Shruti Haasan: ரிலேஷன்ஷிப் பிடிக்கும்.. ஆனால் திருமணம் மட்டும் நோ.. கமல்ஹாசன் பொண்ணு சொன்ன விஷயம்!
சென்னை: நடிகை ஸ்ருதி ஹாசன் தமிழ் சினிமாவில் மட்டும் இல்லாமல் இந்திய சினிமாவில் கவனிக்கப்படும் நடிகைகளில் ஒருவராக உள்ளார். தமிழ், தெலுங்கு, கன்னடம் மட்டும் இல்லாமல் வட இந்தியப் படங்களிலும் நடித்து வருகின்றார். மேலும் ஸ்ருதி ஹாசன் நடிப்பதைக் காட்டிலும் இசைக் கச்சேரிகளில் பாடல்கள் பாடுவதில்தான் அதிக ஆர்வம் காட்டி வருகின்றார். இப்படியான நிலையில் ஸ்ருதி ஹாசன் தனக்கு ஒருவருடன் ரிலேஷன்ஷிப்பில் இருக்க பிடித்திருக்கின்றது எனவும், ஆனால் அதே நபரை திருமணம் செய்து கொள்வது என்பது நான் யோசித்துப் பார்க்காத ஒன்று என அவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். இது பலரது கவனத்தினை ஈர்த்துள்ளது.
தமிழ் சினிமாவில் 3 படத்தில் நடித்து தமிழ்நாட்டு மக்கள் மத்தியில் அறிமுகம் அடைவதற்கு முன்னர், கமல்ஹாசனின் மகள் என்ற அறிமுகத்தை விடவும், உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுப் பாடலில் உரக்கக் குரலில் பாடி மக்களை புல்லரிக்கச் செய்தவர் ஸ்ருதி ஹாசன். அதன் பின்னர், தனுஷ் நடிப்பில் அவரது முன்னாள் மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிய, 3 படத்தில் நடித்து இளசுகள் மனதில் இடம் பிடித்தார். அதிலும் குறிப்பாக காதல் காட்சிகளில் தனுஷ்ஷுடன் மிகவும் நெருக்கமாக நடித்து தனது முதல் படத்திலேயே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றார்.

ஸ்ருதிஹாசன்: அதேபோல் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவான ஏழாம் அறிவு படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்து அசத்தினார். தமிழில் இவர் நடித்த இரண்டு படங்களும் செம ஹிட்டான படங்கள்தான் என்றாலும் இவருக்கு அடுத்தடுத்து படங்கள் நல்லபடியாக அமையவில்லை. அதாவது, உடனே அவருக்கு படங்கள் எதுவும் அமையவில்லை. மேலும் ஒரு படத்திற்கும் மற்றொரு படத்திற்கும் இடையில், அதிக காலம் எடுத்துக் கொண்டது. விஷாலுடன் பூஜை படத்திலும், விஜய்யுடன் புலி படத்திலும் அவர்களுக்கு ஜோடியாக நடித்தார். அதன் பின்னர் வேதாளம் படத்தில் அஜித்துடன் நடித்தார். இந்தப் படங்கள்தான் ஸ்ருதி ஹாசன் தமிழில் நடித்த பெரிய ஹீரோ படங்களாக உள்ளது.
கூலி: தமிழ் மட்டும் இல்லாமல், தெலுங்கு, கன்னட மொழி சினிமாக்களிலும் ஸ்ருதி ஹாசன் தொடர்ந்து நடித்து வந்தாலும் அவர் தமிழில் தொடர்ந்து படம் பண்ணாதது பெரிய கேள்விக்குறியாகவே உள்ளது. தற்போது, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் கூலி படத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் இந்த ஆண்டு முதல் பாதியில் ரிலீஸ் ஆகும் என கூறப்படுகின்றது. இதற்கு முன்னர் இவர் நடித்த படம் என்றால், அது, பிரபாஸ் நடிப்பில் மிகப்பெரிய பொருட்ச்செலவில் உருவான சலார் படத்தில் நடித்ததுதான்.
திருமணம்: இப்படியான நிலையில், ஸ்ருதிஹாசன் சமீபத்தில் அளித்த பேட்டியில், தனது, திருமணம் குறித்த கேள்விக்கு அளித்த பதில் பலரையும் ஆச்சரியப்பட வைத்தது. அதாவது தனக்கு ஒருவருடன் ரிலேஷன்ஷிப்பில் இருப்பது என்பது மிகவும் சௌகரியமாக உள்ளது. ஆனால் திருமணம் என்பதை நான் யோசித்தே பார்க்கவில்லை. நான் திருமணம் செய்துகொள்ள பொருத்தமான நபரை இதுவரை சந்திக்கவில்லை. அப்படிச் சந்திக்கும்போது அவரை திருமணம் செய்துகொள்வேன்" என பதில் அளித்தார். அவரது பதில் பலரது கவனத்தினை ஈர்த்துள்ளது.


Click it and Unblock the Notifications











