Don't Miss!
- Finance
சுத்தி சுத்தி அடிவாங்கும் அதானி.. சிட்டி குரூப் வைத்த செக்..!
- Technology
BSNL தரும் இந்த சலுகையை இந்தியாவில் வேறு யாருமே தரவில்லை.! மலிவு விலையில் 1 வருட 1 டைம் ரீசார்ஜ்.!
- Automobiles
அம்பானியாவே இருந்தாலும் யோசிச்சுதான் இனி சொகுசு காரை வாங்கணும்! அந்தமாதிரி செக் நிர்மலா சீதாராமன் வச்சிட்டாங்க
- News
இரட்டை இலை சின்னம் கேட்டால் கையெழுத்து போடுவேன்..சசிகலாவை சந்திப்பேன்..ஓ.பன்னீர் செல்வம் உறுதி
- Lifestyle
விபரீத ராஜயோகத்தால் பிப்ரவரியில் பண மழையில் நனையப் போகும் ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா?
- Sports
பாகிஸ்தானுக்காக நான் எவ்வளவு செய்தேன்.. என்னை இப்படியா நடத்துவீங்க. இந்தியாவை பாருங்க -உமர் அக்மல்
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
கேன்ஸ் திரைப்பட விழாவில் மாதவனை வெட்கப்பட வைத்த கமல்... ஏன் தெரியுமா?
சென்னை: நடிகர் மாதவன் நடிப்பில் கடைசியாக வந்த திரைப்படம் மாறா. தற்சமயம் ராக்கெட்ரி என்கிற திரைப்படத்தை எழுதி, தயாரித்து, இயக்கி, நடித்துள்ளார். படத்தில் பாடலாசிரியராகவும் பணியாற்றியுள்ளார்.
Recommended Video
முதன் முதலாக இயக்குநராக அறிமுகமாகும் இந்தப் படத்தை தமிழ், இந்தி மற்றும் ஆங்கிலம் என மூன்று மொழிகளில் உருவாக்கியுள்ளார். வரும் ஜூலை ஒன்றாம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது
இத்திரைப்படத்தை புரமோட் செய்யும் விதமாக பல பேட்டிகள், மேக்கிங் வீடியோக்கள், சர்சைக்குரிய கருத்துகள், திரைப்பட ஃபெஸ்டிவல் என ரவுண்டு கட்டி வேலை செய்து கொண்டிருக்கிறார் மாதவன்.
என்னது!
ரகுமானுக்கு
காதல்
கடிதங்கள்
வந்துச்சா...
அத
யார்
கிழிச்சு
போட்டா
தெரியுமா?

ராக்கெட்ரி
ISRO-வில் பணிபுரிந்த நம்பி நாராயணன் என்ற இந்தியன் ஏரோ ஸ்பேஸ் இஞ்சினியரின் வாழ்க்கை வரலாற்றைத்தான் ராக்கெட்ரி என்கிற திரைப்படமாக உருவாக்கியுள்ளார் மாதவன். அந்தப் பதவியில் இருந்தபோது உளவு பார்த்ததாக போலியான வழக்கில் சிக்கி, பின்னர் சட்டப் போராட்டத்தின் மூலம் தான் நிரபராதி என்று நிரூபித்தவர்தான் நம்பி.

புரமோஷன்
சமீபத்தில் இந்தப் படம் தொடர்பான ஒரு நிகழ்வில் பேசுகையில், பஞ்சாங்கம் பார்த்துதான் ISRO தனது செயற்கைக் கோளை செவ்வாய்க்கு அனுப்பியது என்று ஒரு கருத்தை தெரிவித்திருந்தார். அதைக் கேள்விப்பட்ட விவரம் தெரிந்தவர்கள், மாதவனை இணையதளத்தில் வைத்து செய்துவிட்டார்கள். அதனை தொடர்ந்து தவறுதலாக சொல்லிவிட்டேன் என்று மாதவன் தனது கருத்தை பின் வாங்கிக் கொண்டார்.

சூர்யா ஷாரூக் கான்
இந்தப் படத்தில் ஷாரூக் கான் மற்றும் சூர்யா சம்பளம் வாங்காமல் சிறப்பு கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். முதன் முதலாக சூர்யா அந்த சூட்டிங் ஸ்பாட்டிற்கு சென்ற பொழுது மாதவன் வயதான வேடத்தில் மேக்கப் அணிந்திருந்தார். அதைப் பார்த்து சூர்யா வாயடைத்து நின்றுவிட்டார். அப்போது எடுக்கப்பட்ட மேக்கிங் வீடியோ இப்போது படத்தின் புரமோஷனாக வெளியாகியுள்ளது.

கமல் பக்தன்
சமீபத்தில் நடந்த கேன்ஸ் திரைப்பட விழாவில் நடிகர் கமலை சந்தித்த மாதவன் தனது படத்தின் டிரைலரை போட்டுக் காண்பித்துள்ளார். அதைப் பார்த்தவுடன் மிகவும் நன்றாக இருக்கிறது, நீதான் இயக்கினாயா என்று கமல் ஆச்சர்யமாக கேட்டதாகவும், தான் வெட்கப்பட்டு ஆம் என்று கூறியதாகவும் மாதவன் தெரிவித்துள்ளார். அது மட்டுமின்றி கமல் சாரை நான் நண்பன் என்றெல்லாம் சொல்லிவிட முடியாது. நான் அவருடைய பக்தன் என்றும் சமீபத்தில் வெளிவந்த விக்ரம் திரைப்படம் வெற்றி பெற்றது தனக்கு மிகப் பெரிய மகிழ்ச்சி என்றும் கூறியுள்ளார்.