Actor Vijay: விஜய்யை சந்தித்த கமலா திரையரங்க உரிமையாளர்.. பாராட்டிய தளபதி!

சென்னை: நடிகர் விஜய்யின் கில்லி படம் கடந்த 2004ம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய அளவில் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. தமிழில் 50 கோடி ரூபாய் வசூலித்த முதல் படம் என்ற பெருமையை 20 ஆண்டுகளுக்கு முன்னதாகவே இந்த படம் பெற்றது. இந்நிலையில் தற்போது கடந்த 20ம் தேதி இந்த படம் தமிழகத்தில் மட்டுமில்லாமல் சர்வதேச அளவில் ரீ ரிலீஸ் செய்யப்பட்டு மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வருகிறது,

இந்தப் படம் வெளியான அனைத்து திரையரங்குகளிலும் ரசிகர்கள் தொடர்ந்து ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்துடன் படத்தை ரசித்து வருகின்றனர். இந்தப் படம் கடந்த ஒரே வாரத்தில் 28 கோடி ரூபாய் வசூலை பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து இந்த படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிவரும் சூழலில் இந்த வசூல் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Kamala theatre owner Vishnu kamal meets Actor Vijay in GOAT movie shooting spot

நடிகர் விஜய்: நடிகர் விஜய்யின் அடுத்தடுத்த படங்கள் மிகப் பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்து மாஸ் வெற்றியை கொடுத்து வரும் சூழலில் தற்போது அவரது ரீ-ரிலீஸ் படமும் அந்த கேட்டகரியில் சேர்ந்துள்ளது. கடந்த இருபதாம் தேதி விஜய், திரிஷா, பிரகாஷ்ராஜ், ஆஷிஷ் வித்யார்த்தி உள்ளிட்டவர்கள் நடித்து ரீ ரிலீஸ் ஆனது கில்லி படம். இந்த படம் முன்னதாக 2004ம் ஆண்டில் வெளியாகி அந்த காலகட்டத்திலேயே 50 கோடி ரூபாய் வசூலித்த முதல் தமிழ் படம் என்ற பெருமையை பெற்றது. இயக்குனர் தரணி இயக்கத்தில் வெளியான இந்த படம் ஒவ்வொரு காட்சியிலும் ரசிகர்களை வெகுவாக எண்டர்டெயின் செய்யும் வகையில் அமைந்திருந்தது.

கில்லி பட ரீ ரிலீஸ்: படத்தில் வித்தியாசாகர் இசையில் பாடல்கள் அனைத்துமே ரசிகர்களை வெகுவாக கவர்ந்து எவர்கிரீன் ஃபேவரிட் ஆக அமைந்தது. குறிப்பாக அப்படி போடு பாடல் மிகப்பெரிய அளவில் மாஸ் என்டர்டெயினராக அமைந்தது. தற்போதும் ரசிகர்களின் விருப்பத்திற்குரிய பாடலாக அமைந்து வருகிறது. இந்நிலையில் இந்த படம் கடந்த ஒரே வாரத்தில் 28 கோடி ரூபாய் வசூலை ஈட்டி உள்ளதாக கூறப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் இந்த படம் ரிலீசான சூழலில் இந்தியாவில் மட்டுமில்லாமல் வெளிநாடுகளிலும் படம் வெகுவாக ரசிகர்களை கவர்ந்து வெற்றி படமாக அமைந்து தொடர்ந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வருகிறது.

விஜய்யை சந்தித்த கமலா திரையரங்க உரிமையாளர்: இந்தப் படத்துடன் இணைந்து திரையரங்குகளில் வெளியான விஜய் ஆண்டனியின் ரோமியோ மற்றும் விஷாலின் ரத்னம் படங்களை புறந்தள்ளிவிட்டு கில்லி படம் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்து ஹிட் ஆகியுள்ளது. இந்தப்படம் வெளியான அனைத்து திரையரங்க உரிமையாளர்களும் தற்போது மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். தொடர்ந்து நடிகர் விஜய்யை சந்தித்து தங்களது வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இன்றைய தினம் கமலா திரையரங்க உரிமையாளர் விஷ்ணு கமல், நடிகர் விஜய்யை கோட் பட ஷூட்டிங் ஸ்பாட்டில் சந்தித்து அவருக்கு வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவித்துள்ளார்.

விஜய்க்கு வாழ்த்து: கில்லி படத்தின் மாபெரும் வெற்றிக்கு விஷ்ணு கமல் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவருக்கு நடிகர் விஜய் சால்வை அணிவித்து தன்னுடைய மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளார். மேலும் திரையரங்கில் கில்லி திரைப்பட பாடல்களை ரசிகர்களின் விருப்பத்திற்கிணங்க ஒன்ஸ்மோர் ஒளிபரப்பியதற்காக விஷ்ணு கமலுக்கு விஜய் தனது நன்றிகளை தெரிவித்துள்ளார். இவர்களது இந்த சந்திப்பு மற்றும் அதன் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X