கமல்ஹாசனோட பொண்ணுதானே இது! - டெங்கு விழிப்புணர்வு விளம்பரம்

By Vignesh Selvaraj

சென்னை : தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் தீவிரமாகப் பரவி வருகிறது. டெங்கு காய்ச்சலால், அதிகமாக சிறு குழந்தைகள் பரிதாபமாகப் பலியாகி வருகின்றனர்.

டெங்கு விழிப்புணர்வில் அரசுடன் சேர்ந்து பொதுமக்களும், தொண்டு நிறுவனங்களும் தங்கள் பங்கிற்கு விழிப்புணர்வுப் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

சுகாதார அமைச்சகம் டெங்குக் காய்ச்சலால் ஏற்படும் உயிரிழப்புகளைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் அறிவுறுத்திவருகிறது.

டெங்கு விளம்பரம்

டெங்கு கொசு எதனால் உருவாகிறது, எந்த இடங்களில் டெங்கு கொசு பரவும் என மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் ஒளிபரப்பாகும் விளம்பரப் படத்தில் பிக்பாஸ் சுஜா நடித்திருக்கிறார். இந்த விளம்பரம் தற்போது தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வருகிறது.

கமல்ஹாசனின் மகள்

கமல்ஹாசனின் மகள்

பிக்பாஸ் நிகழ்ச்சியின்போது, சுஜாவை தன் மகளாக நினைப்பதாக குறிப்பிட்டார் நிகழ்ச்சியை நடத்திய கமல்ஹாசன். அப்பாவாக ஒரு நாள் வீட்டுக்கு வருவேன் எனவும் அப்போது சுஜாவிடம் கூறியிருந்தார் கமல். கமல்ஹாசன் சில வருடங்களுக்கு முன்பு எய்ட்ஸ் விழிப்ப்புணர்வு விளம்பரங்களில் நடித்தார். பிக்பாஸ் சுஜா தற்போது டெங்கு விழிப்புணர்வு விளம்பரத்தில் நடித்திருக்கிறார்.

பிக்பாஸ் குரல்

'ஒரு மாசத்துக்கு மேல தொடர்ந்து பிக்பாஸ்ல உங்களோட சொந்தக் குரலை கேட்டுட்டு டப்பிங் குரலில் நீங்க நடிச்சிருக்கிறது சீனோடு sync ஆகமாட்டேங்குது!' என ஒரு வலைப்பதிவர் கமென்ட் செய்திருக்கிறார்.

நிலவேம்பு கஷாயம்

'என்னது அரசு மருத்துவமனைக்கு போகணுமா? விழிப்புணர்வு என்ற பெயரில் கிறுக்குத்தனம். நிலவேம்பு கஷாயம் தேவையில்லை என்று சொல்றீங்களா?' என அரசு வெளியிட்டிருக்கும் விளம்பரத்திற்கு ஒருவர் ஆட்சேபனை தெரிவித்திருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X