சாவித்ரியாக அசத்திய கீர்த்தி சுரேஷ்.. அழைத்துப் பாராட்டிய உலகநாயகன்!
Recommended Video

சென்னை : நாக் அஷ்வின் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ், துல்கர் சல்மான், சமந்தா நடித்த 'நடிகையர் திலகம்' திரைப்படம் நேற்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. கீர்த்தி சுரேஷின் நடிப்பை படம் பார்த்த பெரும்பாலானோர் புகழ்ந்து வருகிறார்கள்.
சாவித்ரியின் நடிப்பை அவரது வாழ்க்கைக் கதையில் தத்ரூபமாக வெளிப்படுத்தியிருக்கிறார் கீர்த்தி சுரேஷ். சாவித்ரியின் ஆரம்பகால வாழ்க்கை, திரைப் பயணம், அவரது வள்ளல் தன்மை, இறுதிக்காலம் ஆகியவற்றை நிறைய தகவல்களோடு சொல்லியிருக்கிறது 'நடிகையர் திலகம்' திரைப்படம்.

இந்த நிலையில் உலகநாயகன் கமல்ஹாசன் நேற்று கீர்த்தி சுரேஷை அழைத்து தனது பாராட்டுதல்களை தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ள கீர்த்தி சுரேஷ், கமல்ஹாசன் அவர்களது வாழ்த்துகள் எனக்கு கிடைத்தது மிகப்பெரிய அதிர்ஷ்டம் என்றும் அவருக்கு எனது நன்றிகள் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் கீர்த்தி சுரேஷின் நடிப்பை பிரபல இயக்குனர்கள் ஏ.ஆர்.முருகதாஸ், எஸ்.எஸ்.ராஜமௌலி ஆகியோர் தனது ட்விட்டரில் பாராட்டியுள்ளனர். கீர்த்தி சுரேஷை வைத்து மீம் போட்டுவந்த நெட்டிசன்களும் இப்படத்தின் கீர்த்தியின் பெர்ஃபார்மன்ஸை பார்த்து வியந்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











