மித்ர் நல்ல விமர்சனத்தையும் கொஞ்சமே லாபத்தையும் பெற்றுத் தந்தது. யாருக்கும் நஷ்டம் இல்லை. இதனால்அடுத்தடுத்து படங்களை இயக்கி வருகிறார்.முற்போக்குப் பார்வை கொண்ட ரேவதி இப்போது தெலுங்கில் ஒரு படத்தை இயக்கி வருகிறார். இதைத் தொடர்ந்துஅமிதாப்பச்சனை வைத்து இந்தியில் மீண்டும் ஒரு படத்தை இயக்கப் போகிறாராம்.சமீபத்தில் சென்னையில் நடந்த வேட்டையாடு விளையாடு பட ஷூட்டிங்கின்போது திடீரென கமல்ஹாசனை சந்திக்க வந்தார்ரேவதி. இருவரும் நீண்ட நேரம் தனியாகப் பேசிக் கொண்டிருந்தார்கள். கமலைவைத்து ஒரு படத்தை இயக்கும் எண்ணம்ரேவதிக்கு இருப்பதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாகத்தான் கமல்ஹாசனை ரேவதி சந்தித்தாராம்.படம் குறித்து கமல் ரொம்ப ஆர்வமாக விவாதித்தார் என்கிறார்கள். நடிக்க ஒத்துக் கொண்டால் விரைவில் அறிவிப்புவெளியாகுமாம். அப்ப நல்ல படம் ஒன்றுக்கு நாமெல்லாம் தயாராக வேண்டியதுதான்.மதுரையில் கமல் பரபரப்பு:இதற்கிடையே கமல்ஹாசன் நடிக்கும் வேட்டையாடு விளையாடு படத்தின் படப்பிடிப்பு மதுரை விமான நிலையத்தில் நடந்தது. அதில், சிபிஐ அதிகாரியாக நடிக்கும்கமல்ஹாசனை, விமானத்திலிருந்து இறங்கும்போது, மற்றொரு சிபிஐ அதிகாரியான பிரகாஷ் ராஜ் வரவேற்பது போலவும்,இருவரும் பேசிக் கொண்டே காரில் ஏறிச் செல்வது போலவும், பின்னர் மீண்டும் கமல் விமானம் ஏறிச் செல்வது போலவும் படமாக்கினார்கள்.கமல்ஹாசன் வந்துள்ள தகவல் பரவியதாலும் சூட்டிங் நடப்பதை அறிந்ததாலும் மதுரை மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளைச் சேர்ந்த ரசிகர்கள் விமானநிலையத்தில் ஏராளமான அளவில் திரண்டுவிட்டனர்.இதனால் விமான நிலைய பகுதியில் பெரும் கூட்டம் ஏற்பட்டது. குடியரசுத் தினவிழாவையொட்டி ஏற்கனவே அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.இந்த நிலையில் ரசிகர்கள் திரண்டதால் போலீஸார் அதிகமாகக் குவிக்கப்பட்டனர்.படப்பிடிப்பை படம் எடுக்க முயன்ற பத்திரிகைப் புகைப்படக்காரர்களை படக் குழுவினர் தடுத்து, பிலிம் ரோல்களை உருவியதால் அவர்கள்ஆத்திரமடைந்தனர். பின்னர் படக் குழுவினர் பிலிம் ரோல்களைத் திருப்பிக் கொடுத்துவிட்டனர். இந் நிலையில், கமல்ஹாசனை காணும் முயற்சியில்ரசிகர்களிடையே பெரும் தள்ளுள்ளு ஏற்பட்டது.கமல்ஹாசன் விமான நிலையத்தை விட்டு வெளியே வர முடியாத அளவுக்கு ரசிகர்கள் கட்டுக்கடங்காமல் முண்டியடித்ததனர். இதையடுத்து போலீஸார்தலையிட்டு கமல்ஹாசனின் கார் வெளியே செல்ல வழி ஏற்படுத்தினர்.

ரேவதி இயக்கத்தில் கமல்? நல்ல நடிகை என்ற பெயர் பெற்ற ரேவதியை இப்போதெல்லாம் படங்களில் நடிகையாக பார்க்க முடிவதில்லை. இந்தமண்வாசனை நாயகி இந்தியில் இப்போது இயக்குனராக படு பிசியாகி விட்டார்.நல்ல படங்களில், நல்ல கேரக்டர்களில் மட்டுமே நடித்த ஒரு சில நடிகைகளில் ரேவதி ரொம்பவே குறிப்பிடத்தக்கவர். அத்தனைஇயல்பாக நடிக்கும் ரேவதி, தனது வயது முதிர்ச்சியை உணர்ந்து, வருகிற வாய்ப்புகளையெல்லாம் ஒப்புக் கொள்ளாமல், ரொம்பசெலக்டிவாக நடித்து வந்தார்.நாயகி வாய்ப்புகள் மங்கிப் போன நிலையில் அம்மா, அக்கா, அண்ணி ரோல்களிலும் நடித்து வந்தார், நடித்தும் வருகிறார்.இருந்தாலும், வெறுமனே திரையில் வந்து போவதில் அதிக உடன்பாடு இல்லாத அவர் படிப்படியாக நடிப்பதைக் குறைத்துக்கொண்டு இயக்குவதில் தீவிரம் காட்டி வருகிறார்.இவர் இயக்கிய மித்ர் நல்ல விமர்சனத்தையும் கொஞ்சமே லாபத்தையும் பெற்றுத் தந்தது. யாருக்கும் நஷ்டம் இல்லை. இதனால்அடுத்தடுத்து படங்களை இயக்கி வருகிறார்.முற்போக்குப் பார்வை கொண்ட ரேவதி இப்போது தெலுங்கில் ஒரு படத்தை இயக்கி வருகிறார். இதைத் தொடர்ந்துஅமிதாப்பச்சனை வைத்து இந்தியில் மீண்டும் ஒரு படத்தை இயக்கப் போகிறாராம்.சமீபத்தில் சென்னையில் நடந்த வேட்டையாடு விளையாடு பட ஷூட்டிங்கின்போது திடீரென கமல்ஹாசனை சந்திக்க வந்தார்ரேவதி. இருவரும் நீண்ட நேரம் தனியாகப் பேசிக் கொண்டிருந்தார்கள். கமலைவைத்து ஒரு படத்தை இயக்கும் எண்ணம்ரேவதிக்கு இருப்பதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாகத்தான் கமல்ஹாசனை ரேவதி சந்தித்தாராம்.படம் குறித்து கமல் ரொம்ப ஆர்வமாக விவாதித்தார் என்கிறார்கள். நடிக்க ஒத்துக் கொண்டால் விரைவில் அறிவிப்புவெளியாகுமாம். அப்ப நல்ல படம் ஒன்றுக்கு நாமெல்லாம் தயாராக வேண்டியதுதான்.மதுரையில் கமல் பரபரப்பு:இதற்கிடையே கமல்ஹாசன் நடிக்கும் வேட்டையாடு விளையாடு படத்தின் படப்பிடிப்பு மதுரை விமான நிலையத்தில் நடந்தது. அதில், சிபிஐ அதிகாரியாக நடிக்கும்கமல்ஹாசனை, விமானத்திலிருந்து இறங்கும்போது, மற்றொரு சிபிஐ அதிகாரியான பிரகாஷ் ராஜ் வரவேற்பது போலவும்,இருவரும் பேசிக் கொண்டே காரில் ஏறிச் செல்வது போலவும், பின்னர் மீண்டும் கமல் விமானம் ஏறிச் செல்வது போலவும் படமாக்கினார்கள்.கமல்ஹாசன் வந்துள்ள தகவல் பரவியதாலும் சூட்டிங் நடப்பதை அறிந்ததாலும் மதுரை மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளைச் சேர்ந்த ரசிகர்கள் விமானநிலையத்தில் ஏராளமான அளவில் திரண்டுவிட்டனர்.இதனால் விமான நிலைய பகுதியில் பெரும் கூட்டம் ஏற்பட்டது. குடியரசுத் தினவிழாவையொட்டி ஏற்கனவே அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.இந்த நிலையில் ரசிகர்கள் திரண்டதால் போலீஸார் அதிகமாகக் குவிக்கப்பட்டனர்.படப்பிடிப்பை படம் எடுக்க முயன்ற பத்திரிகைப் புகைப்படக்காரர்களை படக் குழுவினர் தடுத்து, பிலிம் ரோல்களை உருவியதால் அவர்கள்ஆத்திரமடைந்தனர். பின்னர் படக் குழுவினர் பிலிம் ரோல்களைத் திருப்பிக் கொடுத்துவிட்டனர். இந் நிலையில், கமல்ஹாசனை காணும் முயற்சியில்ரசிகர்களிடையே பெரும் தள்ளுள்ளு ஏற்பட்டது.கமல்ஹாசன் விமான நிலையத்தை விட்டு வெளியே வர முடியாத அளவுக்கு ரசிகர்கள் கட்டுக்கடங்காமல் முண்டியடித்ததனர். இதையடுத்து போலீஸார்தலையிட்டு கமல்ஹாசனின் கார் வெளியே செல்ல வழி ஏற்படுத்தினர்.

Posted By:
Subscribe to Oneindia Tamil

நல்ல நடிகை என்ற பெயர் பெற்ற ரேவதியை இப்போதெல்லாம் படங்களில் நடிகையாக பார்க்க முடிவதில்லை. இந்தமண்வாசனை நாயகி இந்தியில் இப்போது இயக்குனராக படு பிசியாகி விட்டார்.

நல்ல படங்களில், நல்ல கேரக்டர்களில் மட்டுமே நடித்த ஒரு சில நடிகைகளில் ரேவதி ரொம்பவே குறிப்பிடத்தக்கவர். அத்தனைஇயல்பாக நடிக்கும் ரேவதி, தனது வயது முதிர்ச்சியை உணர்ந்து, வருகிற வாய்ப்புகளையெல்லாம் ஒப்புக் கொள்ளாமல், ரொம்பசெலக்டிவாக நடித்து வந்தார்.

நாயகி வாய்ப்புகள் மங்கிப் போன நிலையில் அம்மா, அக்கா, அண்ணி ரோல்களிலும் நடித்து வந்தார், நடித்தும் வருகிறார்.இருந்தாலும், வெறுமனே திரையில் வந்து போவதில் அதிக உடன்பாடு இல்லாத அவர் படிப்படியாக நடிப்பதைக் குறைத்துக்கொண்டு இயக்குவதில் தீவிரம் காட்டி வருகிறார்.

இவர் இயக்கிய மித்ர் நல்ல விமர்சனத்தையும் கொஞ்சமே லாபத்தையும் பெற்றுத் தந்தது. யாருக்கும் நஷ்டம் இல்லை. இதனால்அடுத்தடுத்து படங்களை இயக்கி வருகிறார்.


முற்போக்குப் பார்வை கொண்ட ரேவதி இப்போது தெலுங்கில் ஒரு படத்தை இயக்கி வருகிறார். இதைத் தொடர்ந்துஅமிதாப்பச்சனை வைத்து இந்தியில் மீண்டும் ஒரு படத்தை இயக்கப் போகிறாராம்.

சமீபத்தில் சென்னையில் நடந்த வேட்டையாடு விளையாடு பட ஷூட்டிங்கின்போது திடீரென கமல்ஹாசனை சந்திக்க வந்தார்ரேவதி. இருவரும் நீண்ட நேரம் தனியாகப் பேசிக் கொண்டிருந்தார்கள். கமலைவைத்து ஒரு படத்தை இயக்கும் எண்ணம்ரேவதிக்கு இருப்பதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாகத்தான் கமல்ஹாசனை ரேவதி சந்தித்தாராம்.

படம் குறித்து கமல் ரொம்ப ஆர்வமாக விவாதித்தார் என்கிறார்கள். நடிக்க ஒத்துக் கொண்டால் விரைவில் அறிவிப்புவெளியாகுமாம். அப்ப நல்ல படம் ஒன்றுக்கு நாமெல்லாம் தயாராக வேண்டியதுதான்.

மதுரையில் கமல் பரபரப்பு:

இதற்கிடையே கமல்ஹாசன் நடிக்கும் வேட்டையாடு விளையாடு படத்தின் படப்பிடிப்பு மதுரை விமான நிலையத்தில் நடந்தது. அதில், சிபிஐ அதிகாரியாக நடிக்கும்கமல்ஹாசனை, விமானத்திலிருந்து இறங்கும்போது, மற்றொரு சிபிஐ அதிகாரியான பிரகாஷ் ராஜ் வரவேற்பது போலவும்,

இருவரும் பேசிக் கொண்டே காரில் ஏறிச் செல்வது போலவும், பின்னர் மீண்டும் கமல் விமானம் ஏறிச் செல்வது போலவும் படமாக்கினார்கள்.கமல்ஹாசன் வந்துள்ள தகவல் பரவியதாலும் சூட்டிங் நடப்பதை அறிந்ததாலும் மதுரை மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளைச் சேர்ந்த ரசிகர்கள் விமானநிலையத்தில் ஏராளமான அளவில் திரண்டுவிட்டனர்.


இதனால் விமான நிலைய பகுதியில் பெரும் கூட்டம் ஏற்பட்டது. குடியரசுத் தினவிழாவையொட்டி ஏற்கனவே அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.இந்த நிலையில் ரசிகர்கள் திரண்டதால் போலீஸார் அதிகமாகக் குவிக்கப்பட்டனர்.

படப்பிடிப்பை படம் எடுக்க முயன்ற பத்திரிகைப் புகைப்படக்காரர்களை படக் குழுவினர் தடுத்து, பிலிம் ரோல்களை உருவியதால் அவர்கள்ஆத்திரமடைந்தனர். பின்னர் படக் குழுவினர் பிலிம் ரோல்களைத் திருப்பிக் கொடுத்துவிட்டனர். இந் நிலையில், கமல்ஹாசனை காணும் முயற்சியில்ரசிகர்களிடையே பெரும் தள்ளுள்ளு ஏற்பட்டது.

கமல்ஹாசன் விமான நிலையத்தை விட்டு வெளியே வர முடியாத அளவுக்கு ரசிகர்கள் கட்டுக்கடங்காமல் முண்டியடித்ததனர். இதையடுத்து போலீஸார்தலையிட்டு கமல்ஹாசனின் கார் வெளியே செல்ல வழி ஏற்படுத்தினர்.


சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil