ஓடாத இந்தியன் 2! ரஜினியை அட்டாக் செய்து வசனம்? கமலுக்கு எதுக்கு இந்த வீண் வேலை?
சென்னை: 2024ஆம் ஆண்டின் முதல் பாதி ஆறு மாதங்களில் மிகப்பெரிய நடிகர்களின் படங்கள் எதுவும் ரிலீஸ் ஆகவில்லை. இரண்டாம் பாதி ஆறு மாதங்களில் கமல்ஹாசனின் இந்தியன் 2, தனுஷின் ராயன், சூர்யாவின் கங்குவா, விக்ரமின் தங்கலான், ரஜினிகாந்த்தின் வேட்டையன், அஜித்குமாரின் விடாமுயற்சி, விஜய்யின் தி கோட் ஆகிய படங்கள் ரிலீஸ் ஆகவுள்ளது என ஏற்கனவே தகவல்கள் வெளியாகியது.
இதில் உலகநாயகன் கமல்ஹாசனின் இந்தியன் 2 படம் கடந்த ஜூலை 12ஆம் தேதி ரிலீஸ் ஆனது. இந்த படத்திற்கு மக்கள் மத்தியில் படக்குழு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை. இந்த படம் முதல் ஐந்து நாட்களில் ரூபாய் 65 கோடிகளை மட்டுமே வசூல் செய்துள்ளது. இந்த படத்தினை 1996ஆம் ஆண்டு வெளியான இந்தியன் படத்தின் நீட்சியாக படக்குழு உருவாக்கியுள்ளது.

படத்தின் தயாரிப்புக்காக மட்டும் லைகா நிறுவனம் ரூபாய் 250 கோடிகளை செலவு செய்தது. படப்பிடிப்பின்போது கிரேன் விழுந்து மூன்று பேர் உயிரிழந்தனர். இது மட்டும் இல்லாமல் லைகாவுக்கும் ஷங்கருக்கும் பிரச்னை ஏற்பட்டு கோர்ட்டில் வழக்கே நடைபெற்றது. கொரோனா ஊரடங்கு காலமான 2018ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட படம் 2024ஆம் ஆண்டுதான் ரிலீஸ் ஆகியுள்ளது.
படத்திற்கு மக்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பினை லைகா நிறுவனம் ஏற்படுத்தி இருந்தது. இதனால் படம் நிச்சயம் மிகப்பெரிய ஹிட் படமாக அமையும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் படம் ரிலீஸ் ஆகி கலவையான விமர்சனங்களைப் பெற்றதால், படத்தின் வசூல் அப்படியே சுருங்கிவிட்டது.
ரீ எடிட்: படத்தின் தோல்விக்கு மிகவும் முக்கியமான காரணமாக கூறப்படுவது, படத்தின் திரைக்கதையும் படத்தின் நீளமும்தான். படத்தின் திரைக்கதையைப் பொறுத்தவரையில் ஒரு டெம்ப்ளேட் காட்சியை நான்கு முறை எடுத்துள்ளார். இது ரசிகர்களுக்கு சலிப்பை ஏற்படுத்துகின்றது. அதேபோல் படத்திற்கு தேவைப்படாத காட்சிகள் பல இடம்பெற்றதால் ரசிகர்களின் எதிர்பார்ப்பை இந்தியன் 2 படத்தினால் பூர்த்தி செய்ய முடியவில்லை. தற்போது 15 நிமிடங்கள் ட்ரிம் செய்யப்பட்டு திரையிடப்படுகின்றது.

தாக்கப்பட்டாரா ரஜினி? இந்நிலையில் படத்தில் இடம் பெற்றுள்ள ஒரு காட்சியில் பேசப்படும் வசனம் ரஜினியை குறிவைத்து பேசப்பட்ட வசனமாக கூறப்படுகின்றது. அதாவது, ஒரு காட்சியில் கமல், சிஸ்டம் சரியில்லைனு வீட்டுக்குள்ளையே உட்காந்துட்டு இருந்தா சிஸ்டம் எப்படி சரியாகும்? அதை நாம்தான் இறங்கி சரி செய்யவேண்டும் என பொருள்படும் படியான வசனத்தினை பேசியிருப்பார்.
கட்சி தொடங்காத ரஜினி: இந்த வசனத்தை கமல் தான் அரசியலுக்கு வந்து, மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியைத் தொடங்கிவிட்டார் எனவும், ரஜினிகாந்த சிஸ்டம் சரியில்லைக் எனக் கூறிவிட்டு, அரசியல் கட்சி தொடங்குவதாக அறிவித்துவிட்டு கட்சி தொடங்காமல் பின்வாங்கிவிட்டார் என்பதை சுட்டிக்காட்டும் விதமாக அமைக்கப்பட்ட காட்சி எனவும் கூறப்படுகின்றது. இதனால் இந்தியன் 2 படத்தினை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரசிகர்கள் இணையதளத்தில் திட்டித் தீர்த்து வருகின்றனர் என்ற பேச்சுகளும் அடிபடுகின்றது.
எச்சரித்த கமல்: இந்தியன் 2 முதலில் படத்தினை மூன்று பாகங்களாக எடுப்பதில் கமல்ஹாசனுக்கு விருப்பமே இல்லையாம். மூன்று பாகங்களாக படத்தினை டெவலப் செய்யலாம் என கமலிடம் கூறியபோது, கமல் வேண்டாம் எனக் கூறியதாகவும், என்னிடம் நீங்கள் கூறிய இந்தியன் 2 படத்தினையே கதையாக எடுத்துக் கொடுங்கள் போதும் எனவும் கூறியுள்ளார். ஆனால் ஷங்கரோ முடியாது என மறுத்துவிட்டதாக பேச்சுகள் அடிபடுகின்றது.

முடியாத பஞ்சாயத்து: அதேபோல், படத்தின் எடிட்டரும் படம் நாம் ஏற்படுத்திய பில்டப்புக்கு இல்லை எனவும், ஏற்கனவே வெளியான இந்தியன் படத்தின் ரசிகர்களை இந்த படம் திருப்தி படுத்தாது எனவும் லைகாவிடம் கூறியதாக கூறப்படுகின்றது. படத்தின் பின்னணி இசை அமைக்கப்பட்டபோது படத்தினைப் பார்த்த அனிருத், இந்த படம் தேராது என லைகாவிடம் கூறியதாக கூறப்படுகின்றது. லைகாவும் கமல் ஹாசனும் ஷங்கரிடம் எவ்வளவோ பேசியும், ஷங்கர் ஒப்புக்கொள்ளவே இல்லை என கூறப்படுகின்றது. மேலும் ஒரு கட்டத்தில் ஷங்கர் கூறுகின்றார் என்பதற்காகவே அவரை நம்பி மூன்றாம் பாகத்திற்கு ஒப்புக்கொண்டனர் எனவும், இந்தியன் 2 படத்தினை ரிலீஸ் செய்யலாம் எனவும் லைகா முடிவெடுத்ததாக கூறப்படுகின்றது.


Click it and Unblock the Notifications











