திருமூர்த்தியின் இசை ஆர்வத்திற்கு உதவிய கமல்...இந்த திருமூர்த்தி யாருன்னு தெரியுதா?
சென்னை : நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் படம் உலகெங்கும் வெற்றி நடைபோட்டு வருகிறது. உலகம் முழுவதும் கிட்டதட்ட 400 கோடிகளை வசூல் செய்து, முந்தைய பல படங்களின் வசூல் சாதனையை விக்ரம் முறியடித்துள்ளது.
Recommended Video
விக்ரம் படத்தின் வெற்றிக்கு காரணமானவர்கள் ஒவ்வொருவருக்கு பரிசு வழங்கி வருகிறார் கமல். டைரக்டர் லோகேஷ் கனகராஜிற்கு காஸ்ட்லி கார், அசிஸ்டென்ட் டைரக்டர்கள் 13 பேருக்கு டிவிஎஸ் அப்பாச்சி பைக், ரோலக்ஸ் ரோலில் நடித்த சூர்யாவிற்கு ரோலக்ஸ் வாட்ச் பரிசளித்தார்.
இந்த படத்தில் சிறிய ரோலில் நடித்திருந்தாலும் டான்சர் வசந்தி பெரிய அளவில் புகழ் பெற்றுள்ளார். ஏஜன்ட் டீனா ரோலில் நடித்த இவரை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். சோஷியல் மீடியாவில் ஏஜன்ட் டீனா என்ற பெயர் செம டிரெண்டிங் ஆகி வருகிறது.

திருமூர்த்திக்கு உதவிய கமல்
விக்ரம் படத்தின் வெற்றிக்காகவும், அதை பிரபலப்படுத்தி வருபவர்களையும் தேடிப்பிடித்து பாராட்டி வருகிறார் கமல். அந்த வரிசையில் திருமூர்த்திக்கும் நடிகர் கமல்ஹாசன் பாராட்டியதுடன், உதவியும் செய்துள்ளார்.

கமலை கவர்ந்த திருமூர்த்தியின் பாடல்
விக்ரம் படத்தில் கமல்ஹாசனே எழுதி, பாடிய பத்தல பத்தல பாடல் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் வெளியாகி ரசிகர்களிடம் மிகப்பெரிய ஹிட் ஆனது. அனிருத் இசையில் உருவான இந்த பாடல் விமர்சனங்களை சந்தித்தாலும், ரசிகர்களிடம் பெரும் ஆதரவை பெற்றது.

நேரில் பாராட்டு
பார்வைத் திறன் இல்லாத மாற்றுத்திறனாளியான திருமூர்த்தி இந்தப் பாடலைப் பாடி இணையத்தில் வீடியோவாக வெளியிட்டு இருந்தார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதை பார்த்த கமல் இன்று திருமூர்த்தியை கமல்ஹாசன் நேரில் வரவழைத்துப் பாராட்டினார்.

என்ன உதவி செய்தார் கமல்
திருமூர்த்தியின் விருப்பம் இசைக்கலைஞர் ஆகவேண்டும் என்பதை தெரிந்து கொண்ட கமல்ஹாசன், அதற்கு உரிய திறன்களை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று திருமூர்த்திக்கு ஆலோசனை வழங்கினார். அத்தோடு விடாமல் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானிடம் பேசி உள்ளார்.
கமல்ஹாசனின் கோரிக்கையை ஏற்று திருமூர்த்தியை தனது KM Music Conservatory இசைப்பள்ளியில் சேர்த்துகொள்வதாக ரஹ்மான் உறுதியளித்துள்ளார். திருமூர்த்தி இசை கற்றுக்கொள்வதற்கான முழுச் செலவையும் தானே ஏற்றுக்கொள்கிறேன் என கமல் அறிவித்துள்ளார்.

திருமூர்த்தியை யாருன்னு தெரியுதா
இந்த திருமூர்த்தி மீடியாக்களில் பேசப்படுவது இது முதல் முறையல்ல. இதற்கு முன்பு அஜித்தின் விஸ்வாசம் படத்தில் வரும் கண்ணான கண்ணே பாடலை பாடிய வீடியோ செம வைரலானது. அதை பார்த்து விட்டு, திருமூர்த்தியின் குரல் வளத்தை படத்தின் இசையமைப்பாளரான டி.இமான் பாராட்டினார்.

அட...அவரா இவர்
தான் இசையமைக்கும் ஒரு படத்தில் திருமூர்த்தியை பாட வைக்கவும் இமான் ஏற்பாடு செய்து வருகிறார். இசையமைப்பாளர் இமானுடன் திருமூர்த்தியை பலரும் பார்த்துக் கூடும். இமானால் உலகிற்கு அடையாளம் காட்டப்பட்ட திருமூர்த்தி, இன்று கமல்ஹாசனால் வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கு உயர்ந்ததுடன், இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் அறிமுகத்தை பெற்றுள்ளார்.


Click it and Unblock the Notifications











