Kamal Haasan: போதும் ஆண்டவரே.. இதுக்கு மேல எங்க மனசு தாங்காது.. தயவு செய்து கியரை மாத்துங்க!

சென்னை: தமிழ் சினிமா மட்டுமல்லாமல் இந்திய சினிமாவுக்கும் சேர்த்து உலக அளவில் முகமாக இருப்பவர் நடிகர் கமல்ஹாசன். இவர் நடிகராக மட்டுமல்லாமல் இயக்குநர், தயாரிப்பாளர், கதாசிரியர் என அனைத்து துறைகளிலும் ஜாம்பவனாக விலங்கி வருபவராக உள்ளார். ஆனால் இவரது கடைசி இரண்டு படங்கள் விமர்சன ரீதியாக மட்டுமல்லாமல் வணிக ரீதியாகவும் காட்டு மொக்கைப் படம் என விமர்சிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கமல்ஹாசன் ரசிகர்கள் இணையத்தில் அவருக்கு கோரிக்கை வைக்கிறேன் என கதறி வருகிறார்கள். இது குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.

கமல்ஹாசன் ஒரு படத்தில் கமிட் ஆகிறார் என்றாலே அந்த படத்தில் கட்டாயம் வித்தியாசமாக ஏதாவது இருக்கும், அது கதையில் இருக்கலாம், திரைக்கதையில் இருக்கலாம், நடிப்பில் இருக்கலாம், ஒளிப்பதிவில் இருக்கலாம் என ஏதாவது ஒன்றில் வித்தியாசமாகவும் ரசனைக்குரியதாகவும் இருக்கும். இதுதான் கமல்ஹாசன் தமிழ் சினிமாவைக் கடந்து உலக அரங்கில் கவனிக்கப்பட காரணம். ஆனால் அப்படியான கமல்ஹாசன் நடிப்பில் வெளியான கடைசி இரண்டு படங்களும் அவரது தீவிர ரசிகர்களுக்கு ரத்தக்கண்ணீர் வரவழைத்துவிட்டது.

கமல்ஹாசன் படம் வணிக ரீதியாக வெற்றி பெறவில்லை என்றாலும் படத்தின் மேக்கிங், நடிப்பு என சினிமா ரசிகர்கள் மெச்சும் அளவுக்கு படம் இருக்கும். கமல்ஹாசன் ஒரு படத்தைப் பார்த்து ரீமேக் செய்தால் கூட ஒரிஜினலைவிட கமல்ஹாசனின் ரீமேக் வெர்ஷன் தான் பாராட்டப்படும். அந்த அளவுக்கு கமல்ஹாசனின் டச் என்பது அந்த படத்தில் இருக்கும். தமிழ் சினிமா ரசிகர்களுக்கு உலக சினிமா குறித்த பார்வையை, அறிவை உருவாக்கியதில் கமல்ஹாசனுக்கும் முக்கிய பங்கு உள்ளது.

Kamalhaasan Fans Worried About His Movie Selections And Request To Direction
Photo Credit:

உலக சினிமாவும் தமிழ் ரசிகர்களும்: உலக சினிமாவை நுகர முடியாத காலகட்டத்தில் தமிழ் சினிமா ரசிகர்கள் இருந்த காலகட்டத்தில் பல உலக சினிமாக்களை தமிழ் சினிமாவுக்கும் ரசிகர்களுக்கும் அறிமுகம் செய்து வைத்தவர் கமல்ஹாசன். கொரோனா காலத்திற்குப் பின்னர் ஓடிடி தளங்களில் உலக சினிமாக்கள் தொடங்கி, வெப் சீரிஸ்கள் வரை அனைத்தையும் ரசிகர்கள் பார்க்கிறார்கள். இதனால் கமல்ஹாசன் மட்டுமல்லாமல், யாருடைய படங்கள் வந்தாலும், இந்த காட்சி அந்த படத்தில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது. படத்தின் கதை கொரியன் சினிமாவின் கதை என்று விலாவரியாக விவாதிக்கிற ரசிகர்கள் இன்றைக்கு தமிழில் அதிகம்.

கமர்ஷியல் கமல்: உலக சினிமா குறித்து குறைந்த அளவிலான அறிவும் பார்வையும் கொண்ட ரசிகர்களை கொண்ட 80 மற்றும் 90 களில் இருந்த ரசிகர்களுக்காக பார்த்து பார்த்து படங்கள் கொடுத்த கமல்ஹாசன், இப்போது உலக சினிமாவை நுகரும் ரசிகர்கள் அதிக அளவில் இருக்கும்போது, இந்தியன் 2, தக் லைஃப் போன்ற ஸ்ட்ராங்கான கதையே இல்லாத படங்களில் அடுத்தடுத்து நடித்திருப்பது ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளிக்கிறது. இது மட்டுமல்லாமல், கமர்ஷியலில் கமல்ஹாசன் வித்தியாசமான படம் கொடுப்பார். லோகேஷ் கனகராஜ் உடன் இணைந்து இவர் கொடுத்த விக்ரம், வழக்கமான கமர்ஷியல் படங்களைப் போல் தான் இருந்தது.

Kamalhaasan Fans Worried About His Movie Selections And Request To Direction
Photo Credit:

ஆதங்கம்: இப்படி இருக்கும்போது, கமல்ஹாசன் தனது பாணியில் வெற்றி கொடுக்க வேண்டும் என்று தான் ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள் தவிர, லோகேஷ் கனகராஜ், ஷங்கர், மணிரத்னம் போன்றவர்களின் கமர்ஷியலுக்கு கமல் தீனியாகி விடக்கூடாது. அதேநேரத்தில் கமல்ஹாசன் நடிப்பதோடு மட்டுமல்லாமல், படங்களை இயக்கவும் செய்ய வேண்டும். இவரது இயக்கத்தில் வெளியான படங்கள் தமிழ் சினிமாவின் அடையாளங்களாக உள்ளது என்பது அவருக்கும் தெரிந்துமே, ஏன் கமல் இயக்கத்தில் கவனம் செலுத்தாமல் உள்ளார் என்ற கேள்வி பலருக்கும் உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X