twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நாம் அந்த நாகரீகமே கிடையாதே.. 20 வருடத்திற்கு முன்பே கீழடி பற்றி பேசிய கமல்.. வைரலாகும் வீடியோ!

    ஹே ராம் படத்தில் தமிழர் நாகரீகம் குறித்து நடிகர் கமல்ஹாசன் வைத்திருந்த காட்சி ஒன்று தற்போது வைரலாகி உள்ளது.

    |

    Recommended Video

    20 வருடத்திற்கு முன்பே கீழடி பற்றி பேசிய கமல்.. வைரலாகும் வீடியோ!

    சென்னை: ஹே ராம் படத்தில் தமிழர் நாகரீகம் குறித்து நடிகர் கமல்ஹாசன் வைத்திருந்த காட்சி ஒன்று தற்போது வைரலாகி உள்ளது.

    கடந்த 5 வருடங்களுக்கும் மேலாக மதுரைக்கு அருகே உள்ள கீழடியில் தொல்பொருள் ஆராய்ச்சி நடந்து வருகிறது.இதில் இரண்டாம் கட்ட ஆராய்ச்சி தற்போது கீழடியில் வேகம் எடுத்துள்ளது.

    கீழடியில் கிடைத்த பொருட்களில் செய்யப்பட்ட கார்பன் ஆராய்ச்சியில் அதன் வயது 2600 வருடங்களுக்கு முந்தையது என்று கண்டுபிடிக்கப்பட்டது. அதாவது கிறிஸ்து பிறப்பதற்கு 600 வருடங்களுக்கும் முன்பு.

    ஒன்றும் இல்லை

    ஒன்றும் இல்லை

    இந்த ஆதாரங்களில் சில விலங்குகள் பொம்மைகள் இருந்துள்ளது. ஆனால் வழிப்பாடு நடந்ததற்கான அடையாளங்கள் இல்லை. மிக மிக முக்கியமாக இந்த ஆராய்ச்சியில் இதுவரை இந்து மத அடையாளங்கள் கிடைக்கவில்லை. அதாவது ஆதி தமிழர்கள் இந்து மதத்தை சேர்ந்தவர்கள் என்று கூறும் ஆதாரங்கள் எதுவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    என்ன படம்

    என்ன படம்

    இந்த நிலையில் ஹே ராம் படத்தில் நடிகர் கமல்ஹாசன் பேசும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் நடித்த ஷாருக்கான் ஒரு வசனம் சொல்வார். அவர் சொல்லும் வசனம் கமல்ஹாசன் எழுதியது. இந்த வசனம்தான் தற்போது பெரிய வைரலாகி உள்ளது.

    எப்படி இருந்தது

    எப்படி இருந்தது

    ஷாருக்கான் தனது பேச்சில், கிறிஸ்து பிறப்பதற்கு பல்லாயிரம் வருடங்களுக்கு முன்பு உருவானதுதான் நம்முடைய நாகரீகம். அப்போது மக்களாட்சி இருந்தது. அங்கு குழந்தைகள் விளையாட பொம்மைகள் இருந்தது. ஆனால் நம்மை போல பெரியவர்கள் விளையாட கடவுள் பொம்மை இல்லை. நம்முடைய நாகரீகம் அப்படிப்பட்டது கிடையாது, என்று ஷாருக்கான் குறிப்பிட்டு இருப்பார்.

    அர்த்தம் என்ன

    அர்த்தம் என்ன

    இதன் அர்த்தம், 2000 ஆயிரம் வருடங்களுக்கு முன்பே தமிழர்களிடம் நல்ல நாகரீகம் இருந்தது. அப்போது கடவுளும் இல்லை, சிலைகளும் இல்லை என்பதாகும். இதுதான் தற்போது கீழடியில் கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது. கீழடியில் ஒரு கடவுள் சிலையோ, மத அடையாளமோ காணப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    இப்போது இல்லை

    இப்போது இல்லை

    இந்த நிலையில் ஷாருக்கானுக்கு அதில் பதில் அளிக்கும் கமல்ஹாசன், சரிடா ஆனால் நாம் இப்போது அந்த நாகரீகத்தில் வாழவில்லை. நாம் வாழும் சூழல் மாறிவிட்டது என்பார். மேலும் தற்போது கடவுள் வழிபாடு நம்மிடையே புகுந்துவிட்டது என்றும் கூற வருவார், ஆனால் அதற்குள் அந்த காட்சி கட் செய்யப்பட்டுவிடும்.

    அந்த படம்

    இந்த நிலையில் கமலின் இந்த கணிப்பு தற்போது உண்மையாகி உள்ளது. இறை வழிபாடு இல்லாமல் இருந்த தமிழர்கள் குறித்த உண்மை தற்போது கீழடி மூலம் நிரூபணம் ஆகியுள்ளது. இதை 1999ல் (ஷூட்டிங் எடுக்கப்பட்ட காலம், படம் வெளியானது 2000) ஹே ராம் படத்திலேயே கமல் கூறி உள்ளார்.

    என்ன காட்சி

    என்ன காட்சி

    அதே போல் இதற்கு முன் சுனாமி குறித்து கமல்ஹாசன் அன்பே சிவம் படத்தில் பேசி இருந்தார். தமிழர்களுக்கு சுனாமி அறிமுகம் ஆகும் முன்பே கமல்ஹாசன் அதை பற்றி அந்த படத்தில் காட்சி வைத்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Kamala Haasan talked about Tamil - Keezhadi Civilization in Hey Ram Movie - Video goes viral.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X