லாக்டவுன்ல கமல் செய்த வேலையை பாருங்க.. தரமான சம்பவத்தை தான் செய்திருக்காரு!

கொச்சி : நடிகர் கமல்ஹாசனின் விக்ரம் படம் வரும் ஜூன் 3ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது.

இதையொட்டி படத்தின் பிரமோஷன்கள் சிறப்பான வகையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

படம் இந்திய அளவில் 5 மொழிகளில் ரிலீசாக உள்ளது. இதையொட்டி டெல்லி, கேரளா என ஒவ்வொரு மாநிலமாக சுற்றி வருகிறார் கமல்ஹாசன்.

கமலின் விக்ரம் படம்

கமலின் விக்ரம் படம்

நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ளது விக்ரம் படம். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படம் வரும் ஜூன் 3ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. இதற்கென பிரமோஷன் பணிகளில் கமல் உள்ளிட்ட படக்குழுவினர் தற்போது ஈடுபட்டு வருகின்றனர்.

இன்னும் 6 நாட்கள்

இன்னும் 6 நாட்கள்

படம் ரிலீசாக இன்னும் 6 நாட்களே உள்ள நிலையில், இதையொட்டி படக்குழுவினர் புதிய போஸ்டரையும் வெளியிட்டுள்ளது. முன்னதாக படத்தின் ஏராளமான போஸ்டர்கள், டீசர், ட்ரெயிலர், பாடல்கள் உள்ளிட்டவை வெளியாகி சிறப்பான வரவேற்பை ரசிகர்களிடையே பெற்றுள்ளது. படத்தின் ரிலீசுக்காக ரசிகர்கள் கொண்டாட்டத்துடன் காத்திருக்கின்றனர்.

 பொத்தி வைத்த சூர்யா கேரக்டர்

பொத்தி வைத்த சூர்யா கேரக்டர்

இந்தப் படம் கடந்த 1986ல் வெளியான படத்தின் அடுத்த பாகம் இல்லை என்று படக்குழுவினர் தெரிவித்து வருகின்றனர். ஆனால் அந்தப் படத்திலிருந்தே இந்தப் படத்திற்கான கரு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதேபோல சூர்யாவின் கேரக்டரை பொத்தி பொத்தி வைத்திருந்தது படக்குழு. ஆனால் எப்படியோ அந்த கேரக்டர் குறித்த தகவல் வெளியானது.

விஜய் டிவியில் விக்ரம் குழு

விஜய் டிவியில் விக்ரம் குழு

இதையடுத்து இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் இந்தத் தகவலை உறுதி செய்தார் லோகேஷ் கனகராஜ். இந்நிலையில் விஜய் டிவியிலும் பிரமோஷனுக்காக அதன் நிகழ்ச்சிகளில் கமல்ஹாசன், லோகேஷ் கனகராஜ் உள்ளிட்ட விக்ரம் படக்குழு பங்கேற்க உள்ளது. இதுகுறித்த ப்ரமோக்கள் தெறிக்கவிடப்பட்டு வருகின்றன.

கேரளாவில் கமல்

கேரளாவில் கமல்

இந்நிலையில் கேரளாவில் மலையாளத்தில் இந்தப் படம் ரிலீசாவதையொட்டி கொச்சிக்கு படக்குழு ப்ரமோஷனுக்காக சென்றது. அங்கு கமல் தன்னுடைய பிரத்யேக பேட்டியையும் அளித்துள்ளார். அதில் சூர்யா கேரக்டர் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களையும் அவர் பகிர்ந்துக் கொண்டார்.

வரப்பிரசாதமாக அமைந்த ஓடிடி

வரப்பிரசாதமாக அமைந்த ஓடிடி

இந்நிலையில், இந்த கோவிட் லாக்டவுனில் தனக்கு அதிக நேரம் கிடைத்ததாகவும் அதையடுத்து வரப்பிரசாதமாக அமைந்த ஓடிடியில் ஒருநாளைக்கு 3 முதல் 4 படங்களை தான் கண்டு களித்ததாகவும் அவர் கூறியுள்ளார். இது தனக்கு பிலிம் பெஸ்டிவலாக அமைந்ததாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

3 ஸ்கிரிப்ட்கள் ரெடி

3 ஸ்கிரிப்ட்கள் ரெடி

தொடர்ந்து பேசிய அவர், இந்த ஓய்வை பயன்படுத்தி தான் 3 ஸ்கிரிப்ட்களை தயார் செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். ஏற்கனவே சிவகார்த்திகேயன் நடிப்பில் ஒரு படத்தை ராஜ்கமல் இன்டர்நேஷனல் நிறுவனம் அறிவித்துள்ளது. தொடர்ந்து அடுத்ததாக சூர்யாவை வைத்தும் படம் திட்டமிடப்பட்டு வருகிறது. இந்நிலையில் 3 ஸ்கிரிப்ட்களை கமல் ரெடியாக வைத்துள்ளது சிறப்பானதாக பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X