முழு சுதந்திரம் தந்த கமல்ஹாசன்… தனதாக்கிக் கொண்ட லோகேஷ் கனகராஜ்

சென்னை : லோகேஷ் கனகராஜ் தமிழ் சினிமாவில் நம்பிக்கை தரும் இயக்குனர்களில் ஒருவராக இருந்து வருகிறார். மாநகரம், கைதி, மாஸ்டர் போன்ற வெற்றிப் படங்களை தந்து தற்போது கமல்ஹாசன் நடித்து முடித்த விக்ரம் திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

விக்ரம் திரைப்படத்தில் கமல்ஹாசனுடன் விஜய் சேதுபதி மற்றும் பகத் பாசில் போன்ற முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர்

இதற்கிடையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ஒரு சேனலுக்கு அளித்த பேட்டியில் விக்ரம் படம் முழுக்க முழுக்க என்னுடைய படம் என குறிப்பிட்டுள்ளார்.

Post-production இல் விக்ரம்

Post-production இல் விக்ரம்

கடந்த மாதம் விக்ரம் திரைப்படம் சூட்டிங் முடிவடைந்ததை தெரிவிக்கும் வகையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது இன்ஸ்டாகிராம் போஸ்டில் பகத் பாசில் துப்பாக்கியுடன் இருக்கும் வீடியோவை பதிவிட்டு தெரியப்படுத்தினார். தற்போது விக்ரம் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் மிகவும் வேகமாக நடைபெற்று வருகிறது. இந்த படம் வரும் ஜூன் மாதம் மூன்றாம் தேதி ஐந்து மொழிகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்தது. இந்த படத்தில் கமல்ஹாசன் விஜய் சேதுபதி பகத் பாசில் மட்டுமில்லாமல் அஞ்சாதே நரேன் சிவானி போன்ற நடிகர்களும் நடித்துள்ளனர்.

ரெட் ஜெயிண்ட் மூவிஸ்

ரெட் ஜெயிண்ட் மூவிஸ்

விக்ரம் திரைப்படத்தின் டிஜிட்டல் உரிமத்தை ஹாட்ஸ்டார் ஒரு பெரும் தொகைக்கு வாங்கியுள்ளது. இதனால் ரிலீசுக்கு முன்பே விக்ரம் படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதனிடையில் விக்ரம் படத்தின் தமிழ்நாட்டின் வினியோக உரிமையை ரெட் ஜெயின்ட் மூவிஸ் ஒரு பெரிய தொகைக்கு வாங்கியுள்ளது. முன்னதாக விக்ரம் படத்தின் வினியோக உரிமையை மதுரை அன்பு செழியன் வாங்கி இருந்ததாகவும், இடையில் ரெட் ஜெயிண்ட் மூவிஸ் களமிறங்கி விக்ரம் படத்தின் தமிழ் விநியோக உரிமையை கைப்பற்றியதாக சொல்லப்படுகிறது. ரெட் ஜெயிண்ட் மூவிஸ் தமிழில் வரும் எந்த ஒரு பெரிய படத்தையும் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வருவது பற்றி சினிமா துறையில் ஒரு சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

புதிய தொழில் நுட்பம்

புதிய தொழில் நுட்பம்

லோகேஷ் கனகராஜ் இயக்கும் விக்ரம் படம் கேங்ஸ்டர் கதையாக இருக்கும் என சொல்லப்படுகிறது. கமல்ஹாசன் நடிக்கும் படங்களில் ஏதாவது ஒரு புதிய தொழில்நுட்பத்தை அவர் கொண்டு வருவார். அதேபோல விக்ரம் படத்திலும் ஒரு புதிய தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்துள்ளார். Digital de aging என சொல்லப்படும் இந்த தொழில்நுட்பத்தை இந்தப்படத்தில் பயன்படுத்தி இருக்கிறார்கள். இதனால் கமல்ஹாசன் இளம் வயது உடையவராக காணப்படுவார். இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்திய முதல் இந்தியப் படமாக விக்ரம் இருக்கும் என சொல்லப்படுகிறது.

முழு சுதந்திரம் தந்த கமல்ஹாசன்

முழு சுதந்திரம் தந்த கமல்ஹாசன்

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ஒரு தனியார் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு திரும்பும்போது, ஒரு சேனலுக்கு அவர் அளித்த பேட்டியில் விக்ரம் படத்தை பற்றி ஒரு விஷயத்தை பகிர்ந்து கொண்டார். " விக்ரம் படம் ஆரம்பிக்கும் போதே இதை என்னுடையது ஆக்கிக் கொள்கிறேன் என கமல்ஹாசனிடம் சொன்னதாகவும், அதற்கு அவர் சம்மதித்ததாகவும், தற்போது எவ்வளவோ யோசித்துப் பார்த்தாலும் இந்த படத்தில் அவர் ஒரு சிறு குறுக்கீடு செய்ததாகவும் எனக்கு ஞாபகம் வரவில்லை எனக் கூறியுள்ளார். கமல்ஹாசனின் தீவிர ரசிகரான லோகேஷ் கனகராஜ் அவரை வைத்து ஒரு ஆக்சன் படம் எடுப்பதால் கமல் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X