Thug Life: அபிராமிக்கு உதட்டு முத்தம்.. விருமாண்டியிலேயே ரிகர்சல் பார்த்துவிட்டேன்.. கமல்ஹாசன் பளீச்

சென்னை: மணி ரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, த்ரிஷா, அபிராமி, நாசர், ஜோஜு ஜார்ஜ், அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி, வடிவுக்கரசி உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகியுள்ள படம் தக் லைஃப். இந்த படத்தை கமல்ஹாசனின் ராஜ் கமல் நிறுவனமும் மணி ரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது. படம் வரும் ஜூன் 5ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் படத்தின் புரோமோசன் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது.

படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை மறுநாள் அதாவது மே மாதம் 24ஆம் தேதி சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறவுள்ளது. இதற்கான பணிகளும் நடைபெற்று வருகிறது. படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். இது மட்டும் இல்லாமல், படத்தில் இருந்து இதுவரை இரண்டு பாடல்கள் வெளியிடப்பட்டுள்ளது. அதாவது, ஜிங்குச்சா மற்றும் சுகர் பேபி பாடல்கள் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. இரண்டு பாடல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

Kamalhaasan Relates lip kiss with Actress Abirami Thug Life And Virumaandi

அதேபோல், படத்தின் டிரைலர் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. டிரைலர் இதுவரை 40 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களைக் கடந்துள்ளது என படக்குழு தெரிவித்துள்ளது. டிரைலரில் கமல்ஹாசன், அபிராமிக்கு உதட்டு முத்தம் கொடுக்கும் காட்சி இடம் பெற்றுள்ளது. இது அனைவருக்கும் சர்ப்ரைஸாக இருந்தது. இப்படியான நிலையில், அண்மையில் படக்குழு படத்தின் புரோமோசனுக்காக அளித்த பேட்டியில் இது தொடர்பான கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு கமல்ஹாசன் தனது பாணியில் பதில் அளித்துள்ளார்.

Kamalhaasan Relates lip kiss with Actress Abirami Thug Life And Virumaandi

உதட்டு முத்தம்: அதாவது, படக்குழுவை பிரபல நடிகர் யூகி சேது பேட்டியெடுத்தார். அப்போது அவர், " படத்தின் டிரைலரில் நான் பார்த்து வியந்த விஷயம், கமல் ஹாசனும் நீங்களும் ( அபிராமி) முகத்திற்கு முகம் வைத்து பேசிக் கொள்கிறீர்கள். த்ரிஷாவுக்கு கூட பின்னால் இருந்துதான் முத்தம் கிடைத்தது. ஆனால் உங்களுக்கு உதட்டிலேயே முத்தம் கொடுத்துவிட்டாரே என்று கேள்வி எழுப்பினார். இந்த கேள்வியை மொத்த படக்குழுவும் சிரித்துக் கொண்டே எதிர் கொண்டது. இதற்கு பதில் அளித்த கமல்ஹாசன், " இதெல்லாம் நாங்கள் விருமாண்டியிலேயே ரிகர்சல் பார்த்துவிட்டோம், விடுங்க சார்" என்று சிரித்துக் கொண்டே பதில் அளித்தார்.

விருமாண்டி முத்தம்: இவரது இந்த பதில் தற்போது இணையவாசிகள் மத்தியில் வேகமாக பரவி வருகிறது. தமிழ் சினிமாவில் முத்தத்திற்கு பெயர் பெற்ற நடிகர் என்று 80களில் இருந்தே கூறப்படுபவர் கமல்ஹாசன். அதேபோல் கடந்த 2004ஆம் ஆண்டு வெளியான விருமாண்டி படத்தில் கமல்ஹாசனும் அபிராமியும் நடித்திருப்பார்கள். அந்த படத்திலும் இருவரும் உதட்டு முத்தம் கொடுத்துக் கொள்வார்கள். மொத்த படமுமே அட்டகாசமான திரைக்கதைக்கு எடுத்துக்காட்டு. மேலும் படத்தில் நடித்திருக்கும் ஒவ்வொருவரும் அழுத்தம் திருத்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்கள். அதில் அபிராமியும் கமல்ஹாசனும் முத்தமிட்டுக் கொள்ளும் காட்சியும், அப்போது அவர்கள் பேசிக் கொள்வதும் மிகவும் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டிருக்கும்.

Kamalhaasan Relates lip kiss with Actress Abirami Thug Life And Virumaandi

ஹேப்பி எண்டிங்: இந்நிலையில், தல் லைஃப் படத்திலும் இருவரும் உதட்டு முத்தமிட்டுக் கொள்வதால் ரசிகர்கள் செம எதிர்பார்ப்போடு படத்திற்காக காத்துக் கொண்டு இருக்கிறார்கள் என்று கூறலாம். மேலும் விருமாண்டி படத்தில் தான் இருவரும் ஜோடி சேர்ந்து வாழவில்லை. இந்த படத்திலாவது ஹேப்பி எண்டிங் இருக்குமா என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X