twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஒன்றரை இன்ச் பைப்ல கமல் ஹாசன் ஏறி நடிச்சி காமிச்சாரு... நடிகர் ஜி.எம்.குமார் சுவாரசிய தகவல்

    |

    சென்னை: இயக்குநர் பாக்யராஜிடம் துணை இயக்குநராக பணிபுரிந்து பின்னர் எழுத்தாளராக இயக்குநராக பயணித்தவர் ஜி.எம்.குமார்.

    அதன்பின்னர் அறுவடை நாள் திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகி பிக் பாக்கெட், உருவம் போன்ற திரைப்படங்களை இயக்கினார்.

    தற்சமயம் நடிகராகி பல படங்களிலும் வெப் சீரிஸ்களிலும் தொடர்ச்சியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

    பிரகாஷ் ராஜால் தாய்லாந்தில் ஃபேக்ஸ் மெஷின் தேடி அலைந்தேன்... இயக்குநர் ஞானவேல்பிரகாஷ் ராஜால் தாய்லாந்தில் ஃபேக்ஸ் மெஷின் தேடி அலைந்தேன்... இயக்குநர் ஞானவேல்

    துணை இயக்குநர்

    துணை இயக்குநர்

    பாக்யராஜிடம் துணை இயக்குநர்களாக பணியாற்றியவர்கள் பாண்டியராஜன், லிவிங்ஸ்டன் மற்றும் ஜி.எம்.குமார். பாண்டியராஜன் இயக்குநராக அறிமுகமான கன்னி ராசி திரைப்படம் மூலம் எழுத்தாளர்களாகி அதன் பின் கமல் ஹாசனின் காக்கிச் சட்டை, பிரபுவின் மை டியர் மார்த்தாண்டன் போன்ற படங்களுக்கு கதை எழுதியுள்ளார்கள். இதில் லிவிங்ஸ்டன் மட்டும் முழு நேர நடிகனாகிவிட்டார். இளையராஜாவை இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்தால்தான் படம் இயக்குவேன் என்று பிடிவாதமாக இருந்த இயக்குநர்களில் இவரும் ஒருவர்.

    அவன் இவன் ஐனஸ்

    அவன் இவன் ஐனஸ்

    இயக்குநர் பாரதிராஜா இயக்கிய கேப்டன் மகள் திரைப்படத்தில் நடிகனாக அறிமுகமான ஜி.எம்.குமார் அதன் பின் வெயில், தொட்டி ஜெயா, மலைக்கோட்டை, அவன் இவன், தாரை தப்பட்டை, கர்ணன் போன்ற படங்களில் நடித்து பிரபலமானார். பாலாவின் அவன் இவன் திரைப்படத்தில் இவர் நடித்த ஐனஸ் என்கிற கதாபாத்திரத்தில்தான் இவர் மிகவும் பேசப்பட்டார். சமீபத்தில் நவம்பர் ஸ்டோரி, பேப்பர் ராக்கெட் உள்ளிட்ட வெப் சீரிஸ்களில் நடித்திருந்தார்.

    பாக்யராஜ் மேஜிக்

    பாக்யராஜ் மேஜிக்

    இயக்குநர் பாக்யராஜிடம் பணிபுரியும் போது 9 மணி முதல் நள்ளிரவு 3 மணி வரை தொடர்ச்சியாக பணிபுரிவார்களாம். அப்படி கூடவே இருந்தாலும் ஒரு படம் உருவாகும் போது சாதாரணமாகத் தான் தெரியுமாம். ஆனால் இறுதியாக திரையில் பார்க்கும்போது அதனை ஒரு மேஜிக் போல கொண்டு வந்திருப்பார் பாக்யராஜ் என்று தனது குருநாதரை பற்றி பெருமையாக கூறியுள்ளார் ஜி.எம்.குமார்.

    கமல் ஹாசன் சாகசம்

    கமல் ஹாசன் சாகசம்

    காக்கிச்சட்டை திரைப்படத்தின் கதையை லிவிங்ஸ்டன்னுடன் சேர்ந்து ஜி.எம்.குமார் எழுதியிருப்பார். கமல்ஹாசனிடம் கதையை கூறியபோது தன் வீட்டில் இருந்த தண்ணீர் பைப்பில் அசால்ட்டாக ஏறி ஒரு காட்சியில் இப்படி நடிக்கவா அப்படி நடிக்கவா என்று செய்து காட்டினார். அதேபோல ஒரு ட்ரம்மில் ஏறி பேலன்ஸ் செய்து சர்க்கஸ் மனிதர் போல் ஸ்டண்ட் செய்து காண்பித்தார். அவ்வளவு ஆர்வமாக கதை கேட்பார் கமல். இப்போதுள்ளவர்கள் எந்த விதமான ரியாக்க்ஷனும் கொடுக்காமல் கதை கேட்பார்கள். கமல் போல ஒரு ஆர்வமான நடிகரை பார்க்க முடியாது என்று பல தகவல்களை ஜி.எம்.குமார் கூறியுள்ளார்.

    English summary
    G.M.Kumar worked as an assistant director Under Bhagyaraj and later he become a director in tamil cinema. After that he made his debut as a director with the film Aruvadi Naal and directed films like Kaaki Sattai and Urvam. Currently, he is an actor and is continuously acting in many films and web series. In an recent interview, he shared flash back moment about kamalhaasan in Kaaki Sattai Movie.Keywords:
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X