»   »  கருணாநிதியை சந்தித்த கமல்

கருணாநிதியை சந்தித்த கமல்

Posted By:
Subscribe to Oneindia Tamil

நடிகர் கமல்ஹாசன் இன்று முதல்வர் கருணாநிதியை சந்தித்தார்.

கருணாநிதி, ஜெயலலிதா இருவரையும் சம தூரத்தில் வைத்துள்ள கமல்ஹாசன்இருவரிடமும் நட்புறவைப் பேணி வருபவர்.

சட்டசபைத் தேர்தலின்போது அதிமுகவில் இணையக் கோரியும், பிரச்சாரம் செய்யக்கோரியும் கமல்ஹாசனுக்கு ரூ. 100 கோடி தருவதாக அதிமுக தரப்பு கூறியதாகபரபரப்புச் செய்திகள் வெளியாகின. இதையடுத்து கமல் அமெரிக்கா கிளம்பிப்போய்விட்டார்.

இந் நிலையில் இன்று காலை கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதியின் வீட்டுக்குச்சென்ற கமல் முதல்வரை சந்தித்துப் பேசினார். சுமார் பத்து நமிடம் நடந்த இச்சந்திப்புக்குப் பின் கமல்ஹாசன் கூறுகையில்,

மரியாதை நிமித்தமாகத்தான் சந்தித்தேன். முதல்வராக கலைஞர் பதவியேற்றபோதுநான் ஊரில் இல்லை. அதனால்தான் இப்போது வாழ்த்து கூற வந்தேன்.

திரைப்பட வெளிப்புறப் படப்பிடிப்புக்கான கட்டணத்தைக் குறைத்து அறிவித்ததற்காகநன்றியும் தெரிவித்தேன் என்றார் கமல்.

Read more about: kamal meet karunanidhi

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil