ரஜினிக்கு வெயிட் பண்ணும் நேரத்தில் கமல் போட்ட சூப்பர் பிளான்! பிக் பாஸ் 4 க்கு பிறகு ஆரம்பம்?
சென்னை: நடிகர் கமலஹாசன் அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ள திரைப்படத்தில் நடிப்பது குறித்த லேட்டஸ்ட் தகவல் தெரிய வந்துள்ளது.
Recommended Video
ரஜினியை வைத்து படம் தயாரிக்கப் போவதாக இருந்த கமல், அதற்கு முன்னர் லோகேஷ் கனகராஜுடன் சேர்ந்து ஹீரோவாக ஒரு படத்தில் நடிக்க திட்டமிட்டுள்ளாராம்.
மேலும் அந்த படம் முழுக்க முழுக்க அரசியல் பேசும் படமாக இருக்கலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

மாஸ்டர் இயக்குநர்
சமீபகாலமாக இணையத்தில் பெரும் பேசு பொருளாக இருப்பவர் டைரக்டர் லோகேஷ் கனகராஜ். 'கைதி' படத்தின் பிளாக்பஸ்டர் வெற்றிக்குப் பிறகு, லோகேஷ் கனகராஜ் தன்னை தமிழ் சினிமாவில் நன்கு நிலைநிறுத்திக் கொண்டார். ஏற்கனவே முன்னணி கதாநாயகரான விஜய்யை வைத்து மாஸ்டர் படத்தை தயாரித்த அவர், அடுத்ததாக கமல், ரஜினியுடன் இணைய உள்ளார்.

ரிலீசுக்கு வெயிட்டிங்
தளபதி விஜய் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'மாஸ்டர்'. இந்த படத்தின் எல்லா வேலைகளும் முடிந்து ரிலீசுக்காக காத்திருந்த நிலையில், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இன்னும் திரைக்கு வெளிவரவில்லை. அதே சமயம், படக்குழுவினரோ, திரையரங்குகள் திறக்கப்பட்டவுடன் 2021 பொங்கலுக்கு வெளியிட முடிவு செய்துள்ளனர்.

கமல் & லோகேஷ் கூட்டணி
மாஸ்டர் படத்தை தொடர்ந்து, நடிகர் கமல்ஹாசன் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை இயக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம், ரஜினி, லோகேஷ் கனகராஜ் படம் கைவிடப்படுவதாக தகவல் வெளியானது. ஆனால் அந்த படம் கைவிடப்படவில்லை என்றும் அதற்கு முன்னதாக கமல்ஹாசன் நடிப்பில் பக்கா அரசியல் படம் ஒன்றை லோகேஷ் இயக்க உள்ளதாக பேசப்படுகிறது.

ஏன் இந்த முடிவு
தற்போது 'அண்ணாத்த' படத்தில் நடித்து வரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கொரோனா தொற்று காரணமாக ஷூட்டிங்கில் கலந்து கொள்ளவில்லை. இதனிடையில், கொரோனா தொற்று நிலைமை முழுவதுமாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட பின்னரே மீண்டும் ரஜினிகாந்த் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்று தெரிகிறது. எனவே ரஜினிகாந்துடன் லோகேஷ் கனகராஜ் இணையும் படம் கொஞ்சம் தாமதமாகலாம் என்பதால் இந்த முடிவுக்கு கமல் வந்துள்ளதாக தகவல்.

பக்கா அரசியல் படம்
மேலும், இயக்குநர் லோகேஷ் கனகராஜின் நேரத்தை வீணடிக்கக் கூடாது என்று நினைத்து, கமல்ஹாசன் திடீரென ரஜினிகாந்தின் படத்திற்கு முன்பு, அவருடன் இணைந்து ஒரு படத்தில் நடிக்க திட்டமிட்டுள்ளார். படத்தின் கதை பக்கா அரசியல் கதையாக உருவாகப் போகிறதாம். தற்போது கமல்ஹாசன், பிக் பாஸ் 4 ரியாலிட்டி ஷோவுக்கான தனது பணிகளை முடித்தவுடன் அந்த படத்தின் வேலைகளை தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எப்போ ரிலீஸ்?
கமல்ஹாசன் மற்றும் லோகேஷ் கனகராஜ் இணையும் இந்த அரசியல் படத்தை , வரும் 2021 தமிழ் நாடு சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னர் வெளியிட திட்டமிட்டுள்ளனர். மேலும் அரசியல் தலைவரான கமல்ஹாசனுக்கு இந்த சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள இந்த படம் சரியான தளமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என தெரிகிறது.

ஏற்கனவே
ஏற்கனவே ஷங்கர் இயக்கத்தில் உலக நாயகன் கமல்ஹாசன் நடித்து வரும் இந்தியன் 2, தலைவன் இருக்கின்றான் உள்ளிட்ட படங்கள் உருவாக உள்ள நிலையில், இந்த படம் எப்படி சாத்தியம் ஆகும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. மிக குறுகிய காலத்தில் தரமான படத்தை கொடுக்க லோகேஷ் கனகராஜால் முடியும் என்பதாலே தான் இந்த அதிரடி முடிவுக்கு கமல் வந்துள்ளதாகவும் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications











